Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
January Horoscope 2023: ஜனவரி மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப்போகுது..
2023 ஜனவரி மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

January Horoscope 2023: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் நுழைய இன்னும் ஓரிரு நாட்களே உள்ளன. ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் ஜனவரி மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஜனவரி மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஜனவரி மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 ஜனவரி மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! புத்தாண்டின் முதல் மாதமானது உங்களின் ஒரு புதிய திட்டங்களைத் தொடங்க அருமையான மாதமாக இருக்கும். தொழில் ரீதியாக, விடாமுயற்சி தேவைப்படும் மாதம் இது. நிதி ரீதியாக, இம்மாதத்தில் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, நல்லிணக்கத்தைப் பராமரிக்க உறவில் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, உடற்பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும் மற்றும் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! ஜனவரி மாதமானது உங்களுக்கு தொழில் ரீதியாக அற்புதமான மாதமாக இருக்கும். இருப்பினும், கவனமாக இல்லாவிட்டால், சில நேரங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு இம்மாதம் சாதாரணமாகவே இருக்கும். அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் குடும்பத்தை நடத்துவது சற்று கடினமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு, மாதத்தின் தொடக்கம் சற்று சவாலாக இருக்கும். உயர் அதிகாரிகளிடம் நற்பெயரை வாங்குவது கடினமாக இருக்கும். இருப்பினும் நற்பெயரை வாங்க முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் கலவையான பலன்களைப் பெறக்கூடும். தம்பதியர்களுக்கு இடையே சில ஈகோ பிரச்சனைகள் வரலாம். உறவில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் இணைப்பை வலுப்படுத்த சிறு பயணங்களை மேற்கொள்ளுங்கள். நிதி ரீதியாக, இழப்புகளை ஏற்படுத்தும் ஊக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகவும் சாதகமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! தொழில் ரீதியாக ஜனவரி மாதமானது அற்புதமான மாதமாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் சராசரி மதிப்பெண்களைப் பெறுவார்கள். குடும்ப சூழல் அமைதியாக இருக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை ஜனவரி மாதத்தில் கண்டுபிடிப்பார்கள். நிதி ரீதியாக, இம்மாதம் நிலையான பணப்புழக்கத்தையும் முந்தைய முதலீடுகளிலிருந்து வெற்றிகரமான வருமானத்தையும் தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! 2023 ஜனவரி மாதம் தொழில் ரீதியாக சாதாரணமாகவே இருக்கும். அலுவலகத்தில் உயர்அதிகாரிகளுடன் சில மோதல்கள் வர வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இம்மாதம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காதலிப்பவர்களுக்கு ஜனவரி மாதம் சிறந்ததாக இருக்கும். நிதி நிலை சராசரியாக இருக்கும். முதலீடுகள் செய்ய சிறந்த மாதம் அல்ல. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதுவரை ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இம்மாதத்தில் அதிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! 2023 ஜனவரி மாதம் தொழில் ரீதியாக சாதாரணமாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இம்மாதம் பயனுள்ளதாக இருக்கும். கேது இரண்டாவது வீட்டில் இருப்பதால், குடும்பத்தில் விஷேசங்களை நடத்த வாய்ப்புள்ளது. உங்கள் காதல் உறவு உங்களுக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிக்கும். வியாபார ரீதியாக, இம்மாதத்தில் வளர்ச்சியானது சீராக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! 2023 ஜனவரி மாதத்தில் கணிசமான வேலை முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் முயற்சிகளையும் திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். குடும்பம் அல்லது உறவுப் பிரச்சினை காரணமாக உங்கள் படிப்பை நிறுத்தும் சூழல் உருவாகும். உங்கள் குடும்பத்தை நல்ல மனநிலையில் வைத்திருக்கும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு நடக்கவுள்ளது. உங்கள் துணையுடனான உறவு சற்று கடினமாக இருக்கும். பல நல்ல நிதி வாய்புகள் கிடைக்கும். ஆரோக்கியமாக இருக்க, சரிவிகித உணவுடன், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! 2023 ஜனவரி மாதமானது தொழில் ரீதியாக லாபகரமாக இருக்கும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த முடியும். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, இம்மாதம் அற்புதமாக இருக்கும். பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம், உங்கள் துணையுடனான பிணைப்பு, நெருக்கம் அதிகரிக்கும். ராகு, கேதுவின் நிலைகளால், செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் செலவுகளை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜனவரி மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். ஆயினும் பொறுமையை சற்று கடைப்பிடிக்க வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு ஏராளமான நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். கடினமான நிதி முடிவுகளை எடுக்கும் உங்கள் திறன் தான் உங்கள் பொருளாதார பலத்தை பராமரிக்க உதவும். செவ்வாய் 6 ஆவது வீட்டில் இருப்பதால், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! ஜனவரி மாதத்தின் முதல் பாதியில் நல்ல செய்திகளைப் பெறுவதால் குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பல தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டியிருக்கும் மற்றும் அதில் நல்ல மதிப்பெண்களையும் பெறுவார்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கை சாதகமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். நிதி நிலையில் எவ்வித குறையும் இருக்காது. உங்களின் நிதி நிலை மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் நலம் மேம்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! 2023 ஜனவரியில் உங்கள் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். இல்லற வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, நீங்கள் உங்கள் பெற்றோரைச் சந்திக்கலாம் மற்றும் முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உங்கள் திட்டங்களைப் பற்றி அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சில சவால்கள் இருக்கலாம். நிதி நிலையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! 2023 ஜனவரி மாதத்தில் தொழில் ரீதியாக வெற்றி பெறுவீர்கள். முந்தைய முயற்சிகளில் இருந்து நல்ல பலன் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். அதிகப்படியான வேலையால், வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போய், அது அவர்களுடனான உறவை பாதிக்கலாம். நிதி ரீதியாக சுமாராகவே இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காய்ச்சல் மற்றும் வலியால் அவதிப்படக்கூடும் என்பதால், உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











