Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
12 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் குரு வக்ரமானதால் நவம்பருக்குள் இந்த ராசிகளின் நிதி நிலை உயரும்...
ஜோதிடத்தின் படி, குரு வக்ரமானதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், லாபகரமானதாகவும் இருக்கும்.
கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்கையையும் பாதிக்கும். அந்த வகையில் 2022 ஏப்ரல் மாதத்தில் குரு தனது சொந்த ராசியான மீன ராசிக்கு சென்றார். அதன் பின் ஜூலை மாதத்தில் குரு மீன ராசியில் வக்ர நிலையில் மாறினார். இந்த வக்ர நிலையில் குரு நவம்பர் 24 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைவார்.

ஜோதிடத்தின் படி, குரு வக்ரமானதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், லாபகரமானதாகவும் இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ரமாகியுள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடு. ஆகவே இந்த ராசிக்காரர்களின் வருமானம் உயர வாய்ப்புள்ளது. புதிய வழிகளில் வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பல முக்கிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கு சாதகமான காலமாகும். ஆராய்ச்சியுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். பழைய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ரமாகியுள்ளார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு அல்லது வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல லாபத்தைத் தரும். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடையும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீதிமன்ற விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ரமாகியுள்ளார். இதனால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலை விஷயமாக சிறு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணத்தால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications