For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனி பகவானை வணங்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா சனியின் கோபத்துக்கு ஆளாவீங்க..

நீங்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனி பகவானை தவறாமல் வணங்கி வருபவராயின், ஒருசில தவறுகளை செய்யாதீர்கள். அந்த தவறுகள் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

|

சனி பகவான் நீதி மற்றும் தண்டனைக்கான கடவுளாக கருதப்படுகிறார். சனிக்கிழமை சனி பகவானுக்குரிய நாளாகும். ஜோதிடத்தின் படி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவை நிச்சயம் ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும். இந்த சனி தாக்கத்தின் போது, சனி பகவான் மக்களுக்கு கடுமையான சோதனைகளையும், சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள வைப்பார். இம்மாதிரியான சூழ்நிலையில் மக்கள் சனி பகவானை மகிழ்விக்க அவரை தவறாமல் வணங்குவார்கள். இதனால் சனி பகவானின் மோசமான தாக்கத்தை தவிர்க்கலாம்.

Keep These Things In Mind While Worshipping Shani Dev To Avoid Financial Loss In Tamil

ஆனால் சனி பகவானை வழிபடும் போது ஒருசிலவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், சனி பகவானின் கோபத்திற்கு தான் ஆளாக நேரிடும். நீங்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனி பகவானை தவறாமல் வணங்கி வருபவராயின், ஒருசில தவறுகளை செய்யாதீர்கள். அந்த தவறுகள் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனி பகவானின் கண்களை பார்க்காதீர்

சனி பகவானின் கண்களை பார்க்காதீர்

கோவிலுக்கு சென்று சனி பகவானை வணங்கும் போது, சனி பகவானின் கண்களைப் பார்த்து வணங்காதீர்கள் மற்றும் அவருக்கு நேராக நின்று அவரை வழிபடாதீர்கள். எப்போதும் சனி பகவானை வணங்கும் போது கண்களை மூடிக் கொண்டு அல்லது அவரது பாதங்களை பார்த்து வழிபடுங்கள். நம்பிக்கைகளின் படி, சனி பகவானின் கண்களை பார்த்து வழிபடுவதன் மூலம், சனி பகவானின் பார்வை நேரடியாக விழுமாம்.

முதுகை காட்டாதீர்

முதுகை காட்டாதீர்

சனி பகவானை வழிபட்ட பின்னர், எப்போதும் முதுகை காண்பித்து செல்லாதீர்கள். எப்படி சனி பகவானை வணங்கினீர்களோ, அதே நிலையில் பின்னோக்கி செல்ல வேண்டும் என்பது ஐதீகம். சனி பகவானை வணங்கிய பின் முதுகை காண்பித்து சென்றால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகக்கூடும்.

ஆடையின் நிறம் முக்கியம்

ஆடையின் நிறம் முக்கியம்

சனி பகவானை வழிபட செல்லும் போது, அணியும் ஆடைகளின் நிறத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதாவது சனி பகவானை வணங்கும் போது சிவப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் சனி பகவானை வழிபடும் போது நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணிவது நல்லது. ஏனெனில் இந்த நிறங்கள் சனி பகவானுக்கு பிடித்த நிறங்களாகும்.

தாமிரத்திற்கு பதிலாக இரும்பு பாத்திரத்தில் இருந்து எண்ணெய் வழங்கவும்

தாமிரத்திற்கு பதிலாக இரும்பு பாத்திரத்தில் இருந்து எண்ணெய் வழங்கவும்

சனி பகவானுக்கு எண்ணெய் வழங்க போகிறீர்கள் என்றால், காப்பர் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாம். எப்போதும் இரும்பு பாத்திரங்களைப் பயன்படுத்தவும். ஏனெனில் காப்பர் சூரியனின் காரணி. என்ன தான் சூரிய பகவான் தந்தையாக இருந்தாலும், சூரிய பகவானும் மற்றும் சனி பகவானும் எதிரிகள்.

வணங்கும் திசை முக்கியம்

வணங்கும் திசை முக்கியம்

சனி பகவானை வணங்கும் போது திசையிலும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக, மக்கள் கிழக்கு திசையை நோக்கி வழிபடுவார்கள். ஆனால் சனி பகவான் மேற்கு திசையின் அதிபதி. ஆகவே, சனி பகவானை வழிபடுவதாக இருந்தால், மேற்கு திசையை நோக்கி நின்று வழிபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Keep These Things In Mind While Worshipping Shani Dev To Avoid Financial Loss In Tamil

If you also go to the Shani temple on Saturday and offer prayers to Shani Dev, then it is very important for you to know the precautions that you should take while worshiping Shani Dev.
Story first published: Saturday, June 11, 2022, 14:29 [IST]
Desktop Bottom Promotion