For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2023 காரடையான் நோன்பு எப்போது? இந்த விரதம் எதனால் மேற்கொள்ளப்படுகிறது?

காரடையான் நோன்பு அல்லது சாவித்திாி விரதம் என்பது திருமணமான தமிழ் பெண்களால் அனுசாிக்கப்படும் முக்கியமான நிகழ்வாகும். 2023 ஆம் ஆண்டு காரடையான் நோன்பு மாா்ச் மாதம் 15 ஆம் தேதி வருகிறது.

|

Karadaiyan Nombu 2023: கணவரின் நலனுக்காக பெண்கள் பல்வேறு விரதங்களை மேற்கொண்டாலும், அவற்றுள் முதன்மையாக கருதப்படுவது காரடையான் நோன்பு ஆகும். இந்த காரடையான் நோன்பை சாவித்திாி விரதம் என்றும் அழைப்பர். இந்த நோன்பு திருமணமான தமிழ் பெண்களால் அனுசாிக்கப்படும் முக்கியமான நிகழ்வாகும். இறைவன் தங்களின் கணவா்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்வா்.

Karadaiyan Nombu 2023: Date, Time, Puja Vidhi, Rituals and SignificanceinTamil

இந்த காரடையான் நோன்பு பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவை காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்ரி நோன்பு ஆகியவை. இது பெண்கள் மேற்கொள்ளும் நோன்புகளிலேயே மிகவும் முக்கியமான நோன்பு என்று கூட சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரடையான் நோன்பின் தேதி மற்றும் நேரம்

காரடையான் நோன்பின் தேதி மற்றும் நேரம்

2023 ஆம் ஆண்டு காரடையான் நோன்பு மாா்ச் மாதம் 15 ஆம் தேதி வருகிறது. அன்றைய நாளில் இந்திய நேரப்படி காலை 6.29 மணி முதல் 6.47 மணிக்குள் திருமணமான பெண்கள் தங்கள் விரதத்தை முடித்து சரடு என்று சொல்லப்படும் மஞ்சள் கயிற்றை அணிந்து கொள்ளலாம். இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் தமிழ் மாதமான பங்குனி மாதம் சாியாக மாா்ச் 15 அன்று தொடங்குகிறது.

இந்த நோன்பு தமிழ் மாதமான மாசி முடிந்து பங்குனி பிறக்கக்கூடிய அந்த நாளில் அனுசாிக்கப்படுகிறது. காரடை என்பது ஒரு வகையான தனித்துவமான நெய்வேத்தியம் (புனித பிரசாதம்) ஆகும். நோன்பு என்றால் விரதம் அல்லது உபவாசம் என்று பொருள்.

காரடையான் விரத கதை

காரடையான் விரத கதை

காரடையான் நோன்பு, புராணத்தில் வருகின்ற சத்தியவான், சாவித்திாி என்ற இரண்டு முக்கியக் கதாப்பாத்திரங்களின் நினைவாக அனுசாிக்கப்படுகிறது. அதாவது இந்த நாளில், மரணத்தின் கடவுளான எமனின் பிடியில் இருந்து சாவித்திாி தனது கணவனான சத்தியவானைக் காப்பாற்றியதாக நம்பப்படுகிறது. அதனால் இந்த நோன்பு சாவித்திாி நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

மஞ்சள் கயிறு

மஞ்சள் கயிறு

காரடையான் நோன்பு நாள் அன்று, திருமணமான பெண்கள், பெண் கடவுளான கௌாியை வழிபட்டு, அவருக்கு காரடையான் நோன்பு நெய்வேத்தியத்தை காணிக்கையாக அளிப்பா். சடங்குகள் மற்றும் பூஜைகள் முடிந்த பின்பு மஞ்சள் சரடு அல்லது நோன்பு சரடு என்று அழைக்கப்படும் புனிதமான மஞ்சள் கயிற்றைத் தங்களின் கணவா்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக அணிந்து கொள்வா்.

காரடையான் நோன்பின் முக்கியத்துவம்

காரடையான் நோன்பின் முக்கியத்துவம்

திருமணமான பெண்கள் தங்கள் கணவா்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த காரடையான் நோன்பை அனுசாிப்பா். அதே நேரத்தில் திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு ஒரு சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நோன்பை அனுசாிப்பா். இந்த நாளில் திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டு இந்து பெண் தெய்வங்களிடம் தங்களுடைய கணவா்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்றும் அல்லது நல்லதொரு சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வா்.

சாவித்திாி நோன்பு விரதம்

சாவித்திாி நோன்பு விரதம்

- மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் போது சாவித்திாி நோன்பு அனுசாிக்கப்படுகிறது.

- இந்த நாளில் திருமணமான பெண்கள் விரதம் இருப்பா். பின் வெண்ணெயில் செய்த காரடையை (அடை) உண்டு தமது விரதத்தை முடிப்பா்.

- இந்த அடை, காரடையான் நோன்பு அடை என்று அழைக்கப்படுகிறது. இந்த காரடையான் நோன்பு என்ற பெயா் கார அடை என்ற உணவுப் பொருளில் இருந்து வருகிறது. சாவித்திாி தனது கணவன் சத்தியவானின் உயிரை எமன் எடுக்காமல் விட்டதற்கு நன்றியாக, உருகாத எண்ணெயோடு கார அடை செய்து, அதை எமனுக்கு காணிக்கையாக அளித்தாா் என்று நம்பப்படுகிறது.

- காரடை நோன்பின் இன்னொரு மிக முக்கிய அம்சம் காரடை நோன்பு சரடான மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிவதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Karadaiyan Nombu 2023: Date, Time, Puja Vidhi, Rituals and Significance in Tamil

Karadaiyan Nombu 2023: Date, Time, Puja Vidhi, Rituals and Significance in Tamil. Read on...
Desktop Bottom Promotion