For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ண ஜெயந்தியன்று எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் மற்றும் எப்படி விரதமிருக்க வேண்டும் தெரியுமா?

கோகுலாஷ்டமி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, மற்றும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படும் ஜென்மாஷ்டமி திருவிழா நெருங்கி விட்டது.

|

கோகுலாஷ்டமி, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, மற்றும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படும் ஜென்மாஷ்டமி திருவிழா நெருங்கி விட்டது. கிருஷ்ணரின் பிறந்தநாளை நினைவுகூரும் இந்த திருவிழாவில் பக்தர்கள் பால கோபால் என்ற இளம் கிருஷ்ணரை விரதமிருந்து வழிபடுகின்றனர். இந்த ஆண்டு வேதங்கள் மற்றும் புராணங்களின் படி, இது அவரது 5249 வது பிறந்தநாள் மற்றும் ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆம் தேதிகள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

Janmashtami 2022: Date, Timing, Significance, Prasad to Offer, and Food Rules to Follow in Tamil

இந்த கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணரை எப்போது வழிபட வேண்டும், எந்த நேரத்தில் வழிபட வேண்டுமென்பது அவசியமாகும். மேலும் இந்த நாளில் கிருஷ்ணருக்கு விரதமிருந்து பூஜையின் போது அவருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபடுவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளை பெற்றுத்தரும். மேலும் விரதத்தின் போது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேதி மற்றும் நேரம்

தேதி மற்றும் நேரம்

இந்த ஆண்டு ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும், நிபுணர்களின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 19 அன்று விரதம் இருப்பது நல்லது. நிஷிதா பூஜை அதிகாலை 12:05 மணிக்கு தொடங்கி 12:48 மணிக்கு முடிவடைகிறது. மேலும் ரோகிணி நட்சத்திரம். ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிகாலை 01:53 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி அதிகாலை 04:40 மணிக்கு முடிவடையும்.

ஜென்மாஷ்டமியின் முக்கியத்துவம்

ஜென்மாஷ்டமியின் முக்கியத்துவம்

பகவத் கீதையின்படி, பண்டிகை நல்ல கர்மாவையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கிறது மற்றும் தீமையை ஊக்கப்படுத்துகிறது. தீமையின் ஆதிக்கம் மற்றும் மதம் வீழ்ச்சியடையும் போதெல்லாம், தீயவர்களைக் கொல்லவும், நல்லவர்களைக் காப்பாற்றவும் பகவான் கிருஷ்ணர் மறு அவதாரம் எடுப்பார் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருவிழா ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. மேலும் மக்களை ஒன்றிணைத்து மனிதகுலத்தில் ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை குறிக்கிறது.

பின்பற்ற வேண்டிய உணவு விதிகள்

பின்பற்ற வேண்டிய உணவு விதிகள்

இந்த நாளில், பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து, சடங்குகளை விடாமுயற்சியுடன் பின்பற்றுகிறார்கள். விரதம் இருப்பவர்கள், குளித்து, வீட்டை சுத்தம் செய்து, கங்கை நீர் தெளித்து, ஹரே கிருஷ்ணா, ஹரே ராம மந்திரத்தை பகலில் 108 முறை ஜபிக்க வேண்டும், மேலும் மாகா (வெள்ளை வெண்ணெய்) மிஷ்ரி, பஞ்சிரி, பஞ்சாமிர்தம் அடங்கிய சப்பன் போக் ஆகியவற்றை இறைவனுக்கு வழங்க வேண்டும். விரதமிருக்கும் போது பட்டினி கிடக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் நட்ஸ் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள். விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் தண்ணீர், பால், மோர், இளநீர் போன்றவற்றை உட்கொண்டு உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளலாம். மேலும், பண்டிகையின் போது சமையலறையில் டேபிள் உப்பிற்கு பதிலாக கல் உப்பு பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

செய்யக்கூடாதவை என்ன?

செய்யக்கூடாதவை என்ன?

கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதத்தின் போது, வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை தவிர, இறைச்சி, முட்டை, மது மற்றும் புகையிலை ஆகியவற்றை உட்கொள்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகளை குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை சுவையை அதிகரிக்க உப்பு மற்றும் பாதுகாப்பு பொருட்கள் சேர்க்கப்படலாம்.

சப்பன் போக்

சப்பன் போக்

பகவான் கிருஷ்ணர் பால் மற்றும் பால் பொருட்களை நேசித்தார், அதனால் அவர் வெண்ணெய் திருடன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த நாளில் சப்பான் போக் எனப்படும் 56 உணவுகள் கிருஷ்ணருக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிரபலமான உணவுகளில் தனியா பஞ்சிரி, பஞ்சாமிர்தம், வெள்ளை வெண்ணெய் மற்றும் இனிப்புகள் ஆகியவை அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Janmashtami 2022: Date, Timing, Significance, Prasad to Offer, and Food Rules to Follow in Tamil

Read to know about the date, timing, significance, prasad to offer, and food rules to follow on Janmashtami 2022.
Story first published: Thursday, August 18, 2022, 17:33 [IST]
Desktop Bottom Promotion