Latest Updates
-
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்!
வக்ர நிவர்த்தி அடையும் குருவால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
தற்போது குரு கும்ப ராசியில் இருந்து கொண்டிருக்கிறார். வக்ர நிவர்த்தி பெறுவதற்கு மகர ராசிக்கு 2021 செப்டம்பர் 15, காலை 04:22 மணி அளவில் செல்லவிருக்கிறார்.
மாதந்தோறும் கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டிருக்கும். கிரகங்களின் இடமாற்றத்திலேயே மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது குரு பெயர்ச்சியாகும். ஜோதிடத்தில் குரு பகவானை அதிர்ஷ்ட கிரகம் என்று கூறுவார்கள். ஏனெனில் இவர் நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம், நல்ல நட்புகள், நிறைவான செல்வம் ஆகியவற்றை முழுமையாகத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். அதற்கு இடையே சிறிது நாட்கள் அதிசாரமாகவும், பின் வக்ர நிலையில் மாறி பழைய நிலைக்கு திரும்புவார்.

தற்போது குரு கும்ப ராசியில் இருந்து கொண்டிருக்கிறார். வக்ர நிவர்த்தி பெறுவதற்கு மகர ராசிக்கு 2021 செப்டம்பர் 15, காலை 04:22 மணி அளவில் செல்லவிருக்கிறார். கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்து வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்களைத் தரப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது தொழில் ரீதியாக கனவு நனவாகும். பணியிடத்தில் அங்கீகாரத்தையும், மதிப்பீடுகளையும் பெற முடியும். வணிகம் தொடர்பான பயணங்களால் நன்மை கிட்டும். இக்காலத்தில புதிய வேலை, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வைப் பெறலாம். நிதி ரீதியாக வசதியாக இருப்பீர்கள். எனினும், திடீர் செலவுகளுக்கு போதுமான பணத்தை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. உறவு ரீதியாக, அனைத்தையும் மிகவும் சாதுர்யமாக கையாளுவீர்கள். ஏனெனில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க விரும்புகிறீர்கள். இக்காலத்தில் குடும்பத்தில் விஷேசங்களுக்கு வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். கடந்த காலத்தில் குடும்ப பிரச்சனைகளால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த குரு பெயர்ச்சிக்குப் பின் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் புறக்கணிக்காதீர்கள். அவ்வப்போது உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டம் மற்றும் விதி சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக, நீங்கள் நீண்ட காலமாக விரும்பிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு வரக்கூடும். வெளிநாட்டு வேலைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, சில சிறந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியிடத்தில் பதவி உயவு மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இந்தக் காலம் சாதகமான காலம் என்பதால், உங்கள் நண்பர் வட்டத்திலும் உறவினர்களிடமும் பெயர் புகழ் மற்றும் மரியாதை கிடைக்கும். நிதி ரீதியாக, உங்கள் வருமானம் உங்களுக்கு சாதகமாகவும் திருப்திகரமாகவும் இருக்கும். மேலும் நீங்கள் சில புதிய வருமான ஆதாரங்களையும் பெறலாம். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான காலமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் நன்றாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது, தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். வணிகர்கள் நல்ல ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இருப்பினும் சிறிது சிரமத்தை சந்திக்கலாம். பணிபுரிபவர்கள், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி ரீதியாக, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அவை ஏற்ற இறக்கமாக இருக்கும். இக்காலத்தில் கடன் கொடுப்பது மற்றும் கடன் வாங்குவது தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனைகளையும் தவிர்க்க வேண்டும். உறவு ரீதியாக, திருமணமான தம்பதிகள் தங்கள் துணையுடன் தொடர்பு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது தவறான புரிதல் மற்றும் மோதலின் சில சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். இந்த காலத்தில் நீங்கள் ஒரு நல்ல உறவை அனுபவிப்பீர்கள் என்பதால் இது காதலர்களுக்கு ஒரு நல்ல காலம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் துணை மற்றும் குடும்பத்தின் வயதான உறுப்பினர்களின் ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த பெயர்ச்சியின் போது தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியின் போது, தொழில் ரீதியாக உங்கள் சக ஊழியர் மற்றும் துணை அதிகாரிகளுடன் நல்ல உறவைப் பேணுவதோடு, சம்பள உயர்வு அல்லது சிறந்த வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகளையும் பெறலாம். உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவீர்கள். வணிகர்களுக்கு நன்மை பயக்கும் காலம். உங்கள் வணிக கூட்டாளருடன் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை தீர்க்கப்படும். புதிய தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கு, இது சரியான நேரமாகும். நிதி நிலையில், நீங்கள் ஒரு ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும் மற்றும் இக்காலத்தில் எதிர்பாராத நிதி ஆதாயம் உள்ளது; இருப்பினும் ஆபத்தான முதலீடுகள் உங்கள் சேமிப்புகளை அழிக்கக்கூடும். உறவைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு மேம்படும். உங்கள் காதல் வாழ்க்கையில் சாதகமான முடிவை எதிர்பார்க்க வேண்டிய நேரம் இது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பொதுவான சளி மற்றும் இருமல் உங்களைப் பாதிக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். இரவு நேரத்தில் கனமான உணவுகளைத் தவிர்க்கவும். தினமும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதோடு, உடற்பயிற்சியிலும் ஈடுபடுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் வேலை வாய்ப்பில் கலவையான முடிவுகளைத் தரும். உங்கள் தொழில் வாழ்க்கையில் விரும்பிய வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். வேலையில் பெரிய திட்டங்கள் இருக்கும், ஆனால் சனி பணியிடத்தில் இணைந்து இருப்பதால் அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வேலையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்க நீங்கள் போதுமான நிலைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களால் நீங்கள் நிம்மதியில்லாமல் இருப்பீர்கள். மேலும் மோதல்களைத் தவிர்த்து சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். திருமணம் செய்தவர்கள், உறவுகளைக் கையாள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக, இக்காலத்தில் பண வரவு அதிகரிக்கும். அதே வேளையில் ஆன்மீக விழாக்களின் பணம் செலவழிக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருப்பதால், உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் தொழில் ரீதியாக, உங்கள் துணை அதிகாரிகள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் உறவை மேம்படுத்தும். உங்களின் கடின உழைப்பிற்கான வெகுமதியையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். வணிகர்களுக்கு லாபம் கிட்டும் மற்றும் வணிக பயணத்திற்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் விரும்பிய உயர் படிப்புக்கு விண்ணப்பிக்க சரியான நேரம் இது. நிதி ரீதியாக, சொத்துக்களில்/வாகனங்களில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். நீங்கள் உங்கள் சொத்தை விற்க திட்டமிட்டால் கடந்த முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். உறவுகள் வாரியாக நீங்களும் உங்கள் துணையும் உங்கள் உறவை மேம்படுத்துவீர்கள் மற்றும் நீங்கள் ஒரு இனிமையான மற்றும் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். உடல்நலப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, பொதுவான இருமல் மற்றும் சளி போன்றவை உங்களைப் பாடாய்படுத்தும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் தொழில் செய்பவர்கள் வசதியாக இருப்பார்கள். வியாபாரிகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வணிகர்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்ய ஒரு பெரிய வாய்ப்பைப் பெறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, அன்புக்குரியவரிடமிருந்து விரும்பிய பதிலைப் பெறாமல் இருப்பீர்கள். நிதி ரீதியாக, நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நல பிரச்சனைகளால் கவலைப்படுவீர்கள். எனவே இக்காலத்தில் உங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். வைரஸ் தொற்றிலிருந்து உங்களைக் காப்பாற்ற நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் தொழில் ரீதியாக, பொறுப்புகள் அதிகரிக்கும். எனவே அதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். உங்கள் தொழிலில் மாற்றங்களைச் செய்து வெளிநாடு செல்ல விரும்பினால், உங்கள் முயற்சியை அதிகரிக்க இதுவே சரியான நேரம். எனினும் புதிய தொழில்முறை தொடர்புகளை உருவாக்க நேர்மையான முயற்சி தேவைப்படலாம். உறவுகளைப் பொறுத்தவரை, உங்கள் துணையுடன் உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான தூரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி ரீதியாக தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பண வரவில் ஓரளவு அதிகரிப்பு இருக்கும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் சரியான உணவு மற்றும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது, நிதி ரீதியான முதலீடுகளால் லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில தடைகளை சந்திக்க நேரிடும். இது மன அமைதியைக் குலைக்க வழிவகுக்கும். இருப்பினும், மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். இக்காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தொழில் ரீதியாக, சாத்தியமான வளர்ச்சி இருக்கும். உங்களின் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலம். உறவுகளைப் பொறுத்தவரை, திருமண வாழ்க்கை சீராக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் கண் பிரச்சனைகளை சந்திக்கலாம். ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் அன்புக்குரியவருடனான பிரச்சனை அல்லது மோதலால் மன அமைதியின்றி இருப்பார்கள். இக்காலம் சோதனை காலமாக இருக்கும். இக்காலத்தில் பொறுமை காக்க அறிவுறுத்தப்படுகிறது மற்றும் அதீத நம்பிக்கையை தவிர்க்க வேண்டும். அனைவருடனும் நட்புறவை பேண வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, காதலர்களுக்கு நல்ல காலம் அல்ல. திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு சில தடைகள் அல்லது தாமதங்கள் ஏற்படலாம். தொழில்ரீதியாக பணியிடத்தில் உள்ள சூழ்நிலையும் சுமுகமாக இருக்காது மற்றும் உங்கள் உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இத்தகைய பாதகமான சூழ்நிலைகளில் கூட நேர்மையின் பாதையை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக நீண்ட கால நிதி திட்டமிடலில் முதலீடு செய்ய சாதகமான நேரமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, எனவே உங்களை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் செலவுகள் அதிகமாக இருக்கலாம். தேவையற்ற செலவுகள் உங்களை கவலையடையச் செய்யலாம். சொத்து தொடர்பான விஷயங்களை கையாளும் போது நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள், ஏனெனில் ஏமாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நீங்கள் சில அசையா சொத்துக்களை விற்றால் ஒப்பந்தத்தை முடிப்பதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக இந்த மாற்றம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்காது, ஏனெனில் நீங்கள் உங்கள் வேலையை மாற்றும் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். எனவே உங்கள் தொழில் வாழ்க்கை தொடர்பான விஷயங்களைக் கையாளும் போது விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சற்று மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும், மேலும் வாழ்க்கையில் உங்களை தனிமைப்படுத்தும் சில கவலைகள் இருக்கலாம். எனவே நீங்கள் ஆன்மீகத்தின் பாதையை பின்பற்றவும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால், ஆரம்பத்தில் மிகவும் நல்ல மற்றும் சுபமான முடிவுகளைப் பெறுவீர்கள். மேலும கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பின் பலனைப் பெறக்கூடிய நேரமாகும். உங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். தொழில் ரீதியாக உங்களுக்கு ஒரு நல்ல காலமாகும், ஏனெனில் நீங்கள் உங்கள் வேலையில் முழுமையாக திருப்தி அடைவீர்கள். மேலும் உங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் துணை அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக, இது உங்களுக்கு ஒரு நல்ல காலம் மற்றும் இந்த காலத்தில் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் தரும். உறவு ரீதியாக, நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் சமூக வட்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள், மேலும் அவர்கள் உங்கள் உதவிக்கும் ஆதரவிற்கும் எப்போதும் தயாராக இருப்பார்கள். காதலர்கள் திருமணம் முடிப்பதற்கு இது சாதகமான நேரம் என்பதால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் இந்த பெயர்ச்சியின் போது நிகழலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் நன்றாக இருக்கும், ஆனால் ஆரோக்கியமான உணவை கடைபிடிக்கவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications











