For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு இத செய்யுங்க.. உடனே சரியாயிடும்...

பகவான் கிருஷ்ணரின் மனைவி ருக்மணி, லட்சுமி தேவியின் அவதாரம். எனவே கிருஷ்ணரை வழிபடும் போது ஒருசில விஷயங்களை தவறாமல் செய்தால், கிருஷ்ணருடன் லட்சுமி தேவியும் மகிழ்ச்சியடையலாம் என்று நம்பப்படுகிறது.

|

கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் இந்துக்களின் விழாவாகும். பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி நாளில் பிறந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கிரகொரியன் நாட்காட்டியின் படி, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

Krishna Janmashtami 2021: Worshipping Lord Krishna In These Ways Can Help Improve Financial Situation

உலகத்தில் இருந்து தீமையையும், பாவத்தையும் அழிப்பதற்காக விஷ்ணு பகவான் கிருஷ்ண அவதாரத்தில் பிறந்தார். அப்போதிருந்து ஒவ்வொரு ஆண்டும், இந்த விழா சிறப்பாக கிருஷ்ண ஜன்மாஷ்டமி என கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆகஸ்ட் 30, திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணரின் மனைவி ருக்மணி, லட்சுமி தேவியின் அவதாரம். எனவே கிருஷ்ணரை வழிபடும் போது ஒருசில விஷயங்களை தவறாமல் செய்தால், கிருஷ்ணருடன் லட்சுமி தேவியும் மகிழ்ச்சியடையலாம் என்று நம்பப்படுகிறது.

MOST READ: கிருஷ்ணரின் அருளைப் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் கிருஷ்ணரை எப்படி வழிபடணும் தெரியுமா?

பின்வரும் விஷயங்களை கிருஷ்ண ஜெயந்தி நாளில் செய்தால், அது பல நன்மைகளை வழங்கும். அதுவும் நீங்கள் பண பிரச்சனையால் கஷ்டப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை செய்யும் போது, கிருஷ்ணர் மற்றும் லட்சுமி தேவியின் அருள் முழுமையாக கிடைத்து, பணப்பிரச்சனைகள் நீங்கி, கடனில் இருந்தும் விடுபடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாடு அல்லது கன்று சிலை

மாடு அல்லது கன்று சிலை

ஜோதிடர்களின் கூற்றுப்படி, கிருஷ்ண ஜெயந்தி நாளில் மாடு அல்லது கன்றுக்குட்டியின் சிலையை வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. இதனால் வீட்டின் நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிகளும் இவ்வாறு செய்வது நன்மை பயக்கும்.

ஏழு பெண் குழந்தைகளுக்கு பாயாசம் கொடுக்கவும்

ஏழு பெண் குழந்தைகளுக்கு பாயாசம் கொடுக்கவும்

நீங்கள் ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொண்டிருந்தால் அல்லது உங்கள் வருமானத்தை அதிகரிக்க நினைத்தால், கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்கள் வீட்டிற்கு ஏழு பெண் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு பாயாசத்தைக் கொடுங்கள். உங்கள் வருமானம் அதிகரிக்க நினைப்பவர்கள், அடுத்த ஐந்து வெள்ளிக்கிழமைகளுக்கு இச்செயலைத் தொடரவும்.

பாரிஜாத மலர்

பாரிஜாத மலர்

கிருஷ்ணரின் அருளைப் பெற கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவருக்கு பாரிஜாத பூவை வழங்கலாம். அதோடு சங்கில் பாலை நிரப்பி, அதை கிருஷ்ணருக்கு படைத்தால், கிருஷ்ணரின் அருளுடன் லட்சுமி தேவியின் அருளையும் பெறலாம். மேலும் இச்செயலால் லட்சுமி தேவி உங்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவார். அதோடு இச்செயலை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்வது மிகவும் நல்லது.

துளசி

துளசி

கிருஷ்ண ஜெயந்தி நாளில் துளசியை மாலை வேளையில் வழிபட்டால், கடன் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் துளசி செடியை 11 முறை சுற்றிக் கொண்டே ஓம் நமோ வாசுதேவாய என்னும் மந்திரத்தை உச்சரிக்கவும். இது எல்லா கடன்களில் இருந்தும் உங்களை விடுவிக்கும்.

குங்குமப்பூ பால்

குங்குமப்பூ பால்

கிருஷ்ண ஜெயந்தி அன்று நள்ளிரவு 12 மணிக்கு பாலில் குங்குமம் சேர்த்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும் மற்றும் நிதி நிலையையும் இது மேம்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Krishna Janmashtami 2021: Worshipping Lord Krishna In These Ways Can Help Improve Financial Situation

If you are suffering from financial problems, then adopt these practices on krishna janmashtami to improve your financial situation.
Story first published: Saturday, August 28, 2021, 16:41 [IST]
Desktop Bottom Promotion