For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? அப்ப கிருஷ்ண ஜெயந்தி அன்று இத செய்யுங்க...

அன்னை லட்சுமி தேவி மற்றும் கிருஷ்ணரின் ஆசியைப் பெற கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

|

விஷ்ணு பகவானின் எட்டாவது அவதாரம் தான் கிருஷ்ணர். இவர் உலகில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட பிறந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த நாள் தான் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியில் பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

Krishna Janmashtami: Do These Upay For Prosperity And Wealth

ஏனெனில் அஷ்டமி திதியானது 18 ஆம் தேதி நள்ளிரவு 1.49 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நள்ளிரவு 2.47 மணிக்கு முடிவடைகிறது. ஆகவே பலரும் உதய திதியை முன்னிட்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடவுள்ளனர். இன்னும் சிலர் அஷ்டமி திதிக்கு முன்னுரிமை அளித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதியே கொண்டாடினார்கள். அன்னை லட்சுமி தேவி மற்றும் கிருஷ்ணரின் ஆசியைப் பெற கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் நிற மாலை

மஞ்சள் நிற மாலை

கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்த பின்னர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று கிருஷ்ணருக்கு மஞ்சள் நிற மலர் மாலையை வாங்கி அணிவியுங்கள். இப்படி செய்வதன் மூலம் கிருஷ்ணரின் அருளைப் பெறுவதோடு, பணம் வருவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

வலம்புரி சங்கு நீர்

வலம்புரி சங்கு நீர்

உங்களின் ஆசைகள் நிறைவேற வேண்டுமா? அப்படியென்றால் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று வலம்புரி சங்கில் நீரை நிரப்பி கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதோடு பெயரும் புகழும் பெருகும்.

வெள்ளை நிற இனிப்புகள்

வெள்ளை நிற இனிப்புகள்

உங்கள் தொழிலில் வளர்ச்சியைக் காண வேண்டுமெனில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் 7 பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு பாயாசம் அல்லது வெள்ளை நிற இனிப்புக்களைக் கொடுங்கள். அதன் பின் ஐந்து வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இம்மாதிரி செய்யுங்கள். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, முன்னேற்றமும் ஏற்படும். மேலும் உங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.

குங்கும பால் அபிஷேகம்

குங்கும பால் அபிஷேகம்

கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளன்று இரவு 12 மணிக்கு குங்குமம் கலந்த பாலால் கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும்.

பசு அல்லது கன்று சிலை

பசு அல்லது கன்று சிலை

உங்களுக்கு கிருஷ்ணர் போன்ற அழகான குழந்தை வேண்டுமா? அப்படியென்றால் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் குழந்தை வடிவத்தை வணங்குங்கள். மேலும் இந்நாளில் பசு அல்லது கன்று சிலையை வாங்கி வீட்டிற்கு கொண்டு வாருங்கள். இப்படி செய்வதன் மூலம் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Krishna Janmashtami: Do These Remedies For Prosperity And Wealth In Tamil

Krishna Janmashtami 2022: do these upay for prosperity and wealth during krishna jayanthi. Read on...
Story first published: Friday, August 19, 2022, 9:41 [IST]
Desktop Bottom Promotion