Just In
- 5 min ago
குடியரசு தினத்தன்று வரலாறு படைக்க தயாராக இருக்கும் சிங்கப்பெண் சுவாதி ரத்தோரை பற்றித் தெரியுமா?
- 59 min ago
உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சாப்பிட வேண்டிய பழங்கள்!
- 2 hrs ago
ரொம்ப குண்டா இருக்கீங்களா? அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...!
- 2 hrs ago
சாப்பிட்டவுடன் மார்பில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதற்கு இதில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் போதும்...!
Don't Miss
- News
அதிகரித்த மாசு.. பெங்களூர் ஏரி நீரில் விளைவித்த காய்கறிகளில் அதிக அளவு உலோகங்கள்.. ஆய்வில் ஷாக்
- Automobiles
2020ஐஎன்டிஆர்சி போட்டியின் முடிவுகள்... இரு பிரிவுகளில் தங்கத்தை வென்ற அண்டை மாநில வீரர்.. யார் அவர் தெரியுமா?
- Education
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Movies
'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!
- Finance
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..!
- Sports
பாவம் மனுஷன்.. இந்திய அணிக்காக அவ்வளவு செய்தார்.. கோபம் அடைந்த பீல்டிங் கோச்.. ஷாக் பின்னணி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜல்லிக்கட்டு பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இந்திய அளவில் மிகப் பிரபலமானது. தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. இது தமிழர்களின் மரபு, வீரம், விவசாயம் என அனைத்தையும் குறிக்கிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
இது தமிழர்களின் வீரத்தை போற்றும் வீர விளையாட்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஜல்லிக்கட்டு பற்றி நீங்கள் அறிந்திருதா பல விஷயங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரலாறு
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சங்க இல்லக்கியங்களிலும் ஏறு தழுவதல் குறித்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஜல்லிக்கட்டு பெயர்க்காரணம்
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து, தற்போது 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.

எங்கெங்கு நடைபெறும்?
ஜல்லிக்கட்டு விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.

ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜனவரி 14 -ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 15 -ம் தேதி அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தொற்றில் இருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடாக மைதானங்கள் சுத்தம் செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சி.சி.டி.வி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பார்வையாளர்களின் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு அவர்களுக்கான குடிநீர், கழிப்பறை மற்றும் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப் பட்டு வருகின்றது.

ஜல்லிக்கட்டு வகைகள்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
வேலி ஜல்லிக்கட்டு: வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.

வாடிவாசல் ஜல்லி கட்டு
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வடம் ஜல்லிக்கட்டு: வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.