Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படப் போகுது...
பல முக்கியமான கிரகங்கள் ஜூலை மாதத்தில் இடம் மாறப் போகின்றன. கிரகங்களின் இந்த இடமாற்றத்தின் விளைவுகள் 12 ராசிகளிலும் தெரியக்கூடும்.
2021 ஆம் ஆண்டில் பாதி ஆண்டை கடந்து வந்துவிட்டோம். அடுத்த பாதியிலும் நுழையப் போகிறோம். பொதுவாக கிரகங்கள் அவ்வப்போது இடமாற்றமடையும். ஒரு மாதத்தில் இரண்டு-மூன்று கிரகங்கள் தன்னுடைய இடத்தை மாற்றும். அந்த வகையில் கிரக இயக்கங்களின் பார்வையில் இருந்து பார்த்தால், ஜூலை மாதம் மிகவும் முக்கியமான மாதம்.

ஏனெனில் பல முக்கியமான கிரகங்கள் ஜூலை மாதத்தில் இடம் மாறப் போகின்றன. கிரகங்களின் இந்த இடமாற்றத்தின் விளைவுகள் 12 ராசிகளிலும் தெரியக்கூடும். இப்போது ஜூலை மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் எப்போது மற்றும் எங்கு இடமாற்றமடையப் போகின்றன என்றும், எந்த ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் பெரிய மாற்றத்தைக் காணப்போகிறார்கள் என்பதையும் காண்போம்.

கிரகங்களின் மாற்றம்
ஜூலை மாதத்தில் பின்வரும் ராசிகளில் கிரகங்களின் பெயர்ச்சி நடக்கவிருக்கின்றன. அவை
* மிதுனம்
* கடகம்
* சிம்மம்
ஜூலை மாதத்தில் இந்த மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு பெரிய மாற்றம் காணப்படும். ஏனெனில் இந்த ராசிகளில் தான் சில முக்கியமான கிரகங்கள் இடம் மாறப் போகின்றன. இது வேலை, கல்வி, வியாபாரம், தொழில், சந்தை, அரசியல் மற்றும் வானிலை போன்றவற்றை இக்காலத்தில் பாதிக்கும். இப்போது ஜூலை மாதத்தில் எந்த கிரகங்கள் எப்போது, எந்த ராசிகளுக்கு இடம் மாறப்போகின்றன என்பதைப் பார்ப்போம்.

மிதுனத்தில் புதன் பெயர்ச்சி
ஜூலை மாதத்தின் முதல் பெயர்ச்சி என்றால், அது மிதுனத்தில் புதன் பெயர்ச்சி ஆவது தான். பஞ்சாங்கத்தின் படி, 2021 ஜூலை 7 ஆம் தேதி அன்று புதன் மிதுன ராசிக்கு செல்லவிருக்கிறது. புதன் மிதுன ராசியின் அதிபதி ஆவார். ஆகவே புதன் தனது சொந்த ராசிக்கே இடமாற்றமடைவதால் நன்மை பயக்கும். 2021 ஜூலை 7 ஆம் தேதி காலை 10.59 மணிக்கு மிதுன ராசியில் நுழையும் புதன், அந்த ராசியில் 2021 ஜூலை 25 ஆம் தேதி வரை இருப்பார்.

கடகத்தில் சூரிய பெயர்ச்சி
பஞ்சாங்கத்தின் படி, சூரியன் கடக ராசிக்கு 2021 ஜூலை 16 ஆம் தேதி மாலை 4.41 மணிக்கு இடம் பெயரப் போகிறார். இந்த ராசியில் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை இருந்து, பின் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு நுழைவார்.

சிம்மத்தில் சுக்கிர பெயர்ச்சி
2021 ஜூலை 17 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்கு இடம் பெயரவுள்ளார். சுக்கிரன் நெருப்பு ராசிக்கு வரும் போது, அந்த ராசிக்காரரின் உணர்வுகள் தீவிரமடையும். ஆகவே சில விஷயங்களில் இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். பஞ்சாங்கத்தின் படி, ஜூலை 17 அன்று காலை 9.13 மணிக்கு சுக்கிரன் சிம்ம ராசிக்கு சென்று, அங்கு ஆகஸ்ட் 11 வரை இருப்பார்.

சிம்மத்தில் செவ்வாய் பெயர்ச்சி
பஞ்சாங்கத்தின் படி, செவ்வாய் சிம்ம ராசிக்கு 2021 ஜூலை 20 ஆம் தேதி மாலை 5.21 மணிக்கு நுழையவுள்ளார். இந்த ராசியில் செவ்வாய் 2021 செப்டம்பர் 6 ஆம் தேதி வரை இருப்பார்.

கடகத்தில் புதன் பெயர்ச்சி
அனைத்து கிரகங்களிலும் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கடக ராசிக்கு 2021 ஜூலை 35 ஆம் தேதி காலை 11.31 மணிக்கு நுழைந்து, அந்த ராசியில் 2021 ஆகஸ்ட் 9 வரை இருப்பார்.



Click it and Unblock the Notifications