For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கும்பம் செல்லும் குருவால் ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு பின் இந்த 4 ராசிக்கு சூப்பரா இருக்க போகுதாம்...

பொதுவாக கிரகங்கள் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசியிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி இடம் பெயர்கிறார்.

|

நவகிரகங்களில் சுப கிரகமாக கூறப்படுபவர் குரு பகவான். இவருக்கு எப்போதுமே தனிச்சிறப்பு உண்டு. பொதுவாக கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசியிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி இடம் பெயர்கிறார்.

Jupiter Transit 2021 in Aquarius on 06 April 2021 Effects on Zodiac Signs in Tamil

ஜோதிடத்தில், குரு பகவான் இருக்கும் இடத்தை விட, அவர் பார்க்கும் இடம் சிறப்பானதாகவும், பலமடைவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுகின்றனர். இப்போது 2021 ஏப்ரல் 6 ஆம் தேதி நிகழவிருக்கும் குருப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் போகின்றன. தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள் இந்த காலத்தில் சில புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை சம்பாதிக்கலாம். இந்த ராசிக்காரரின் ஜாதகத்தில் குரு பலவீனமான நிலையில் இருந்தால், அவர்கள் இக்காலத்தில் சாதகமற்ற முடிவுகளைப் பெறலாம். தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை, இது சிறந்த காலம். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள், பொருளாதார மற்றும் சமூக விஷயங்களைக் கையாள அதிக நேரம் கிடைக்கும். இப்பெயர்ச்சி காலம் நடிகர்களுக்கும் இசைக்கலைஞர்களுக்கும் நல்ல முடிவுகளைத் தரும். நிதி ரீதியாக நீங்கள் உங்கள் உடல்நலத்திற்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இக்காலம் ஆனந்தமிக்கதாக இருக்கும். திருமணமாகாதவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல், மே மாதங்களைத் தவிர மற்ற காலங்களில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், வயதானவர்கள் கால் வலி, மூட்டு வலி அல்லது முதுகு வலியை சந்திக்கலாம். மேலும் இக்காலத்தில் உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக விரும்பிய முடிவுகளைப் பெற முடியாது. தற்போதைய வேலையைத் தொடர அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இக்காலத்தில் உங்களின் நற்பெயருக்கு இடையூறு விளைவிக்கும் சூழ்நிலைகளில் பொறுமையைக் கையாளவும், சிக்கலான சூழ்நிலைகளில் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பெரியோர்களின் வழிகாட்டுதல்களின் படி முடிவுகளை எடுக்க முயலுங்கள். உறவுகளைப் பொறுத்தவரை, இக்காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கையை விட வேலையில் அதிக கவனம் செலுத்துவதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பருவகால மாற்றங்களால் சில சிறிய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். மேலும் இக்காலத்தில் வெளியே உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், வயிற்று வலியால் கஷ்டப்படுவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் தொழில் மற்றம் வணிகத்தில் ஒரு சிறந்த முடிவுகளைத் தரும். இக்காலத்தில் பல புதிய வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும். அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபவர்கள், சில சாதகமான முடிவுகளைப் பெறலாம். வணிகம் செய்பவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பெறலாம். நிதி ரீதியாக, இக்காலம் நல்லதாக இருக்கும். வங்கி மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் இது நீண்ட காலத்திற்கு லாபத்தைப் பெற உதவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமான தம்பதிகள் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளலாம். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை கண்டுபிடிப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க வீட்டிலேயே சமைத்து சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் உறவின் அடிப்படையில் அதிக சக்தியைக் கொடுக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளைத் தரக்கூடும். உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். வேலை தேடுபவர்கள் புதிய வாய்ப்புகளை சந்திக்கக்கூடும். திருமணமானவர்கள், துணையுடன் நல்ல நேரத்தை அனுபவிக்கலாம். மேலும் கும்பத்தில் உள்ள குரு, உங்கள் உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுடனான உறவுகளுக்கு ஒரு நல்ல நேரத்தைக் கொண்டுவருகிறது. நிதி ரீதியாக இக்காலத்தில் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். எனவே, எந்தவொரு முக்கியமான முதலீடுகளையும் செய்வதற்கு முன்னர் அனுபவசாலிகளிடம் இருந்து சரியான வழிகாட்டுதலைப் பெற அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் பணியிடத்தில் உங்கள் நேர்மையான முயற்சிகள் உங்கள் இலக்கை விரைவில் அடைய உதவும். மாணவர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் படிப்பை முடிக்க வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக பங்குச் சந்தையில் எந்த முதலீடும் செய்வது நல்லதல்ல. நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் இரண்டு முறை சிந்திக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில், திருமணமான தம்பதிகள் நல்ல பிணைப்பை வளர்ப்பதற்கான வாதங்களைத் தவிர்க்கவும். ஆனால் உறுதியான உறவுகளில் உள்ள பூர்வீகவாசிகள் சாதகமான முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் சிறு தூசியிலிருந்து தொற்றுநோயைப் பெறலாம் அல்லது விழுவதால் காயமடையக்கூடும். சிறு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் கலவையான முடிவுகளைத் தருவதாக இருக்கும். தொழில் ரீதியாக, அவசரப்பட்டு இருக்கும் வேலையை ராஜினாமா செய்ய வேண்டாம். ஏனெனில் விரும்பிய வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போகும். நீண்ட கால முதலீட்டிற்குத் திட்டமிட்டிருந்தால், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் ஆனந்தமான நேரத்தை அனுபவிப்பார்கள். ஏனெனில் இக்காலம் உங்கள் துணையுடனான கடந்த கால பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க உதவி, அவர்களுடனான உறவை மேம்படுத்த உதவும். திருமணமாகாதவர்கள் விரைவில் தங்கள் துணையை சந்திப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகள், சளி அல்லது குடல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே மருத்துவரின் ஆலோசனையின்படி செயல்படுவது இதுபோன்ற கவலைகளிலிருந்து விரைவில் நிவாரணம் பெற உதவும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். தொழில் ரீதியாக, பணிபுரிபவர்கள் கடினமாக உழைக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஏனெனில் மே மற்றும் ஜூலையில் அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பைப் பெறப் போகிறார்கள். போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் வெற்றி பெறலாம். மார்கெட்டிங் மற்றும் விற்பனைத் துறையில் உள்ளவர்கள், இலக்குகளை அடைய அதிக பயணம் செய்ய வேண்டியிருக்கும். நிதி ரீதியாக, துலாம் ராசிக்காரர்கள் நல்ல கொள்கைகளில் முதலீடு செய்ய இது ஒரு சாதகமான நேரம். இந்த காலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். அதே சமயம் தேவையற்ற செலவுகளைச் செய்ய இது உங்களை வலியுறுத்தும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள் தங்கள் உறவில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நல்ல தூக்கத்தையும் சரியான உணவையும் உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணுங்கள். முக்கியமாக உங்களை நீரேற்றமாக வைத்திருக்க மறக்காதீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும். தொழில் ரீதியாக, படிப்பிற்காக வெளிநாடு செல்ல நல்ல வாய்ப்பைப் பெறலாம். வேலையில் உள்ளவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வாய்ப்புகளைப் பெற்று வெற்றி காண்பார்கள். அரசு தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நிதி ரீதியாக இந்த காலம் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும், ஏனெனில் இக்காலம் நல்ல முதலீடுகளுக்கான வாய்ப்புகளைத் தரும். பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பணத்தை மிச்சப்படுத்தி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சரியான முதலீடுகளைச் செய்ய வேண்டும். கூட்டு வணிக உரிமையாளர்கள் அதிகபட்ச லாபத்தைப் பெறலாம். திருமணமாகாதவர்கள் உறவில் ஈடுபடலாம். திருமணமான தம்பதிகள் குடும்பத்துடன் ஒரு ஆனந்தமான நேரத்தை அனுபவிக்கக்கூடும். மேலும் உறவில் இருப்பவர்கள் தங்கள் பிணைப்பை பலப்படுத்துவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சில வயிற்று பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த பெயர்ச்சியின் போது பெரியவர்கள் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இதனால் இந்த ராசிக்கார மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற கூடுதல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வேலையில் உள்ளவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும். மேலும் வேலை தொடர்பான நோக்கங்களுக்காகவும் பயணிக்க வேண்டியிருக்கும். நிதியைப் பொறுத்வரை, பெரிய முதலீடுகளை செய்யும் முன் பெரியோரிகளின் வழிகாட்டுதல்களின் படி செய்யுங்கள். இக்காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். திருமணமானவர்கள், துணையுடன் குறுகிய பயணத்தை மேற்கொள்ளலாம். உறவில் இருக்கும் தம்பதிகள் ஆனந்தமான நேரத்தை செலவழித்து, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகள் இக்காலத்தில் கழுத்து வலியை சந்திக்கலாம். பெரியவர்கள் கால்களில் வலியை சந்திக்க நேரிடும். எனவே வழக்கமான சோதனைகளுக்கு தவறாமல் சென்று உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். இக்காலம் உங்கள் செல்வத்தை மேம்படுத்தி உயர்த்தும். உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவதோடு, ஆனந்தமான வாழ்க்கையை வாழ்வீர்கள். தொழில் ரீதியாக, விரும்பிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். மேலும் நீங்கள் மிகவும் விரும்பும் துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறலாம். உங்கள் கடின உழைப்பிற்கான வெகுமதியை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் பெறுவீர்கள். நிதி ரீதியாக, இக்காலம் சவால் நிறைந்ததாக இருக்கும். எந்த ஒரு கடனையும் வாங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நிதிகளில் முதலீடு செய்ய அல்லது நிலையான வைப்புகளை வைக்க இது சிறந்த நேரம். கடந்த காலத்தில் தங்கள் துணையுடன் தவறான புரில்களால் எதிர்கொண்ட பிரச்சனைகளை சரிசெய்ய இக்காலம் சிறந்ததாக இருக்கும். இந்த குருவின் இடமாற்றத்தின் போது, ​​உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் உடன்பிறப்புகள் தொடர்பாக நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படக்கூடும். எனவே அனைவருடனும் நல்லுறவைப் பேண முயலுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு சிறு உடல்நல பிரச்சனைகள் மற்றும் தசை வலி ஏற்படலாம். எனவே முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு குரு செல்கிறார். இந்த பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்த உதவும். அதோடு இது உங்கள் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்கும். தொழில் ரீதியாக, இக்காலம் விரும்பிய இலக்கை அடைய பல தடைகளை உருவாக்கக்கூடும். ஆனால், இது உங்கள் குறிகோள்களை நேர்மறையாக அடைய உதவும். பணிபுரிபவர்கள், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் சம்பள உயர்வு போன்ற நற்செய்திகளைப் பெறலாம். அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வெற்றியை அடைவார்கள். நிதி ரீதியாக, முதலீடுகள் எதுவும் செய்யாமல் இருக்கவும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீடுகளைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆயினும்கூட, மெதுவாகவும், சீராகவும், உங்கள் நிதி இலக்குகளை நீங்கள் அடைய முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமாகாதவர்கள், ஜூன் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நல்ல வரனைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதய பிரச்சனை உள்ளவர்கள், பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அதே சமயம் இளைஞர்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கிமாகவும் இருப்பார்கள்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு குரு செல்கிறார். குருவின் இந்த பெயர்ச்சி மீன ராசியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். தொழில் ரீதியாக, வேலை கிடைத்து விரும்பிய நிலையை அடைவார்கள். வேலை மாற்ற திட்டமிட்டுள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் சாதகமான முடிவுகளைப் பெறுவார்கள். வணிகம் செய்பவர்கள், வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். நிதி ரீதியாக, வணிகர்கள் லாபகத்தை ஈட்ட வாய்ப்புள்ள அதே சமயம் தேவையற்ற செலவுகளையும் சந்திக்கக்கூடும் என்பதால், இக்காலம் உங்களுக்கு கலவையான முடிவுகளை வழங்கும். இக்காலத்தில் கடன்கள் அல்லது பணம் கொடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உங்கள் பணச் செலவு உயரும் என்பதால் கவனமாக இருங்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகளில் உள்ளவர்கள் தங்கள் துணையுடன் சில தவறான புரிதல்களை சந்திக்க நேரிடும். எனவே பெரியவர்களின் உதவியுடன் உறவு சிக்கல்களை தீர்க்க முயற்சிப்பது நல்லது. திருமணமானவர்களின் மன அமைதிக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மாமியாருடன் வாதிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமான தம்பதிகள் தேவையற்ற செலவு தொடர்பான சண்டையில் ஈடுபடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயதானவர்கள் மற்றும் பெண்கள், சிறுநீரக பாதைத் தொற்று, தசை வலி அல்லது வயிற்று வலியால் பாதிக்கப்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jupiter Transit 2021 in Aquarius on 06 April 2021 Effects on Zodiac Signs in Tamil

Jupiter Transit 2021 in Aquarius Effects on Zodiac Signs in Tamil: The Jupiter Transit 2021 in Aquarius will take place on 06 April 2021. Learn about remedies to perform in tamil.
Desktop Bottom Promotion