Just In
- 23 min ago
வீட்டிலேயே சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி தெரியுமா?
- 42 min ago
அரிசி நீரை வீணாக்குறீங்களா? இனிமே அப்படி பண்ணாதீங்க... அத எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம் தெரியுமா?
- 1 hr ago
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- 2 hrs ago
பிப்ரவரியில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்கு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படப் போகுது...
Don't Miss
- News
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- Technology
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
2023-ல் துலாம் ராசியில் இருக்கும் கேது: இந்த 3 ராசிக்கு அக்டோபர் மாதம் வரை அதிர்ஷ்டமானதா இருக்கும்...
2023 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், நிறைய பேர் தங்களின் ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பார்கள். ஜோதிடத்தில் நவகிரகங்களின் நிலைகளைக் கொண்டு தான் பலன்கள் கணித்துக் கூறப்படுகின்றன. கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றும். சில கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் ராகு, கேதுவிற்கு ராசி எதுவும் இல்லை. மேலும், இவை நிழல் கிரகங்கள் என்பதால் பின்னோக்கி நகரும். அதோடு இவை 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும்.
அந்த வகையில் கேது 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சென்றார். இந்த துலாம் ராசியில் 2023 அக்டோபர் 30 ஆம் தேதி வரை இருப்பார். தற்போது 2023 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அக்டோபர் வரை கேது துலாம் ராசியில் இருப்பார். இதனால் 3 ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் கேது உள்ளார். இது தைரியம் மற்றும் சகோதர சகோதரிகளின் வீடாக கருதப்படுகிறது. கேதுவின் நிலையால் 2023 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தைப் பொறுத்தவரை சாதகமாக இருக்கும். இந்த ஆண்டில் நீங்கள் மிகுந்த தைரியத்துடன் இருப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். இக்காலத்தில் உடன்பிறந்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்த வேலை இந்த ஆண்டில் முடிக்கப்படும்.

தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் கேது பயணித்து வருகிறார். இது வருமானம் மற்றும் லாபம் தரும் வீடாக கருதப்படுகிறது. எனவே 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தனுசு ராசிக்காரர்களின் வருமானத்தில் அதிகரிப்பு காணப்படும். அதோடு புதிய வருமான வழிகளும் உருவாகும். பங்குச் சந்தை, பந்தயம், லாட்டரியில் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இக்காலத்தில் அதை செய்தால் லாபம் கிடைக்கும். வாகனம் அல்லது நிலம் வாங்க திட்டம் கொண்டிருந்தால், அதில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் கேது உள்ளார். இது வேலை மற்றும் பணியிடத்தின் வீடாக கருதப்படுகிறது. எனவே 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசிக்காரர்களைத் தேடி புதிய வேலை வாய்ப்புகள் வரும். பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில், அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)