For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கப்பெண் இளவேனில் வாலறிவன்... அவரைப் பத்தி தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க...

துப்பாக்கிச் சுடும்போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

By Mahibala
|

தமிழ்நாட்டில் கடலூரைச் சொந்த ஊராகக் கொண்ட இளவேனில் வாலறிவன் குறி பார்த்து துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர். இவர் பிறந்தது கடலூர். படித்ததும் வளர்நு்ததும் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத். இவர் நேற்று நடந்த ரியோடி உலகக் கோப்பையில் துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று இந்தியாவை பெருமைப்படுத்தியிருக்கிறார்.

gold Medalist Elavenil Valarivan

இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இல்லையா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறந்ததும் வளர்ந்ததும்

பிறந்ததும் வளர்ந்ததும்

இளவேனில் வாலறிவன் பிறந்தது 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் நாள். இவருடைய சொந்த ஊர் கடலூர். இவருடைய இரண்டாவது வயதிலேயே தந்தையின் வேலை காரணமாக குஜராத்தில் உள்ள அகமதாபாத்துக்கு குடியேறிவிட்டார். அங்கு பள்ளிப் படிப்புகளைத் தொடர்ந்தார்

ஆர்வமும் பயிற்சியும்

ஆர்வமும் பயிற்சியும்

தனக்கு துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் இருப்பதைக் கண்டறிந்த பெற்றோர்களும் அதை ஊக்குவித்திருக்கிறார். தன்னுடைய 13 ஆம் வயதில் முதல்முதலில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் பொழுதுபோக்காகவும் ஆர்வத்தின் காரணமாகவும் பயிற்சியில் ஈடுபட்ட இளவேனில், ஒரு காலகட்டத்தில் அதன் மீது ஆர்வம் அதிகமாக அதிகமாக, துப்பாக்கிச்சூட்டையே தன் வாழ்வின் லட்சியமாகவே மாற்றிக் கொண்டார். 60 கிலோமீட்டர் பயணம் செய்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

முதல் தங்கமும் சாதனையும்

முதல் தங்கமும் சாதனையும்

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் ககன் நராங், தனக்குப் பின் இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டுபிடித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று நினைத்து நாடு முழுவதும் ஆர்வம் உள்ள வீரர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார். அந்த தேர்வில் இளவேனிலும் தேர்வானார். இதைத்தொடர்ந்து ககன் நராங்கிடம் பயிற்சி பெற்றார்.

நல்ல பயிற்சியால் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் பங்கேற்று, 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தங்கம் வென்று தன் சாதனையைத் துவக்கி வைத்தார்.

சமர்ப்பணம்

சமர்ப்பணம்

தான் துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் கொண்டு, போட்டிகளில் கலந்து கொள்ளவும் பயிற்சி பெறவும் எனக்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்து கொண்டு எனக்குப் பெரும் துணையான இருக்கும் என் பெற்றோர்களுக்கு நான் வாங்கிய தங்கப் பதக்கத்தை சமர்ப்பணம் செய்கிறேன் என்று இளவேனில் சொல்லியிருக்கிறார்.

விட்டதை பிடித்தார்

விட்டதை பிடித்தார்

இளவேனில் இதற்கு முன்பாக ஜூனியர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டு வந்தார். அவர் சீனியர் போட்டிகளில் நுழைந்தது ஒரு ஆண்டுக்கு முன்பு தான். கடந்த மே மாதம் முனிக்கில் நடந்த சீனியர் போட்டியில் தான் முதலில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் ஒரு சிறிய நிலையில் வெற்றியை நழுவ விட்டு நான்காவது இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் இந்த முறை விட்டதைப் பிடித்துவிட்டார்.

தன்னுடைய இடைவிடாத முயற்சியால் தற்போது தங்கப் பதக்கத்தை வென்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்தியாவின் பெருமை

இந்தியாவின் பெருமை

நேற்று பிரேசிலில் நடைபெற்ற ரியோடி ஜெனேரீயோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் கலந்து கொண்டார் இளவேனில் வாலறிவன். அதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி, தங்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Intersting Facts About Senior Shooting World Cup gold Medalist Elavenil Valarivan

elavenil valarivan is a sport shooter from Cuddalore, Tamilnadu. Elavenil represented India at the 2018 ISSF Junior World Cup and won a gold medal and she clinched silver in world university Games in 2019 after which she won Gold at World Junior World Cup Suhl 2019.
Story first published: Friday, August 30, 2019, 16:34 [IST]
Desktop Bottom Promotion