Just In
- 31 min ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 1 hr ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 1 hr ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
- 1 hr ago
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு
Don't Miss
- News
ராப்ரி - சோனியா! அமித் ஷாவின் ராஜதந்திரத்தை தூசு தட்டிய 2 "பெண்கள்".. பீகாரில் பாஜக வீழ்ந்தது எப்படி
- Movies
அண்ணனா? ஃபிரண்டா?...விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் ஷாம் ரோல் இதுதானா?
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Finance
ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
2022 ஜூலை மாசம் எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கப் போகுது தெரியுமா?
2022 ஆம் ஆண்டின் ஏழாவது மாதத்தில் நுழைய உள்ளோம். கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும். அந்த வகையில் ஜூலை மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமான ஜூலை மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஜூலை மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஜூலை மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பல வழிகளில் அற்புதமாக இருக்கும். தொழில் ரீதியாக சராசரியாக இருந்தாலும், கடின உழைப்பை கைவிடமாட்டீர்கள். மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப சூழல் சாதகமாக இருக்கும். வாழ்க்கை துணைக்கும் உங்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள். ஆனால் காதலிப்பவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருந்தாலும், சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து வழிகளிலும் ஜூலை மாதம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வேலையில் அதிர்ஷ்டத்தின் காரணமாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உங்களின் வருமானம் உயரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சாதகமான மாதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மாணவர்கள் இம்மாதத்தில் வெற்றி பெறுவார்கள். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். சகோதரர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். இருப்பினும் காதல் வாழ்க்கையில் சில தவறான புரிதல்களால் பிரச்சனைகளை ஏற்படலாம். நிதி நிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் கலவையானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல புரிதல் இருக்கும். ஆனால் காதலர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மேலும் இம்மாதத்தில் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாக இருக்கும். ரகசிய ஆதாரங்களில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். இம்மாதத்தில் நல்ல பண ஆதாயம் உண்டு. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் தங்கள் பணியிடத்தில் பலம் பெறுவார்கள். மாணவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வீட்டு பெரியவர்களின் உதவியுடன் நல்ல எதிர்கால திட்டங்களைத் தீட்டுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பும் பாசமும் இருந்தாலும், ஆணவத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலை நன்றாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் சில பழைய ஆரோக்கிய பிரச்சனைகள் பெரும் தொல்லையைத் தரலாம். எனவே சற்று கவனமாக இருங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் சில துறைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றமும், பதவி உயர்வும் இருக்கும். ஆனால் மாணவர்கள் இம்மாதத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இருப்பினும் இலக்குகளை அடைவார்கள். குடும்ப சூழ்நிலை சற்று டென்சன் நிறைந்திருக்கும். அரசு துறையில் இருந்து பணம் கிடைக்கும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் கலவையான பலன்களைத் தரும். பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இம்மாதத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். மாணவர்கள் சில சிக்கல்களை சந்திக்கலாம். குடும்ப சூழ்நிலை சற்று மோசமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம். காதலிப்பவர்களுக்கு இம்மாதம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகும். நிதி நிலை பலவீனமாக இருக்கும். உங்களின் நிதி வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் பல நற்பலன்களைப் பெறுவார்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருப்பார்கள். குடும்ப சூழல் நன்றாக இருக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்த மோதல்கள் மறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செல்வம் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள். ஏனெனில் இம்மாதத்தில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இம்மாதம் கலவையான பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இம்மாதத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை பதட்டமாக இருக்கும். மேலும் அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மாதத்தின் முதல் பாதியில் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் உற்சாகம் நிறைந்திருக்கும். வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் பதற்றம் நிலவும். இதனால் குடும்ப சூழல் மோசமாக பாதிக்கப்படும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலை சீராக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருப்பினும், பெரிய நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அனைத்து துறைகளிலும் வெற்றியைத் தரப் போகிறது. வியாபாரிகள் மற்றும் பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நல்ல பணவரவு இருக்கும். மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து, உங்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீண்டகால நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும். உங்களின் தொழில் வாழ்க்கை உயரும். மாணவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். குடும்ப சண்டைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். நிதி நிலை சீராக இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் சில பழைய நோய்கள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.