Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
யாரும் மறக்க முடியாத வகையில் இந்திய அரசியலில் காலடி பதித்த பெண் தலைவர்கள்!
பல பெண் தலைவர்கள் இந்திய அரசியலில் காலடி பதித்து, பெண்கள் எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் அளித்துள்ளனர்.
International Womens Day 2023: பழங்காலத்தில் ஆணாதிக்கத்தால் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிக்கொணர முடியாமல் அடிமைகளாய் இருந்து வந்தனர். ஆனால் அந்த அடிமைத்தனத்தை உடைத்துவிட்டு, பெண்கள் தற்போது ஆண்கள் இருக்கும் அனைத்து துறைகளிலும் தங்களின் காலடியைப் பதித்து, தங்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அரசியலிலும் பெண்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இன்றும் ஒவ்வொரு கட்சியிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது மற்றும் பெண்கள் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளனர்.

உதாரணமாக, தமிழ்நாட்டில் 'அம்மா' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், பல தடைகள் மற்றும் எதிர்ப்புக்களை மீறி, தமிழ்நாட்டை மிகவும் சிறப்பாக ஆண்டு வந்ததோடு, பெண்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக திகழ்ந்தார். என்ன தான் ஜெயலலிதா அவர்கள் மறைந்தாலும், இன்னும் அனைவரது மனதிலும் அவர் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இதுப்போன்று பல பெண் தலைவர்கள் இந்திய அரசியலில் காலடி பதித்து, பெண்கள் எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை சமூகத்தில் அளித்துள்ளனர். இப்போது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய நாட்டின் சில பிரபலமான பெண் அரசியல் தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் தற்போதைய நிதி அமைச்சர் தான் நிர்மலா சீதராமன். இவர் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் சிறப்பாக கையாண்டு வருகிறார். இந்திய நாட்டின் இரண்டாவது பெண் நிதியமைச்சர் இவர் ஆவார். இதற்கு முன் இவர் பாஜக-வின் செய்தித் தொடர்பாளராக இருந்தார் மற்றும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். திருமதி இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தலைமை தாங்கிய சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பெண் தலைவர் ஆவார்.

மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி அரசியலில் உள்ள மிகச்சிறந்த பெண் தலைவர்களுள் ஒருவராவார். இவரைப் பார்த்தால் முதல்வர் என்றே கூற முடியாத அளவில் மிகவும் எளிமையாக இருப்பார். இவர் மேற்கு வங்க முதல்வராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15 வயதில் அரசியலில் நுழைந்த மம்தா பானர்ஜி, இன்று வரை அந்த மாநிலத்தின் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மாயாவதி
உத்திரபிரதேசத்தின் பெண் தலைவரான மாயாவதி, அந்த மாநிலத்தின் முதல்வராக நான்கு முறை இருந்துள்ளார். இவர் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட சாதியின் முதல் பெண் முதல்வர் ஆவார். 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994-ல் உத்திரபிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டில் உத்திரபிரதேசத்தின் முதல் இந்திய தலித் பெண்ணாக முதல்வராக பதவியேற்ற அவர், 2012 ஆம் ஆண்டு வரை 4 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி
நடிகையாக இருந்த ஸ்மிருதி இரானி, தற்போது இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், ஜவுளித் துறை அமைச்சராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், முன்னாள் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் வெற்றிகரமாகப் பணியாற்றியுள்ளார்.

ஜெ. ஜெயலலிதா
நடிகையாக இருந்து தமிழக முதல்வரானவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள். இவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு பெண் அரசியல்வாதி ஆவார். அரசியலில் நுழையும் முன், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1982-ல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1991 முதல் 1996 வரை தமிழகத்தின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் இளைய முதல்வராவார்.

சுஷ்மா சுவராஜ்
மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் மிகவும் பிரபலமான பெண் தலைவராவார். இவரது ஆட்சியில் இவர் பல முக்கிய முடிவுகளை எடுத்தார். அதற்காக உலகமே அவரை தலைவணங்கியது. இவர் தனது 27 வயதில் ஹரியானா ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார். தேசிய அரசியல் கட்சியின் செய்தித் தொடர்பாளராக பதவியேற்ற முதல் பெண்மணி இவராவார். இது மட்டுமின்றி, பாஜகவின் முதல் பெண் முதல்வர், மத்திய அமைச்சர், பொதுச் செயலாளர், செய்தித் தொடர்பாளர், வெளியுறவு அமைச்சர் போன்ற பதவிகளையும் பெற்றார்.



Click it and Unblock the Notifications