Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
2021 குரு பெயர்ச்சியால் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
குரு பகவான் குடும்ப ராசிக்குள் செல்வதால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக நேர்மறையான பலன்களை பெறப் போகிறார்கள். அத்தகைய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கிரக பெயர்ச்சிகளில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிகள் ஒருவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவம்பர் 20 ஆம் தேதி குரு பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்குள் சென்று 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி வரை இருப்பார். இந்த குரு மாற்றம் வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும். ஒருவரது ஜாதகத்தில் குருவின் நிலையைப் பொறுத்து, அவரது வாழ்க்கை அதிர்ஷ்டமானதாக இருக்குமா இல்லையா என்பது சொல்லப்படுகிறது.

இருப்பினும் குரு பகவான் குடும்ப ராசிக்குள் செல்வதால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அதிக நேர்மறையான பலன்களை பெறப் போகிறார்கள். அத்தகைய ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கும்பம்
இதுவரை பல பிரச்சனைகளை சந்தித்து வந்த கும்ப ராசிக்காரர்கள் திடீரென்று நேர்மறை ஆற்றலை அனுபவிப்பார்கள். இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் சுயமரியாதையும் அதிகரிக்கும். மேலும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால் இந்த குரு பெயர்ச்சியால் அவர்களுக்கு தேவையான ஸ்திரத்தன்மை கிடைத்துள்ளது. வாழ்க்கையில் ஒரு தெளிவு ஏற்படும். உங்கள் இலக்குகளை அடைய தீவிரமாக செயல்பட்டு, வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம்
இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தை வெளிப்படுத்தக்கூடும். திருமண வாழ்க்கை மேம்படும். அன்புக்குரியவர்களுடனான உறவுகள் மேம்படும். லாபம் அதிகரிக்கும் போது, வியாபார முயற்சியும் அதிகரிக்கும். இக்காலத்தில் குடும்பத்தின் ஆதரவும், சமூக மதிப்பும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம்.

மேஷம்
கும்பத்தில் நுழையும் குருவால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். வாழ்வில் உள்ள பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் புதிய வேலை கிடைக்கும். சிறப்பான நிதி ஆதாயம் உண்டாகும். லட்சுமி தேவியின் சிறப்பு அருளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணம், வருமானம் போன்றவற்றில் பலன்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும், பணத்தை முதலீடு செய்வதில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இல்லற வாழ்வில் ஒற்றுமை உண்டாகும். இது அவர்களுக்கு திருப்தியை அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க நேரிடும். உங்களின் அழகும் நேர்மறையான எண்ணமும் செயல்களும் மற்றவர்களைக் கவரும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் முன்பை விட மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களின் எண்ணமும், படைப்புத் திறனும் உச்சத்தில் இருக்கும். மேலும் சில புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள இது ஒரு நல்ல காலம்.



Click it and Unblock the Notifications