For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

By Mahibala
|

எப்போதும் நம்முடைய இயல்பு வாழ்ககையைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களைத் தயாரிப்பவர் தான் கே.டி.குஞ்சுமோன். இப்படி வாழ்க்கையின் இயல்பை மிக எதார்த்தமாக வெளிப்படுத்திய படம் தான் காதலன். இந்த படத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சங்கர் இயக்கம், ஏ.ஆர்.ரகுமான் இசை இப்படி இந்த படத்துக்கு வலு சேர்த்த விஷயங்கள் நிறைய.

சரி அத விடுங்க. விஷயத்துக்கு வருவோம். எல்லோரும் தூக்கிக் கொண்டாடிய இந்த காதலன் திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் முடிந்து வெள்ளி விழா கொண்டாட்டத்தில் இருக்கிறது. என்ன அதுக்குள்ள 25 வருஷமாச்சா. இப்ப இருக்கற தலைமுறைக்கும் பிடித்த காதல் படங்கள்ல ஒன்னு இது. இந்த படம் உருவானது பற்றியும் வேறு சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரபுதேவா ஹீராவான கதை

பிரபுதேவா ஹீராவான கதை

பிரபுதேவாவை மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று சொல்லி, இந்த படத்துக்கு ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் சங்கர் முதலில் மிகவும் தயங்கினாராம். ஆனால் தயாரிப்பாளரான கே.டி.குஞ்சுமோன் இவருடைய ஜெண்டில்மன் மற்றும் சூரியன் படத்தில் ஆடியிருந்த சூறாவளி நடனத்தைப் பார்த்திருந்ததால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், நன்றாக வரும் என்று சிபாரிசு செய்து சங்கரை சமாதானம் செய்து பிரபுதேவாவை நடிக்க வைத்தாராம்.

MOST READ: பிறவியிலேயே இந்த ரெண்டு ராசிக்காரங்களும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸா இருப்பாங்களாம்...

டப்பிங் குரல்

டப்பிங் குரல்

அந்த படத்தில் பிரபுதேவாவாவுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தது நம்முடைய சீயான் விக்ரம். அதேபோல் நக்மாவின் குரல் நடிகை சரிதாவின் குரல்.

நக்மா அறிமுகம்

நக்மா அறிமுகம்

முதலில் இந்த படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டவர் மாதுரி தீட்ஷித். அவருடைய கால்ஷீட் கிடைக்காததால், புதிதாக தமிழ் சினிமாத்துறைக்குள் நுழைந்த நக்மா கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

வடிவேலு

வடிவேலு

இந்த படத்துக்கு ஹீரோவின் நண்பராகவும் காமெடியனாகவும் கவுண்டமணியை நடிக்க வைக்க குஞ்சுமோன் விரும்பியிருக்கிறார். அவர் மிகவும் பிஸியானதால் அந்த வாய்ப்பு வடிவேலுவைத் தேடி வந்திருக்கிறது.

பஸ்

பஸ்

இந்த படத்துக்கான விஷூவல் எபக்ட்ஸ் முழுவதும் செய்தவர் விக்கி. ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு வரும் பஸ் நடனம் மிகவும் பேமஸ். அந்த பாடலில் வரும் பஸ் அந்த படத்தின் ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணியால் வடிவமைக்கப்பட்டது. அதே பேருந்து தான் கிளைமேக்ஸில் வெடிக்க வைக்கப்பட்டதாம்.

MOST READ: இந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா? இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...

திருக்குற்றாலக்குறிஞ்சி

திருக்குற்றாலக்குறிஞ்சி

இந்த படத்தில் வைரமுத்து மட்டுமே 6 பாடல் எழுதியிருக்கிறார். இளைஞர்களின் சூப்பர் ஃபேவரட்டான் முக்காலா முக்காபுஃல்லா எழுதியது வாலி. பேட்ட ராப் பாடலை இயக்குநர் சங்கரே எழுதியிருக்கிறார். ஆனால் அதில் உள்ள மெலடியான இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் படக்குழுவினரால் எழுதப்படவில்லை. இது குற்றாலக்குறவஞ்சி என்னும் இலக்கியத்தில் உள்ள திரிகூடராசப்பரால் எழுதப்பட்டது.

ஹிந்தி - தெலுங்கு மொழிகளில்

ஹிந்தி - தெலுங்கு மொழிகளில்

இந்த திரைப்படம் ஹிந்தியில் ஹம்சே ஹெய் முக்காபுல்லா (humse hai muqabala) என்னும் பெயரில் டப் செய்யப்பட்டது. இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு சோலே படத்தின் தயாரிப்பாளர் ஜிபி சிப்பி குஞ்சுமோளை வெகுவாக பாராட்டினாராம். அதேபோல் இந்த படம் பிரேமிகுடு என்னும் பெயரில் டப் செய்யப்பட்டது. தமிழைப் போலவே தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் வெற்றிப்படங்களாக அமைந்தன.

4 தேசிய விருதுகள்

4 தேசிய விருதுகள்

இந்த திரைப்படம் 4 தேசிய விருதுகளைத் தட்டிச் சென்றது. இந்த படத்தில் என்னவளே! அடி என்னவளே! என்னும் பாடலுக்கும் விசுவல் எபக்டெக்ஸ்க்காக வெங்கிக்கும் ஆடியோ கிராபிக்காக ஏஎஸ் லக்ஷ்மி நாராயணன் மற்றும் விஎஸ் மூர்த்தி அவர்களும் எடிட்டிங்குக்காக லெனின் மற்றும் விடி. விஜயன் அவர்களுக்கும் கிடைத்தது.

ஃபிலிம் ஃபேர்

ஃபிலிம் ஃபேர்

இயக்குநர் சங்கர் அவர்களுக்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம் ஃபேர் அவார்டையும் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த மியூசிக் டைரக்டருக்கும் கிடைத்தது.

MOST READ: நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...

சிதம்பரம் கோவில்

சிதம்பரம் கோவில்

முதலில் இந்த படத்துக்கான சில சீன்கள் அனுமதியுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் எடுக்கப்பட்டது. அதன்பிறகு சில சர்ச்சைகளால் அங்கே கோவிலின் உள்ளே எடம்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kadhalan 25 : Interesting Facts

Producer KT Kunjumon shot to fame for grandeur elements in his movies and one such illustration is Kadhalan starring Prabhu Deva and Nagma in lead roles. The film is celebrating its 25th anniversary today and we bring you some of the interesting facts about the film.
Story first published: Tuesday, September 24, 2019, 17:06 [IST]
Desktop Bottom Promotion