Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Guru Margi 2022: குரு வக்ர நிவர்த்தியடைவதால் நவம்பர் 24 முதல் இந்த ராசிக்காரர்களின் பிரச்சனை தீரப்போகுது..
2022 நவம்பர் 24 ஆம் தேதி மீன ராசியில் குரு வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்க தொடங்குகிறார். இப்போது மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவானால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் குரு மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. இந்த குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு ஆண்டு காலம் ஆகும். அந்த வகையில் குரு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சென்றார். அதன் பின் 2022 ஜூலை 29 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து 2022 நவம்பர் 24 ஆம் தேதி மீன ராசியில் குரு வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்க தொடங்குகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால், அவர்கள் நல்ல செல்வமும், மரியாதையும் பெற்றிருப்பார்கள். அதுவே மோசமான நிலையில் இருந்தால், வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவானால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணியிடத்தில் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். தாயின் ஆரோக்கியம் முன்பை விட நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு திருமணத்தில் தாமதம் ஏற்படும். பங்குச் சந்தையில் பணிபுரிபவர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் நண்பர்களின் உதவியால் வெற்றிகரமாக முடிக்கப்படும். தைரியம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். புதிய முதலீடு செய்ய சிறந்த காலம்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே இக்காலத்தில் வேலையில் அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணர்வீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்காமல் போகும். அரசு வேலை செய்பவர்கள் வெற்றை பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த காலத்தில் உங்கள் செலவுகளை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனையை சந்திப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணியிடத்தில் இருந்த தடைகள் நீங்கும். உயர் கல்வி பயில விரும்புபவர்களின் ஆசை நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நற்செய்திகளைப் பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் நல்ல பணம் வரவு உண்டு. இக்காலத்தில் உங்கள் பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அப்பணத்தை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சிறிது டென்சனை உணரலாம். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் வியாபாரிகள் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகள் ஊக்கமளிப்பார்கள். கூட்டு தொழில் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். ஊடகம் மற்றும் எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள்.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கோபம் அதிகம் கொள்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபடுபவர்ள் பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைத்தால், கவனமாக முடிவெடுக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் அனைத்திலும் ஆதரவாக இருக்கும். தந்தையின் உதவியால் புதிய வேலையை தொடங்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வால் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் குடும்பத்திற்கு நிறைய பணத்தை செலவிடக்கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் நிதி பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு இக்காலத்தில் வெற்றி கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் திருமண வரன் கிடைக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புக்கள் அமையும். ஆனால் உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படலாம். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்றிருப்பீர்கள். எழுத்து, ஊடகத் துறையில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே இக்காலத்தில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டில் இருந்து நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல காலம். ஆரோக்கிய விஷயத்தில் சற்று உஷாராகவே இருங்கள்.

மீனம்
மீன ராசியின் முதல் மற்றும் லக்ன வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்களின் வேலை அதிகம் பாராட்டப்படும். ஆற்றல் மிக்கவராக விளங்குவீர்கள். பங்குச் சந்தையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் இக்காலத்தில் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications