Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மீனத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் நவம்பர் 24 முதல் இந்த 5 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது...
2022 நவம்பர் 24 ஆம் தேதி குரு மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வக்ர நிவர்த்தியடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
ஜோதிடத்தில் குரு மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. இந்த குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு ஆண்டு ஆகும். ஒருவரது ஜாதகத்தில் குரு வலுவான நிலையில் இருந்தால், அவர்களின் நிதி நிலை சிறப்பாக இருப்பதோடு, சமூகத்தில் கௌரவமும் மேம்படும் என்பது ஐதீகம். இந்த குரு தற்போது தனது சொந்த ராசியான மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். கிரகங்கள் வக்ர நிலையில் பயணிக்கும் போது அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தாமதமாவதோடு, நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்நிலையில் 2022 நவம்பர் 24 ஆம் தேதி குரு மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வக்ர நிவர்த்தியடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இப்போது மீன ராசியில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வின் பல விஷயங்களில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் மற்றும் நல்ல பண பலன்களும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புவோருக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். தொழிலில் இக்காலத்தில் முதலீடு செய்தால், அதற்கு சாதகமான பலன் கிடைக்கும். கூட்டு வணிகம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளியின் முழு ஆதரவைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மேம்படும்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே இக்காலத்தில் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தால், அதில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய முதலீடு செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் உறவுகள் மேம்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே இக்காலத்தில் வேலையில் முன்னேற்றத்திற்கான நிறைய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் பல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களின் செயல்களில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைப்போருக்கு இக்காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் மிகச்சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications