ஒவ்வொரு துறையிலும் தங்கள் காலடியை முதன்முதலாக பதித்த இந்திய பெண்கள்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2023 ஆம் ஆண்டின் மகளிர் தினத்தை முன்னிட்டு, வரலாற்றில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் காலடியை முதன்முதலாக பதித்த சில இந்திய பெண்களைக் காண்போம்.

இந்தியாவில் பல பெண்கள் சாதனைகளைப் புரிந்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்கள். அதுவும் பாலினத் தடைகளை தகர்தெறிந்து, தங்கள் உரிமைகளுக்காக கடுமையாக போராடி, கலை, அரசியல், சட்டம் போன்ற பல துறைகளில் முதன்முதலாக இந்திய பெண்கள் தங்கள் காலடியைப் பதித்துள்ளனர். அதுவும் இந்தியாவில் ஒரு பெண் ஒரு துறையில் முதன்முதலாக திகழ்வது நிச்சயம் பெருமைக்குரியது.

International Women’s Day 2023: Indian Women Who Were The Firsts In Their Field

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2023 ஆம் ஆண்டின் மகளிர் தினத்தை முன்னிட்டு, வரலாற்றில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் காலடியை முதன்முதலாக பதித்த சில இந்திய பெண்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி

ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி

இந்தியாவைச் சேர்ந்த ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி 1887 ஆம் ஆண்டில் முதல் பெண் மருத்துவரானார். மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சி பெற்ற முதல் இந்திய பெண் இவர் ஆவார். அதோடு அமெரிக்காவிற்கு சென்ற முதல் பெண்மணியும் இவராவார்.

Image Courtesy: medium

ரோஷினி சர்மா

ரோஷினி சர்மா

சமீபத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் சென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை ரோஷினி சர்மா பெற்றார்.

Image Courtesy : aanavandi

அன்னை தெரசா

அன்னை தெரசா

1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற முதல் இந்திய பெண் அன்னை தெரசா ஆவார். அன்னை தெரசா பல மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியை நிறுவி, சமூக பணிக்காக தனது வாழ்க்கையைத் தந்தார்.

அருணிமா சின்ஹா

அருணிமா சின்ஹா

முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி பெண் தான் அருணிமா சின்ஹா. இவர் தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனையாவார். 2011 ஆம் ஆண்டில் திருடர்களை எதிர்க்கும் போது ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட போது, அவரது ஒரு கால் முழங்காலுக்கு கீழே துண்டிக்கப்பட்டது.

Image Courtesy: wikipedia

ரீட்டா ஃபரியா பவல்

ரீட்டா ஃபரியா பவல்

ரீட்டா ஃபரியா பவல் ஒரு இந்திய மாடல், மருத்துவர் மற்றும் அழகு ராணி ஆவார். இவர் 1966 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் ஆவார். அதோடு இவர் டாக்டராக தகுதிப் பெற்ற முதல் உலக அழகி என்ற பெருமையையும் பெற்றார்.

Image Courtesy: beanispirer

ஷிலா டாவ்ரே

ஷிலா டாவ்ரே

1988 ஆம் ஆண்டில் முதன் முதலாக இந்திய நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனராக ஷிலா டாவ்ரே ஆனார். புனேவைச் சேர்ந்த இவர் தற்போது பயிற்சி பெற்ற ஆட்டோ ஓட்டுனராவதற்கு ஆர்வமுள்ள பெண்களுக்கு ஒரு அகாடமியை தொடங்க விருப்பம் கொண்டுள்ளார்.

ஆரதி சாஹா

ஆரதி சாஹா

ஆரதி சாஹா முதல் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் இந்திய பெண் ஆவார். இவர் 1959 ஆம் ஆண்டில் ஆங்கில கால்வாயைக் கடந்தார். மேலும் 1960 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் பெண் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

இந்திரா காந்தி

இந்திரா காந்தி

இந்திரா காந்தி 1966 முதல் 1977 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய இந்தியாவின் முதல் பெண் பிரதமராவார். மேலும் 1971 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் பெண்மணி ஆனார்.

மிதாலி ராஜ்

மிதாலி ராஜ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் பெண் என்ற பெருமையை மிதாலி ராஜ் பெற்றார். அதவும் இந்த சாதனையை உலகளவில் முதன்முதலில் பெற்றவரும் இவரேயாவார்.

பிரதிபா பாட்டீல்

பிரதிபா பாட்டீல்

பிரதிபா பாட்டீல் இந்தியாவில் முதன் பெண் குடியரசுத் தலைவராவார். இவர் ஜூலை 2007 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி தான் கல்பனா சாவ்லா. இவர்1997 ஆம் ஆண்டில் ஒரு பணி நிபுணராகவும், முதன்மை ரோபோடிக் கை ஆபரேட்டராகவும் விண்வெளிக்கு சென்றார்.

கிரண் பேடி

கிரண் பேடி

கிரண் பேடி 1972 ஆம் ஆண்டில் இந்திய காவல் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்தார். இந்தியாவின் முதல் பெண் அதிகாரி கிரண் பேடி ஆவார். மேலும் 2003 ஆம் ஆண்டில் கிரண் பேடி ஐக்கிய நாடுகளின் சிவில் போலீஸ் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.

சானியா மிர்சா

சானியா மிர்சா

டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2005 ஆம் ஆண்டில் பெண்கள் டென்னிஸ் சங்கம் (Women's Tennis Association) பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.

மேரி கோம்

மேரி கோம்

மேரி கோம், 6 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தலா ஒரு பதக்கம் வென்ற ஒரே பெண் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். 2012 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற ஒரே இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை மற்றும் 2014 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

சாய்னா நேவால்

சாய்னா நேவால்

2012 ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை சாய்னா நேவால் பெற்றார். அதன் பின் 2015 ஆம் ஆண்டில் உலக தரவரிசையில் முதல் இடத்தைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.

துர்கா பானர்ஜி

துர்கா பானர்ஜி

துர்கா பானர்ஜி 1966 ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸின் முதல் இந்திய பெண் விமானி மற்றும் கேப்டன் ஆவார். மேலும் 'டொர்னாடோ ஏ-200' விமானத்தை ஓட்டிய முதல் பெண்மணியும் ஆவார்.

Image Courtesy: congresschronicles

ஹரிதா கவுர் தியோல்

ஹரிதா கவுர் தியோல்

ஹரிதா கவுர் தியோல் 1994 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் தனியாகப் பறந்த முதல் பெண் விமானி ஆனார்.

நீதிபதி எம். பாத்திமா பீவி

நீதிபதி எம். பாத்திமா பீவி

1989 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் நீதிபதி எம். பாத்திமா பீவி ஆவார்.

Image Courtesy: wikipedia

பிரியா ஜிங்கன்

பிரியா ஜிங்கன்

இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற கனவோடு 1993 ஆம் ஆண்டில் பிரியா ஜிங்கன் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார் மற்றும் இவர் தான் இந்திய ராணுவத்தில் சேர்ந்த முதல் பெண் கேடட் ஆவார்.

Image Courtesy: pinterest

பச்சேந்திரி பால்

பச்சேந்திரி பால்

பச்சேந்திரி பால் என்னும் பெண் 1984 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

Image Courtesy: climbing

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion