For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ketu Transit 2023 Effects: கேது பெயர்ச்சியால் 2023-ல் இந்த ராசிக்கெல்லாம் மோசமா இருக்கப் போகுது...

2023 அக்டோபர் 30 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து புதன் ஆளும் கன்னி ராசிக்கு செல்வார். கன்னி ராசிக்கு கேது செல்லும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

|

வேத ஜோதிடத்தில், கேது ஒரு நிழல் கிரகம் மற்றும் கேது எந்த ராசிக்கும் அதிபதி அல்ல. கேது எந்த ராசியில் உள்ளாரோ, அந்த ராசியின் அதிபதிக்கேற்ப பலனைத் தருவார். மேலும் கேது செவ்வாய் தருவது போன்ற பலன்களைத் தருவதாக கூறப்படுகிறது. அதுவும் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் குரு வலுவாக இருந்தால், கேதுவினால் பெறும் அசுப பலன்கள் குறைவதாக ஜோதிடம் கூறுகிறது. கேது கெடு பலன்களை மட்டுமின்றி, நற்பலன்களையும் தருவார்.

Ketu Transit 2023 Effects: Know Ketu Transit in Virgo 2023 Date, Impact, Remedies On All Zodiac Signs in Tamil

இந்த கேது ஒருவருக்கு ஆன்மீக அறிவை வழங்குகிறது மற்றும் குருவுக்குப் பிறகு, கேது முக்தியின் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. கேது பின்னோக்கி நகரக்கூடிய கிரகம் மற்றும் இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற 18 மாதங்கள் ஆகும். இந்த கேது தற்போது சுக்கிரன் ஆளும் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் ஆண்டின் தொடக்கத்தில் கேது துலாம் ராசியில் தான் இருப்பார். ஆனால் 2023 அக்டோபர் 30 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து புதன் ஆளும் கன்னி ராசிக்கு செல்வார்.கன்னி ராசிக்கு கேது செல்லும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது 2023-ல் நடக்கும் கேது பெயர்ச்சியால் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேது 7 ஆவது வீட்டில் இருப்பதால், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கை துணையின் நடத்தையில் வெளிப்படும் வேறுபாடுகள் உங்களை கவலையடையும். ஒருவித சந்தேகமும் மனதில் எழலாம். இது உறவுக்கு மிகவும் பாதகமான சூழ்நிலையாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிடும், அதன் காரணமாக நீங்கள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். அக்டோபர் 30 ஆம் தேதி கேது 6 ஆவது வீட்டிற்கு செல்வதால், பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். திருமண உறவுகளில் ஏற்படும் மன அழுத்தமும் குறையும். ஆரோக்கிய பிரச்சனைகளை தோன்றினாலும், அவை உடனடியாக மறைந்துவிடும். இந்த நேரத்தில், உங்கள் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். உங்கள் வேலையில், உங்களின் நிலை நன்றாக இருக்கும் மற்றும் பணியிடத்தில் நீங்கள் நன்கு பணியாற்றுவீர்கள். கடினமாக உழைத்தால் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் கேது இருப்பார். இதனால் ஆண்டின் தொடக்கத்தில் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். படிப்பு மற்றும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் வெற்றி காண்பீர்கள். அக்டோபர் 30 ஆம் தேதி கேது உங்களின் 5 ஆவது வீட்டிற்கு செல்வார். காதல் உறவுகளில் பிரச்சனைகளால் மன அழுத்தம் அதிகரிக்கும். தவறான புரிதல்களால் உறவு முறியவும் வாய்ப்புள்ளது. புதிய உறவில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் உங்கள் நீண்ட கால உறவு முறிந்து போகலாம். எனவே சற்று கவனமாக இருங்கள். மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல பலன்களைப் பெற வாய்ப்பு உள்ளது. திருமணமான தம்பதிகள் குழந்தை தொடர்பான கவலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மிதுனம்

மிதுனம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் கேது இருப்பார். இதனால் காதல் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். உங்கள் துணையை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். இதனால் இருவருக்கும் இடையே தூரம் அதிகரிக்கும். அக்டோபர் 30 ஆம் தேதி கேது 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. குடும்ப வாழ்க்கையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். உங்கள் தாயின் உடல்நிலை மோசமடையக்கூடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு அல்லது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்தை விட்டு விலகி வேறு எங்காவது சென்று சிறிது காலம் வாழ வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சற்று வலுபெற்றிருப்பீர்கள்.

கடகம்

கடகம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடக ராசியின் 4 ஆவது வீட்டில் கேது இருப்பார். இதனால் குடும்பத்தில் பதற்றம் மற்றும் சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. சிறிய விஷயங்கள் கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும். வீட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி கேது 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலம் சாதகமாக இருக்கும். கேது தைரியத்தை அளிப்பார். வியாபாரத்தில் ரிஸ்க் எடுத்தாலும், இறுதியில் அந்த முயற்சியில் வெற்றியைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் பாதிக்கப்படும் மற்றும் அவர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். பணியிடத்தில் உங்கள் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். சொத்துக்களை வாங்குதல் மற்றும் விற்பதன் மூலம் நன்மை பெறலாம்.

சிம்மம்

சிம்மம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் கேது இருப்பார். இதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பலமும் தைரியமும் அதிகரிக்கும். மேலும் பணியிடத்தில் ரிஸ்க் எடுத்து முன்னேறுவீர்கள். உங்களுக்கும் உங்கள் உடன்பிறப்புகளுக்கும் இடையே தகராறுகள் ஏற்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மொத்தத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அக்டோபர் 30 ஆம் தேதி கேது 2 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது பேச்சின் வீடாகும். இதனால் இக்காலத்தில் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் வெளிப்படையாக பேசுவீர்கள். மேலும் ஏதாவது சொல்வதற்கு முன் இருமுறை யோசிக்க மாட்டீர்கள். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் சொல்வது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உங்கள் செல்வாக்கு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இக்காலத்தில் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகள் நோய்வாய்ப்படுத்தும். இக்காலத்தில் நிதி நிலைமை சாதகமாக இருக்காது. கடினமாக உழைத்தால் மட்டுமே உங்கள் நிதி நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் அதை வலிமையாக்க முடியும். கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் மற்றும் கண்ணாடிகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். நீங்கள் நீண்ட நேரம் விழித்திருந்தால், உங்கள் கண்களைச் சுற்றி கருவளையங்கள் வரும். எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி

கன்னி

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் கேது இருப்பார். இதனால் பல்வலி, வாய் புண், கண் நோய்கள் போன்ற வாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்துங்கள், ஏனெனில் இந்த நேரத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை எதிர்மறையாக பாதிக்கும். நிதி நிலைமை சாதகமாக இருக்காது. நிதி சவால்களை வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி முதல் கேது முதல் வீட்டிற்கு செல்கிறார். இதனால் நிதி பிரச்சனைகள் சற்று குறையும். எல்லா வேலைகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் உங்களைப் புரிந்துகொள்வதில் சில சிரமங்களை எதிர்கொள்வார்கள்.

துலாம்

துலாம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேது துலாம் ராசியின் முதல் வீட்டில் இருப்பார். இதனால் உங்கள் நடத்தையை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது உங்கள் உறவுகளுக்கு இடையே உராய்வை ஏற்படுத்தலாம். குறிப்பாக உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கக்கூடும். அதை கவனிக்காவிட்டால், அது பிரிவினைக்கு வழிவகுத்துவிடும். மேலும் நீங்கள் தனிமையாக உணர்வீர்கள். மற்றவர்களுடன் பழக விருப்பம் கொள்ளமாட்டீர்கள். தந்திரம், மந்திரம் போன்றவற்றில் உங்கள் ஆர்வம் வளரும். ஆனால் அக்டோர் 30 ஆம் தேதி கேது 12 ஆவது வீட்டிற்கு செல்வார். இதனால் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதமாக ஏற்படும் செலவுகள் உங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் இது நிதி நிலைமையில் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் கவனமாக இருங்கள். வெளிநாடு செல்ல முயற்சித்தால், அதில் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டில் கேது இருப்பார். இதனால் கண் வலி, கண்களில் நீர் வடிதல் மற்றும் உங்கள் கண் பகுதியைச் சுற்றியுள்ள கருவளையம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். தியானம் மற்றும் பிராணாயாமம் செய்வதில் உங்கள் மூளையைப் பயன்படுத்துவீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே உள்ள நெருக்கம் குறையும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் மற்றும் அவை உங்களை தொந்தரவு செய்யும் விதத்தில் அதிகரிக்கும். அக்டோபர் 30 ஆம் தேதி கேது 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலம் பொற்காலமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் மனதில் இருந்த ஆசைகள் அனைத்தும் இந்த காலத்தில் நிறைவேறும். உங்கள் நிதி நிலை வலுப்பெறும். காதல் உறவுகளில் வேறுபாடுகள் காணப்படும். உங்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது.

தனுசு

தனுசு

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் கேது உள்ளார். இதனால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். லாட்டரி அல்லது பங்குச் சந்தை போன்ற குறுக்குவழிகள் மூலம் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பங்குச் சந்தையில் ஈடுபட்டால் உங்களுக்கு அதில் லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்கலாம் மற்றும் அதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். தனிப்பட்ட உறவுகளில் பதற்றம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம். அக்டோபர் 30 ஆம் தேதி கேது 10 ஆவது வீட்டிற்கு செல்வதால், உங்களின் பணியிடம் பாதிக்கப்படலாம். வேலையில் உங்கள் கவனம் குறையும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அதற்கு ஏற்ற பலன் கிடைக்காது. உங்கள் வேலையில் ஆர்வத்தை இழக்க தொடங்குவீர்கள்.

மகரம்

மகரம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேது மகர ராசியின் 10 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் உங்கள் வேலையில் கவனம் குறைந்து வருவதை நீங்கள் உணர்வீர்கள். ஏனெனில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்கள் வேலையில் இருந்து பலன் கிடைக்காது. இதனால் குடும்ப உறவுகளில் பதட்டங்கள் ஏற்படலாம். அக்டோபர் 30 ஆம் தேதி மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இக்காலம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். இது உங்கள் மனதில் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையிலும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும். உங்கள் தந்தையுடன் பிரச்சனை ஏற்படலாம் மற்றும் உறவு பாதிக்கப்படலாம். இருப்பினும் உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இந்த காலத்தில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி உங்கள் வழியில் வரும். உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் மற்றும் உங்கள் தைரியமும் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் கேது இருப்பார். இதனால் நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். குடும்ப உறவுகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உங்களால் முடிந்ததைச் செய்வீர்கள். உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவில் விரிசல்கள் ஏற்படலாம். இக்காலத்தில் கடின உழைப்பாளியாக மாறுவீர்கள். உங்கள் வேலையை சிறப்பாக செய்து முடிக்க முயற்சிப்பீர்கள். அக்டோபர் 30 ஆம் தேதி கேது 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்கள் துணையிடமிருந்து பிரிவை சந்திக்க நேரிடும். சண்டை ஏற்பட்டால், அந்த பிரச்சனைகளை சரியான நேரத்தில் தீர்க்க வேண்டும் மற்றும் தாமதிக்கக்கூடாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் உடல்நல பிரச்சனைகளை சந்திக்கலாம். நீங்கள் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். உங்கள் மாமியார்களுடனான உங்கள் உறவும் பாதிக்கப்படலாம். மற்ற கிரகங்களின் நிலைகளால் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். கடவுள் வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இது நற்பலனை வழங்கும்.

மீனம்

மீனம்

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கேது மீன ராசியின் 8 ஆவது வீட்டில் இருப்பார். இதனால் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே பரஸ்பர நல்லிணக்கம் இல்லாமல் இருக்கலாம். உங்கள் மாமியார்களுடனான உங்கள் உறவுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தைப் பொறுத்தவரை செழிப்பாக இருக்காது. கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி கேது 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்களின் பிரச்சனைகள் சற்று குறையும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் எதையோ மறைப்பதாக உணர்வீர்கள். ஆனால் அது அர்த்தமற்றதாக இருக்கும், எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தொழில் நிலை ஏற்ற இறக்கங்களை சந்திக்கலாம். சில சமயங்களில் உங்கள் வியாபாரம் உயரும், சில சமயங்களில் அது குறையக்கூடும். ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ketu Transit 2023 Effects: Know Ketu Transit in Virgo 2023 Date, Impact, Remedies On All Zodiac Signs in Tamil

Ketu Rashi Parivartan 2023 Predictions in Tamil : Let us now know about Ketu Transit 2023 in Virgo date, time, effects, remedies, and how it will affect all 12 zodiac signs.
Story first published: Thursday, December 8, 2022, 11:34 [IST]
Desktop Bottom Promotion