Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
குரு வக்ர பெயர்ச்சியால் ஜூலை 29 முதல் அடுத்த 4 மாதம் இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது..
சொந்த ராசியில் குரு பகவான் வக்ர நிலையில் மாறுவதால், 2022 ஜூலை 29 முதல் அடுத்த 4 மாதங்கள் எந்த ராசிகளுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.
ஒவ்வொரு வருடமும் ராசியை மாற்றும் குரு பகவான் 2022 ஜூலை 29 ஆம் தேதி தனது சொந்த ராசியான மீன ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கிறார். வக்ர நிலை என்பது பிற்போக்கு இயக்கம் என்று பொருள். குரு பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி தனது சொந்த ராசியான மீன ராசிக்கு சென்றார். இந்த குரு மீன ராசிக்கு மட்டுமின்றி, தனுசு ராசிக்கும் அதிபதியாவார். குரு பகவான் கடக ராசியில் வலுவாகவும், மகர ராசியில் பலவீனமாகவும் இருப்பார்.

பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதன் பலன்கள் சற்று மோசமாகவே இருக்கும். இருப்பினும் சில ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சொந்த ராசியில் குரு பகவான் வக்ர நிலையில் மாறுவதால், 2022 ஜூலை 29 முதல் அடுத்த 4 மாதங்கள் எந்த ராசிகளுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம்
குரு வக்ரமாவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் அனைத்து திட்டங்களிலும் வெற்றி கிடைக்கும். பொருள் வசதி அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் யாரேனும் ஒருவருடன் தகராறு ஏற்பட்டால், தற்போது அது விலகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் விரும்பிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்
குரு வக்ர காலத்தில் கடக ராசிக்காரர்களுக்கு குருவின் சிறப்பான அருள் கிடைக்கும். மாமியார்-மாமனார் பக்கத்தில் இருந்து நன்மைகள் கிடைக்கும். உறவுகள் இக்காலத்தில் மேம்படும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புக்கள் அமையும். இக்காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்கள் சில நல்ல நடவடிக்கைகளை எடுக்கலாம். வேலை தேடிக் கொண்டிருந்தால், அந்த முயற்சியில் வெற்றி கிடைத்து, நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும் புகழும் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். பொருளாதார முன்னேற்றத்திற்கான கதவுகள் இக்காலத்தில் திறக்கப்படும். குடும்பம் மற்றும் வாழ்க்கை துணையிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம். உங்கள் முடிவு சமூகத்தில் பாராட்டப்படும். மொத்தத்தில், குருவின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாவிதமான முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் குரு வக்ரமாவதால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தடைபட்ட பணிகள் இக்காலத்தில் முடிக்கப்படும். பொருளாதார முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கப்படும். உத்தியோகத்தில் சில சாதனைகளைப் புரிவீர்கள். இதனால் உங்கள் மீதான நம்பிக்கை இன்னமும் அதிகரிக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்ர காலத்தில் எவ்வித நிதி பிரச்சனையும் இருக்காது. முதலீடுகளில் இருந்து நிறைய பணம் கிடைக்கும். இது மட்டுமின்றி, சொத்துக்களை விற்பதன் மூலம் நல்ல பணம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாகவும், சந்தோஷம் நிறைந்தும் இருக்கும். திடீர் பண வரவு உண்டு. எதிரிகள் இக்காலத்தில் வெல்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களைக் காண வாய்ப்புள்ளது.

மீனம்
சொந்த ராசியில் குரு வக்ரமாவதால், பலன் சற்று கலவையாக இருக்கும். கடினமாக உழைத்தால் தான் வெற்றியும், நல்ல பலனும் கிடைக்கும். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பணத்தை முதலீடு செய்வீர்கள். இது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications