Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
2022 குரு பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
குரு பகவான் கும்ப ராசியில் சஞ்சரித்துள்ளார். ஆனால் 2022 ஆம் ஆண்டில் குரு பகவான் ஏப்ரல் 12 ஆம் தேதி கும்பத்தில் இருந்து தனது சொந்த ராசியான மீன ராசிக்கு செல்லவிருக்கிறார்.
பொதுவாக கிரக பெயர்ச்சிகள் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்களில் சனி மற்றும் குரு பெயர்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவார். ஜோதிடத்தில், குரு பகவான் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளார். மற்ற கிரகங்களை விட குரு சிறந்த பலன்களைத் தரக்கூடியவர்.

குரு பெயர்ச்சி மற்றும் ஒருவரது ஜாதகத்தில் குருவின் நிலை ஒருவரது வாழ்வில் சிறப்பான விளைவை ஏற்படுத்துகிறது. தற்போது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். 2022 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளோம். இந்த புதிய ஆண்டில் குரு தனது ராசியை மாற்றவுள்ளார்.
இப்போது குரு பகவான் கும்ப ராசியில் சஞ்சரித்துள்ளார். ஆனால் 2022 ஆம் ஆண்டில் குரு பகவான் ஏப்ரல் 12 ஆம் தேதி கும்பத்தில் இருந்து தனது சொந்த ராசியான மீன ராசிக்கு செல்லவிருக்கிறார். இந்த குருவின் மாற்றம் சில ராசிகளுக்கு துரதிர்ஷ்டவாசமாகவும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாகவும் இருக்கப் போகிறது. இப்போது 2022 ஆம் ஆண்டில் நடக்கும் குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ஜோதிடத்தில் குரு பகவான்
ஜோதிடத்தின் படி, குரு பகவான் கல்வி, மரியாதை, திருமணம், அதிர்ஷ்டம், ஆன்மீகம் மற்றும் குழந்தைகளின் ஆதாரமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமையான நிலையில் இருந்தால், அவர்கள் பல வழிகளில் நற்பலன்களைப் பெறுவார்கள். அதுவும் வாழ்வில் செல்வம், கௌரவம், உயர் அந்தஸ்து ஆகியவை கிடைக்கும். இப்படிப்பட்ட குரு தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாவார்.

கன்னி
2022 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார். இந்த ராசிக்காரர்கள் ஆண்டின் நடுப்பகுதியில் சம்பள உயர்வைப் பெறுவார்கள். பணியிடத்தில் வெற்றியைக் காண்பார்கள். இது நிதி நிலைமையை மேம்படுத்தும். குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
2022 ஆம் ஆண்டில் குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசிக்கு செல்வது விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல யோகத்தை அளிக்கும். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டில் நேர்மறையான முடிவுகளைத் தரும். பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணம் அதிகம் சேரும். இது உங்களின் வங்கி இருப்பை கணிசமாக அதிகரிக்கும்.

தனுசு
2022-ல் குரு பகவான் மீன ராசிக்கு செல்வதால், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். கடந்த ஆண்டில் சந்தித்த சவால்கள் முடிவுக்கு வரும். பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான பல பொன்னான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிலத்தில் முதலீடு செய்வது உங்களின் மூலதனத்தை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

கும்பம்
2022 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் விரும்பிய வேலையைப் பெறுவதோடு, அதில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இந்த ஆண்டின் குரு பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களைத் தரும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.



Click it and Unblock the Notifications
