Latest Updates
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும்
லட்சுமி நாராயண யோகத்தால் டிசம்பர் கடைசியில் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கஷ்டப்படுவாங்க...
டிசம்பர் 29 அன்று மகர ராசியில் புதன், சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையால் மகர ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இது ஒரு சுப யோகம்.
கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி நிகழும் கிரக மாற்றங்களால் அனைத்து ராசிகளிலுமே அதன் தாக்கம் இருக்கும். சில நேரங்களில் கிரக பெயர்ச்சிகளால் யோகங்களும் உருவாகும். சுப யோகமாக இருந்தால் நற்பலன்களும், அசுப யோகங்களாக இருந்தால் கெடு பலன்களும் கிடைக்கும். அந்த வகையில் டிசம்பர் 28 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து சுக்கிரன் டிசம்பர் 29 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். இதனால் டிசம்பர் 29 அன்று மகர ராசியில் புதன், சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையால் மகர ராசியில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இது ஒரு சுப யோகம்.

கிரக சேர்க்கைகள் நற்பலனை வழங்கினால் அதை யோகம் என்பார்கள். அதுவே கெடுபலனை வழங்கினால், அதை தோஷம் என்பார்கள். ஆனால் இந்த லட்சுமி நாராயண யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு கெடு பலன்கள் கிடைக்கவுள்ளது. நற்பலன்களை தெரிந்து கொள்வதை விட கெடுபலன்களை தெரிந்து கொண்டால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா? இப்போது மகர ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் நிறைய பண பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
புதன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பணிகளில் பல தடைகளை சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் லாபம் சற்று குறையும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கடகம்
டிசம்பர் கடைசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் கடக ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். குறிப்பாக பண விஷயத்தில் மாட்டிக் கொள்வார்கள். எதிர்பாராத செலவுகளால் பணத்தை சேமிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். கூட்டு தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் பிரச்சனையால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் திடீர் செலவுகளை சந்திப்பார்கள். லட்சுமியின் அருள் தனுசு ராசிக்காரர்களுக்கு இருப்பதால், வருமானம் அதிகரித்தாலும், செலவுகளும் அதற்கு ஏற்ப அதிகம் இருக்கும். பணியிடத்தில் சம்பள உயர்வை எதிர்பார்த்திருந்தால், அது கிடைக்காது. வியாபாரிகள் இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications