Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது...
குரு பகவான் கும்ப ராசிக்கு செல்வதால் அதிகமாக கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
குரு பகவான் 2021 நவம்பர் 20 ஆம் தேதி காலை 11.23 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைகிறார். இப்போது கும்ப ராசிக்கு செல்லும் குருவால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
Guru Peyarchi Palangal 2021 to 2022 Predictions in Tamil : ஜோதிட சாஸ்திரத்தில் குரு என்று அழைக்கப்படும் வியாழன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தகைய குரு நவம்பர் 20 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது சில ராசிக்களுக்கு நல்ல பலன்களைத் தரும். இது தவிர குருவின் இந்த இடமாற்றம் நிறைய சாதகமான மாற்றங்களையும் ஏற்படுத்தும். குரு எப்போதும் அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த சுப கிரகம் ஒருவரது அனுபவங்கள், அறிவு மற்றும் புரிதலை விரிவுபடுத்துகிறது. கூடுதலாக குரு நம்பிக்கை, வளர்ச்சி, தாராள மனப்பான்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை குறிக்கிறது.

இப்படிப்பட்ட குரு பகவான் 2021 நவம்பர் 20 ஆம் தேதி காலை 11.23 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைகிறார். இப்போது கும்ப ராசிக்கு செல்லும் குருவால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலத்தில் திருமணமானவர்கள் மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான திருமண வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இக்காலத்தில் உங்களின் சோம்பலை கைவிட்டு சுறுசுறுப்பாக இருக்க முயல வேண்டும். மேலும் மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் ஆண்டு மிகவும் சாதகமான ஆண்டாக இருக்கும். ஏனெனில் தொழில் முயற்சிகள் மிகுந்த திருப்தியுடன் இருக்கும். தொழில் ரீதியாக, பலருக்கு நல்ல புதிய வேலைகள் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையப் பொறுத்தவரை, இக்காலத்தில் திருமணம், வீடு வாங்குதல் அல்லது குழந்தைப் பேறு போன்றவற்றில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஃபிட்டாக இருப்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக இடையூறுகள் மற்றும் சாத்தியமான தகராறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளன. இக்காலத்தில் சில தடைகளை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால் புதிய திட்டத்தை தொடங்க வேண்டாம். இடமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தாயின் உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் நிலுவையில் உள்ள பணி இப்போது நிறைவேறும். இந்த காலத்தில் உங்கள் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். வெற்றிக்கான சரியான வழியைத் தேடுபவர்கள் இறுதியாக அவர்கள் விரும்பியதை இப்போது பெறுவார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை அடைய முடியாத இலக்குகளை அடைய இது மிகவும் சாதகமான காலமாகும். தொழில் காரணமாக பயணம் மேற்கொள்வதற்கான நல்ல வாய்ப்பும் உள்ளது. உறவைப் பொறுத்தவரை, கோடையின் இறுதியில் அல்லது இலையுதிர் காலத்தில் ஒரு சிறந்த உணர்வு பிறக்கக்கூடும். மேலும் பிறக்கும் காதல் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாக மாறும்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் கடந்த ஆண்டில் நீங்கள் தொடங்கியதை மதிப்பாய்வு செய்து சரியாகச் சரிபார்க்க வேண்டும். உறவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மாமியாருடனான உறவில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு ஆரோக்கிய பிரச்சனைகளு உங்களை தொந்தரவு செய்யலாம் என்பதால் இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் துணை உங்களுக்கு ஒவ்வொரு செயலிலும் முழுமையாக ஆதரவளிப்பார். இது உங்கள் எல்லா பணிகளிலும் வெற்றி பெற உதவும். நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை உணர்வீர்கள். கூடுதலாக, முடிவெடுக்கும் திறன் மேம்படும் மற்றும் வளரும். காதலில் உள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும், ஏனெனில் இந்த ஆண்டு காதல் திருமணமாக மாறும். பணி மாறுதல் அல்லது இடமாற்றம் பற்றி யோசிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய வீடு அல்லது அபார்ட்மெண்ட் வாங்குவதற்கு பணம் செலவழிக்காதீர்கள். ஆரோக்கியமாக இருக்க தவறாமல் உடற்பயிற்சி செய்து எடை இழப்பு மற்றும் கொழுப்பைக் குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்காது மற்றும் விஷயங்கள் அனைத்தும் சிக்கலாக இருக்கலாம். ஏனெனில் சனி குருவை நடத்துவதால், எல்லாவற்றையும் சிக்கலாக்கும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க திட்டமிட்டால், நீங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கவனமாக இருக்க வேண்டும். உடல் சோர்வு அதிகரிக்கும். இரத்த ஓட்ட பிரச்சனை, எலும்பு கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும் என்பதால் கவனாக இருங்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் நிதி ரீதியாக இது உங்களுக்கு சவாலான நேரமாக இருக்கலாம்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இக்காலத்தில் உங்கள் மனதில் காதல் மலரும். நீங்கள் ஒரு காதல் உறவைத் தொடங்கினால், அது உண்மையில் தீவிரமான ஒன்றாக இருக்கலாம். குரு பெயர்ச்சி பொருளாதாரத் துறையில் சிறந்த ஒப்பந்தங்களை முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்தும். ஊரை மாற்றுவது, போட்டிகளில் வெற்றி பெறுவது அல்லது புதிய நிறுவனத்தால் பணியமர்த்தப்படுவது போன்ற எண்ணங்கள் இருந்தால் இதுவே நல்ல நேரம். இந்த காலம் உங்கள் குழந்தைகளுக்கும் ஏற்றது. திருமணமானவர்கள் குழந்தை பாக்கியம் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். குருபகவான் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், உங்கள் நிதிநிலையை நீங்கள் கண்காணிக்க வேண்டும். சண்டைகள் மற்றும் புகார்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டாம். உங்கள் இல்லற வாழ்க்கையை கவனித்துக்கொள்வது சிறந்தது. இந்த கட்டத்தில் குழந்தைகளுடன் சில சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம், எனவே அமைதியாக இருங்கள் மற்றும் நிலைமையை சமநிலைப்படுத்த முயற்சிக்கவும். இந்த காலகட்டத்தில் உங்கள் வீட்டை புதுப்பித்தல் மற்றும் கட்டுவது பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் திட்டமிடும் குறுகிய பயணங்கள் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருணம் முடிவாகும். நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்களானால் அல்லது புதிய நகரத்திற்குச் செல்ல விரும்பினால் அல்லது மேற்படிப்புக்குச் செல்ல விரும்பினால் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி ரீதியாக, புதிய வருமானத்திற்கு வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உடன்பிறந்தவர்களை முழு மனதுடன் ஆதரிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் தைரியமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் கொஞ்சம் சோம்பேறியாகவும் மாறலாம். இது உங்கள் வழக்கமான வேலையில் தடைகளை உருவாக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இப்பெயர்ச்சியின் போது, நீங்கள் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையைத் தொடங்கியிருந்தால், இந்த ஆண்டு நிதி ரீதியாக உங்களுக்குச் சாதகமான ஆண்டாக இருக்கும், அது உங்களுக்குப் பயனளிக்கும். தொழில்ரீதியாக, இந்த காலகட்டத்தில் எந்த ஆபத்தும் எடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் தற்போதைய பணி நிலையில் ஸ்திரத்தன்மையைக் கண்டறியவும். பொருளாதார ரீதியாக விரிவாக்கம் செய்வதற்கு இது ஒரு சிறந்த காலம், எனவே புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உங்களுக்கு சில சிரமம் இருக்கலாம் ஆனால் காலப்போக்கில் இந்த சிக்கலை நீங்கள் சமாளிப்பீர்கள். இந்த காலத்தில் உங்கள் குடும்பத்தில் இருந்து மகிழ்ச்சியை அடைவதற்கான வலுவான யோகம் உள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு குரு செல்கிறார். நீங்கள் ஒருவருடன் சேர்ந்து பணிபுரிந்தால் அல்லது வருடத்தின் தொடக்கத்தில் குறிப்பாக மார்ச் வரை அந்த நபருடன் இந்த பயணத்தை மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மார்ச் மாதத்திற்குப் பிறகு சிறந்த செய்திகள் வரும், வேலைகளை மாற்றவும், நகரங்களை மாற்றவும், புதிய வணிகத்தில் பணத்தை முதலீடு செய்யவும் இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். புதிய நட்பை குறைத்து மதிப்பிடாதீர்கள், தனிமையில் இருக்காதீர்கள், சுதந்திரத்திற்கான உங்கள் தேவைகளை ஒதுக்கி வைக்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் இந்த ஆண்டு காதல் மிகுந்த திருப்தியை அளிக்கும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இந்த காலகட்டத்தில் சில தடைகளை சந்திக்க நேரிடலாம் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி இந்த பெயர்ச்சியின் போது சிறிது சிரமத்தை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக நிறைய செலவுகள் இருக்கும் மற்றும் இது உங்களுக்கு சுமையாக இருக்கலாம். செலவழித்த பணத்தை கவனமாக ஆராய்ந்து புத்திசாலித்தனமாக செலவிட வேண்டும். தொழில்ரீதியாக, இந்த காலகட்டத்தில் சில எதிரிகள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். அன்பைப் பொறுத்த வரையில், குடும்பத்தில் சிரமங்கள், துணையுடன் தவறான புரிதல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் நேசிக்கப்படுவதையும் பாராட்டுவதையும் உணராமல் இருக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம் மற்றும் உங்கள் காலில் நீங்கள் சிறிது வலியை உணரலாம். முக்கியமாக மீன ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு மூலங்களிலிருந்து லாபம் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.



Click it and Unblock the Notifications











