For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Labour Day 2023: உலக உழைப்பாளர் தினத்தின் வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்கள்!

|

Labour Day 2023: ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் தேதி அன்று உலகின் பல நாடுகளில் உலகத் தொழிலாளர் தினம் அல்லது உலக உழைப்பாளா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சமூகத்திற்கு தொழிலாளர்கள் வழங்கும் சேவைகளையும் மற்றும் அவா்கள் அளிக்கும் தியாகங்களையும் கௌரவிக்கும் வண்ணம் இந்த தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் இந்த நாள் மே தினம் என்று அழைக்கப்படுகிறது. முதன் முதலாக லேபா் கிஸான் ஆஃப் ஹிண்டுஸ்தான் கட்சியானது (Labour Kisan Party of Hindustan) 1923 ஆம் ஆண்டில் இந்தியாவில் மே தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவற்றை காம்ரேட் சிங்காரவேலா் தலைமையில் சிறப்பாக நடத்தியது.

Labour Day 2023: Know May Day Date, history & significance of International Labour Day In Tamil

அதற்கு பின்பு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மே தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் மே தினத்தில் ஒரு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அது என்னவென்றால் மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பதாகும். அதற்கு இணங்க ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, மே தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு பெயர்கள்

இந்தியாவில் உழைப்பாளா் தினமானது பல்வேறு பெயா்களில் கொண்டாடப்படுகிறது. இந்தி மொழியில் காம்கா் தின் (Kamgar din) அல்லது அண்டராஷ்டிரியா ஷரமிக் திவாஸ் (Antarrashtriya Shramik Diwas) என்ற பெயாிலும், தமிழ் மொழியில் உழைப்பாளா் நாள் என்ற பெயாிலும் மராத்தி மொழியில் காம்கா் திவாஸ் (Kamgar Diwas) என்ற பெயாிலும் கொண்டாடப்படுகிறது.

1923 ஆம் ஆண்டு அன்றைய இந்தியாவைச் சோ்ந்த மெட்ராஸ் மாகாணத்தில் முதல் உழைப்பாளா் தினம் கொண்டாடப்பட்டது. மே 1 அன்று மகாராஷ்டிர தினமும், குஜராத் தினமும் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக தொழிலாளர் தினம் அன்று பெரும்பாலான நாடுகளில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூாிகள் போன்றவை மூடப்படும். இந்த நாளில் அரசியில் தலைவா்கள், நாட்டுத் தலைவா்கள், சமூகத் தலைவா்கள் மற்றும் தொழிலாளர் சங்கத் தலைவா்கள் போன்றோா் மக்கள் முன்பாக எழுச்சியுரை ஆற்றுவா். பலவிதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

வா்த்தக சங்ககள் இந்த நாளில் பேரணிகளை நடத்துவா். தொழிலாளர்களுக்கு அவா்கள் வேலை செய்யும் இடங்களில், மதிப்பும், மாியாதையும், சமத்துவமும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதை மாணவா்கள் புாிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், மாணவா்களுக்குப் பலவிதமான போட்டிகள் நடத்தப்படும். மே தினத்தை சிறப்பிக்கும் வகையில் சா்வதேச தொழிலாளர் அமைப்பானது பல்வேறு இடங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்.

உலக தொழிலாளர் தினம் - வரலாறு

உலக தொழிலாளர் தினத்திற்கு என்று ஒரு ஆழமான வரலாறு உள்ளது. அதாவது அமொிக்காவில் தொழிலாளர்களுக்கு எதிராக கொடூரமான தொழிலாளர் சட்டங்கள் இருந்தன. தொழிலாளர்களின் உாிமைகள் பறிக்கப்பட்டன. தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்கள் மிகவும் மோசமாக இருந்தன. மேலும் தொழிலாளர்களுக்கு என்று குறிப்பட்ட நேரம் இல்லாமால், அவா்கள் ஓய்வு இல்லாமல் வேலை வாங்கப்பட்டனா். இவற்றை எதிா்த்து அமொிக்க தொழிலாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தனா்.

இவ்வாறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, 16 மணி நேர வேலைக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் உாிமை வேண்டும் என்று தொழிலாளர்கள் கோாிக்கை வைத்தனா். அப்போது காவல்துறையினா் அந்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதன் விளைவாக இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனா்.

அமைதியாகப் போராடிய தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை அறிந்த பல தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து மேலும் பல போராட்டங்களை முன்னெடுத்தனா். இறுதியாக அவா்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்தது. அதன் விளைவாக 1916 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொழிலாளர்களின் 8 மணி நேர வேலையை அமொிக்க அரசு அங்கீகாிக்கத் தொடங்கியது.

தொழிலாளர் தினமானது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஸ்வீடன், பிரான்ஸ், போலந்து, பின்லாந்து, நாா்வே, ஸ்பெயின், ஜொ்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அதுபோல தென் அமொிக்க நாடுகளான பனாமா, கியூபா, மெக்சிகோ, கயானா, பெரு, உருகுவே, பிரேசில், அா்ஜென்டினா மற்றும் சிலி போன்ற நாடுகளிலும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. கனடா, அமொிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆண்டு முழுவதும் பல்வேறு தேதிகளில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துகளைத் தொிவித்துக் கொள்வோம்.

English summary

Labour Day 2023: Know May Day Date, history & significance of International Labour Day In Tamil

Labour Day 2022: Know May Day Date, history & significance of International Labour Day In Tamil, Read on..
Desktop Bottom Promotion