Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கும்ப ராசியில் உதயமாகும் குரு பகவானால் உஷாராக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
குரு பகவான் 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி தனது சொந்த ராசியான மீன ராசிக்கு செல்கிறார். அதற்கு முன் குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமானார். கும்ப ராசியில் அஸ்தமனமான குரு பகவான் 2022 மார்ச் 20 ஆம் தேதி உதயமானார்.
ஜோதிடத்தில், சில கிரகங்கள் ராசியை மாற்றுவதற்கு முன் அஸ்தமனமாகி, உதயமாவது வழக்கம். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு பகவான் 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி தனது சொந்த ராசியான மீன ராசிக்கு செல்கிறார். அதற்கு முன் குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமானார். கும்ப ராசியில் அஸ்தமனமான குரு பகவான் 2022 மார்ச் 20 ஆம் தேதி உதயமானார்.

பொதுவாக கிரகங்கள் அஸ்தமன காலத்தில் நற்பலன்களை விட கெடுபலன்களை கொடுக்கும். குரு அஸ்தமனத்தால் பல ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை சந்தித்திருப்பார்கள். ஆனால் குரு உதயமாகி இயல்பு நிலையில் பயணிக்கும் போது, 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் குரு உதயமாவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். வருமானம் பெருகும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறும் அதிர்ஷ்டம் உள்ளது. பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் வெற்றியைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் குரு உதயமாவதால், கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாண்மையைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வேலையை மாற்ற முயற்சித்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு இருக்காது. சொந்தக்காரர்களுடன் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள நேரிடும். பல சாதகமற்ற சூழ்நிலைகளால் வேலைகளில் மாற்றத்தைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மூட்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் வேலையில் மாற்றங்களைக் காணலாம் அல்லது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் லாபத்தைப் பெறுவார்கள். கூட்டாண்மையில் ஈடுபட்டிருந்தால், முழுமையான வருமானத்தை ஈட்ட முடியும் மற்றும் போட்டியாளர்களை விட முன்னேற முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் ஒரு நல்ல பிணைப்பைப் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் சில நேரங்களில் முன்னேற்றத்தில் சில தடைகளை சந்திக்க நேரிடும். பரம்பரை சொத்துக்களைப் பெறலாம். தொழிலைப் பொறுத்தவரை, வேலையில் மாற்றம் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். அப்படி பெறும் வாய்ப்புக்கள் சற்று சவாலானதாகவே இருக்கும். வியாபாரிகள் போட்டியாளர்களை மனதில் கொண்டு திட்டமிட்டு வியாபாரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மிதமான லாபத்தையே பெறக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழமாட்டீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் பணிபுரிபவர்கள் தங்கள் தொழிலில் நல்ல முடிவுகளைப் பெறலாம். சவாலான சூழ்நிலைகளை எளிதில் சமாளிப்பார்கள். இருப்பினும், பணிபுரிபவர்கள் இக்காலத்தில் சற்று உஷாராக இருங்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் புதிய வணிகத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பணவரவு நன்றாக இருக்கும். பணத்தை அதிகம் சேமிக்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர பிணைப்பு அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் தொழில் மற்றும் உறவுகளைப் பொறுத்தவரை நல்ல மற்றும் கெட்ட முடிவுகளைப் பெறக்கூடும். எதிர்பாராத வேலை இடமாற்றங்கள் அல்லது வேலை மாற்றம் போன்ற சில மாற்றங்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் சுமாரான லாபத்தைப் பெறுவார்கள். பணப்புழக்கம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும் மற்றும் தங்கள் வாழ்க்கைத் துணைகளுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இக்காலத்தில் பண ஆதாயங்களைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் காதல் உணர்வுகள் மேம்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். ஆனால் அந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் திறனைப் பெற்றிருப்பார்கள். வியாபாரிகள் தங்கள் வணிக உத்திகளை மாற்றினால், தங்கள் போட்டியாளர்களை விட முன்னேறலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அனுசரித்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கைத் தரத்தில் சில மாற்றங்களைக் காணக்கூடும். வேலை மாற்றம் அல்லது வெளிநாட்டிற்கு இடமாற்றம் பெற வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மாற்றங்கள் நன்றாக இருக்கும். வியாபாரிகள் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறக்கூடும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். உறவில், பரஸ்பர புரிதல் காரணமாக உங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கம் இருக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் பண விஷயத்தில் சுமூகமான முடிவுகளைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக, வேலையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்காது. தொழிலை நடத்தை நிதியை பராமரிக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல் காரணமாக ஈகோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மூட்டு பிரச்சனைகளை சந்திக்கலாம்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் பணியிடத்தில் இருக்கும் கடினமான சவால்கள் காரணமாக வேலை அழுத்தம் மற்றும் திருப்தியின்மை ஆகியவற்றை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் அதிக லாபத்தைக் காண முடியாது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சில ஈகோ பிரச்சினைகளால் தங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதலை உருவாக்க முடியாது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக மன அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.



Click it and Unblock the Notifications