For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்!

சங்காபிஷேகம் பற்றி பத்மபுராணத்திலேயே விளக்கி கூறப்பட்டுள்ளது. தூய்மையின் அடையாளமாக கருதப்படும் சங்கில் பசும்பாலை நிரப்பி, அதை ஈசனுக்கு அபிஷேகம் செய்தால், ஆயிரம் யாகங்கள் செய்த புண்ணியம் நமக்கு கிடைக்க

|

கார்த்திகை சோமவார தினமான இன்று சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். இந்த சங்காபிஷேகத்தை தரிசனம் செய்வதோடு சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும். மேலும் கார்த்திகை சோமாவார தினங்களில் சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

Karthigai Somavara Sangabishegam will give enriches and wealth

கார்த்திகை மாதம் அண்ணாமலையார் தீபத்திருவிழாவுக்கு எந்த அளவு சிறப்பு பெற்றதோ, அதேபோல் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளும், அதாவது சோமவார தினம் சிவாலயங்களிலும் விஷேசம் தான். காரணம் சோமவார தினங்களில் தான், சிவாலயங்களிலும் 108 அல்லது 1008 அல்லது 100008 சங்குகளில் புனித நீலை நிரப்பி, யாக சாலைகளை அமைத்து, வேள்வி செய்து, பின்னர் அந்த தீர்த்தத்தை கங்கை நீராக பாவித்து சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்துவது நடைமுறை.

MOST READ: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏன் பதினெட்டு படி ஏறி போகணும் தெரியுமா?

கார்த்திகை மாதத்தில் சந்திரன் விருச்சிக ராசியில் பலமிழந்து காணப்படுவார். தன்னுடைய முழு பலத்தையும் திரும்பப் பெற வேண்டி, கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சோமவாரத்திலும், சந்திரனின் அம்சமாக விளங்கும் சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அதில் புனித கங்கை தீர்த்தத்தை நிரப்பி, வேள்விகள் செய்து, பின்பு அந்த தீர்த்தத்தை கொண்டு எம்பெருமான் ஈசனுக்கு அபிஷேகம் செய்தால், சந்திரன் பலம் பெற்று வளர்வதைப் போல், நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாவிதமான நலமும் வளமும் பெற்று வாழலாம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்த்திகை சோமவாரம்

கார்த்திகை சோமவாரம்

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை மாதம் ஏகப்பட்ட சிறப்புகளை கொண்டது. பெரும்பாலான இந்துக்கள் கார்த்திகை மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து சோமவாரம் என்னும் திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து எம்பெருமான் ஈசனை நினைத்து விரதம் இருப்பார்கள். கார்த்திகை மாதம் அண்ணாமலையார் தீபத்திருவிழாவுக்கு எந்த அளவு சிறப்பு பெற்றதோ, அதேபோல் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளும், அதாவது சோமவார தினம் சிவாலயங்களிலும் விஷேசம் தான். காரணம் சோமவார தினங்களில் தான், சிவாலயங்களிலும் 108 அல்லது 1008 அல்லது 100008 சங்குகளில் புனித நீலை நிரப்பி, யாக சாலைகளை அமைத்து, வேள்வி செய்து, பின்னர் அந்த தீர்த்தத்தை கங்கை நீராக பாவித்து சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்துவது நடைமுறை.

செல்வம் தரும் சங்கு

செல்வம் தரும் சங்கு

அது சரி, ஏன் சங்காபிஷேகம் கார்த்திகை மாத சோமவார தினங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. சந்திரனுக்கு இன்னொரு பெயர் திங்கள். சந்திரனுக்கு உகந்த நாள் திங்கள் கிழமை. சங்கு வெண்மை, தூய்மை, செல்வம், மேண்மை, வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. சிவனடியார்கள் தங்களுக்கு ஈசனின் அளப்பரிய அருட்செல்வம் வேண்டும் என்றும் சாதாரண மக்கள், தங்களுக்கு வற்றா செல்வ வளம் வேண்டும் என்றும் மனமுருக வேண்டி இந்த சங்காபிஷேக பூஜையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கு தீர்த்தம்

சங்கு தீர்த்தம்

ஜோதிட சாஸ்திரத்தில் கடலுக்கும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் உரியவராக சந்திரன் விளங்குகிறார். அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் சந்திரனின் ஈர்ப்பு விசை சற்று அதிகரித்து காணப்படும் என்பதால் தான் கடல் அமைதியற்று கொந்தளிப்புடன் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சோமவாரத்திலும், சந்திரனின் அம்சமாக விளங்கும் சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அதில் புனித கங்கை தீர்த்தத்தை நிரப்பி, யாக பூஜையில் வைத்து பூஜை செய்து, பின்பு அந்த தீர்த்தத்தை கொண்டு எம்பெருமான் ஈசனுக்கு அபிஷேகம் செய்தால், நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாவிதமான நலமும் வளமும் பெற்று வாழலாம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறகின்றன.

மகாலட்சுமி அம்சம்

மகாலட்சுமி அம்சம்

சங்கு என்பது மஹாவிஷ்ணு வாசம் செய்யும் இடமாக கருதப்படுகிறது. சங்கானது, சந்திரனின் சகோதரியான மஹாலட்சுமியின் அம்சமாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட தெய்வீக பொருட்களில் மஹாலட்சுமியோடு வெளிப்பட்டதே வலம்புரி சங்காகும். இது தான் மஹாவிஷ்ணுவின் இடக்கையில் உள்ளது. இந்து கடவுள்கள் ஒவ்வொருவருக்கும் சங்குகளை வைத்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

லட்சுமி கடாட்சம் பெருகும்

லட்சுமி கடாட்சம் பெருகும்

ஆனாலும், வலம்புரி சங்கிற்கு மட்டுமே விஷேச சக்தி இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. எந்த வீட்டின் பூஜையறையில் வலம்புரி சங்கு இருக்கிறதோ, அங்கு மஹாலட்சுமியே வாசம் செய்வதாக அர்த்தம். அந்த வீடே லட்சுமி கடாட்சத்தால் நிறைந்திருக்கும். வலம்புரி சங்கானது செல்வத்தை அள்ளித் தரும். தூய்மையின் அடையாளமாக கருதப்படும் சங்கில் பசும்பாலை நிரப்பி, அதை ஈசனுக்கு அபிஷேகம் செய்தால், ஆயிரம் யாகங்கள் செய்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். கங்கை நீரை நிரப்பு அபிஷேகம் செய்தால் பிறப்பே இல்லாத நிலையை அடையலாம் என்று பத்மபுராணம் விளக்கியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Karthigai Somavara Sangabishegam will give enriches and wealth

In the month of Karthigai, the moon will be weakened in the zodiac sign. His full strength and get back to Karthigai month, all Mondays lunar feature the sirens special puja, and the sacred Ganges solved, filled with hymns, and then that settled with the Lord Siva exotic anointed if Moon gaining strength is growing, Astrologers say that like the moon, we can live our lives with all kinds of health and prosperity.
Story first published: Monday, November 18, 2019, 14:52 [IST]
Desktop Bottom Promotion