For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்?

திருமகள் எனப்படும் மகாலட்சுமி எவரிடத்திலும் நிலையாக தங்குவதில்லை. ஒருவர் செய்யும் பூர்வ புண்ணியத்தின் மூலம் செல்வத்திற்கு அதிபதியாகவோ, வறுமை சூழ்ந்தவராகவோ இருக்கின்றனர். செல்வம் மூன்று வகைகளில் வரும்.

|

செல்வத்திற்கு அதிபதி அன்னை மகாலட்சுமி. அந்த மகாலட்சுமியின் அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவரே செல்வத்திற்கு அதிபதியாக திகழ்கிறார். மகாலட்சுமி யாரிடமும் நிலையாக தங்குவதில்லை. ஒருவர் காலம் காலமாக செல்வந்தர்களாகவே இருப்பார்கள். அதே நேரம் சிலரோ சில காலம் செல்வந்தர்களாக இருந்தாலும் திடீரென செல்வத்தை இழந்து வறுமையில் வாடுகிறார்கள்.

திருமகள் ஏன் எப்போதும் ஓரிடத்தில் நிலைத்திருப்பதில்லை என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. அதிகமாக கோபமும், பொறாமையும், தற்புகழ்ச்சியும் கொண்டவர்களிடம் செல்வம் நிலைப்பதில்லை. அதே போல வஞ்சக எண்ணம் கொண்டவர்களிடமும், கருமிகள், சூதாடிகள், பிறன்மனை நோக்குபவர்களின் வீடுகளிலும் செல்வம் தங்குவதில்லை. செல்வம் மூன்று வகைகளில் வரும் செல்வம் வரும் மூன்று வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Lakshmi, Gubera And Indira Wealth

மகாலட்சுமியின் அருள் கிடைக்க நாம் நம்முடைய வீட்டில் சில செயல்களை செய்யலாம் செய்யக்கூடாது. நம்முடைய வீட்டில் வடகிழக்கு மூலையில் நெல்லிமரம், வில்வமரம் வளர்க்கலாம். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் உப்பு வாங்கலாம் செல்வம் பெருகும்.

MOST READ: 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா!

நமக்கு செல்வம் எப்படி வரும் அந்த செல்வம் எப்படி பெருகும் என்று பார்க்கலாம். லட்சுமி செல்வம், குபேர செல்வம், இந்திர செல்வம் என மூன்று வகையான செல்வங்கள் ஒருவருக்கு கிடைக்கும். அந்த செல்வம் நிலைத்து நிற்பது ஒருவரின் முன் ஜென்ம பயனால்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாலட்சுமி அளித்த செல்வம்

மகாலட்சுமி அளித்த செல்வம்

அமிர்தம் வேண்டி பாற்கடலை கடைந்த போது சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் மகாவிஷ்ணுவின் மனைவியாவாள். இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள். மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள்.

மகாலட்சுமியின் அருள்

மகாலட்சுமியின் அருள்

இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும். லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும்.

குபேரன் கொடுத்த செல்வம்

குபேரன் கொடுத்த செல்வம்

குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.

திடீர் அதிர்ஷ்டங்கள்

திடீர் அதிர்ஷ்டங்கள்

குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.

மூன்று தலைமுறை செல்வம்

மூன்று தலைமுறை செல்வம்

இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.

இந்திர செல்வம்

இந்திர செல்வம்

போகி என்ற பண்டிகையை இந்திரனை முன் வைத்தே கொண்டாடுகிறோம். கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரன், தேவர்களின் தலைவனும் கூட, இந்திரனைப் பிரார்த்திப்பவர்கள் வெகு சிலரே. பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை இந்திர சம்பத்தின் அடையாளங்கள். இந்திரன் அருளால் அடையும் ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்.

செல்வம் நீடிக்க என்ன செய்வது?

செல்வம் நீடிக்க என்ன செய்வது?

பொதுவாக நாம் அனைவரும் பணத்தை இரும்பு பெட்டியில் தான் வைப்போம். ஆனால் அப்படி வைப்பது தவறு. இரும்புப் பெட்டியில் பணம் வைப்பவர்களாக இருந்தால் அதை ஒரு துணிப்பையில் சுற்றித் தான் வைக்க வேண்டும். அந்தப் துணிப்பை மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ இருந்தால் இன்னும் சிறந்தது. அந்த காலத்தில் நமது தாத்தாக்கள் எல்லாம் மஞ்சள் பையில் தான் பணத்தை வைத்திருப்பார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. நீங்கள் பணம் வைத்திருக்கும் அந்த இடத்தில் பணத்தை தவிர மற்ற பொருட்களை வைக்கக்கூடாது. அதாவது முக்கியமான ரசீதுகள் இருந்தால் சிலர் அதை பணம் வைக்கும் இடத்தில் வைப்பவர்களாக இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது.

பணம் சேரும்

பணம் சேரும்

நீங்கள் பணம் வைத்துள்ள இடத்தில் சிறிய கண்ணாடி, சந்தன கட்டை, உப்பு, பச்சை கற்பூரம், குங்குமம் இது போன்ற பொருட்களை வைப்பது நேர்மறை ஆற்றலை உண்டாக்கி பணத்தை தக்கவைத்துக் கொள்ளும். முடித்தால் ஒரு தேக்கு மரகட்டையும் வைத்துக் கொள்ளலாம். தேக்குக் கட்டயானது பணத்தை தேக்கி வைக்கும் என்று கூறுவார்கள். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாசனையுள்ள மலர்களை பணம் வைக்கும் இடத்தில் வைத்து, தூபம் காட்டுவது பணவரவை அதிகரித்து வீண் விரயம் ஆகாமல் சேமிக்கவும் இது நல்ல பலனை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lakshmi, Gubera And Indira Wealth

The Goddess of Wealth provider of everything you need! For most, Lakshmi is associated with Goddess of Wealth, Money, Prosperity.This article tells the tales of Kubera or Kuvera - the half brother of Ravana and also the God of wealth. Praise of Mata Lakshmi which was spoken by Lord Indra, is the source of all affluence.
Story first published: Monday, January 27, 2020, 16:43 [IST]
Desktop Bottom Promotion