Latest Updates
-
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள்
இந்த 5 ராசி பெண்கள் ரொம்ப திறமையானவங்க... இவங்க எந்த துறையில் இருந்தாலும் அசைக்கவே முடியாதாம்..
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே 2022 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எந்த ராசிக்கார பெண்கள் மிகவும் திறமையானவர்கள், அசைக்க முடியாத இடத்தில் உள்ளவர்கள் என்பதை காண்போம்.
Women's Day 2023: தற்போது ஒவ்வொரு பணியிடத்திலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை. இயற்கையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாட்டை ஒருபோதும் காட்டவில்லை. இன்று பெண்கள் தங்களின் பாரம்பரிய மரபுகளை உடைத்து வருகின்றன. இன்று நாம் 20 ஆம் நூற்றாண்டில் உள்ளோம். அனைத்து இடங்களிலும் ஆண்கள், பெண்கள் என்று வேறுபாடு பார்க்காமல் சம வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை வைத்தே பெண்கள் ஆண்களை விட குறைவானர்கள் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.

ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட ராசியைச் சேர்ந்த பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலுவானவர்களாக இருப்பதாக கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே 2023 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எந்த ராசிக்கார பெண்கள் மிகவும் திறமையானவர்கள், அசைக்க முடியாத இடத்தில் உள்ளவர்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
செவ்வாய் ஆளும் மேஷ ராசியைச் சேர்ந்த பெண்கள், நல்ல வெற்றிகரமான தலைவர்களாக இருப்பதற்கு தேவையான அனைத்து முக்கிய பண்புகளையும் கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையால் தூண்டப்படுகிறார்கள். இவர்கள் எதிலும் ஒருபோதும் தயக்கம் கொள்வதில்லை. மேலும் தங்கள் துறையில் எவ்வளவு சிரமங்கள் வந்தாலும், அதை எதிர்கொண்டு திறம்பட தங்களின் பணியை செய்வார்கள். இது மற்ற பெண்களை தன்னம்பிக்கையுடன் இருக்க தூண்டுகிறது. மேலும் மேஷ ராசியைச் சேர்ந்த பெண்கள் சிறந்த தொழில் முனைவோர் திறன் கொண்டவர்கள் என்பதால், இவர்கள் நல்ல தலைவலர்களாகவும், ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்த பெண்கள் லட்சியவாதிகள். இவர்கள் தங்களின் தற்போதைய சூழ்நிலையை மேம்படுத்த கடுமையாக உழைப்பார்கள். இவர்களை எவ்வளவு தான் தாழ்த்தினாலும், தங்கள் நோக்கங்களை நோக்கி விடாமுயற்சியுடன் முன்னேற முயல்வார்கள். இதனாலேயே இவர்கள் தங்கள் துறைகளில் வெற்றியைப் பெறுகிறார்கள். இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வேலையை திட்டமிட்டு செய்வார்கள். அதோடு இந்த ராசிப் பெண்கள் ஒருவிஷயத்தை செய்ய முடிவெடுத்துவிட்டால், அதில் வெற்றி பெற எதை வேண்டுமானாலும் செய்வார்கள். முக்கியமாக மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையை கையாள்வதில் இவர்கள் திறமையானவர்கள்.

சிம்மம்
சூரியன் ஆளும் சிம்ம ராசியைச் சேர்ந்த பெண்கள் தலைமைத்துவ குணம் கொண்டவர்கள். இதனால் ஒரு பிரச்சனையை எவ்வாறு திறம்பட தீர்ப்பது என்பதை அறிவார்கள். இவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்க விரும்புவார்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அதிக ஆற்றலைக் கொண்டவர்கள் மற்றும் பொறுப்புக்களை மகிழ்ச்சியுடன் ஏற்று செய்வார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்கள் தலைமை பதவிகளில் தலைச்சிறந்து விளங்குவார்கள். இதனால் இந்த ராசி பெண்கள் சிறந்த சமூக சேவகர்களாக இருப்பார்கள். முக்கியமாக இந்த ராசிப் பெண்களால் எவ்வளவு பெரிய கம்பெனியையும் வெற்றிகரமாக நடத்தும் திறன் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கார பெண்கள் அந்தஸ்து, அதிகாரம் மற்றும் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் தங்களின் இலக்கை அடைய அதிக முயற்சியை எடுப்பார்கள். இவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள். தங்களின் சூழ்நிலையை நன்கு புரிந்து சிறந்து செயல்படக்கூடியவர்கள். இந்த ராசிப் பெண்கள் உலகில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர விரும்பும் சமூக சேவகர்கள் ஆவர்.

கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்த பெண்கள் படைப்பாற்றல் கொண்டவர்கள் மற்றும் பிரகாசமானவர்கள். இவர்கள் எப்போதும் ஒரு புதிய திட்டங்களையும், யோசனைகளையும் கொண்டிருப்பார்கள். இந்த ராசி பெண்கள் யாராலும் கணிக்கமுடியாதவர்கள், தனித்துவமானவர்கள் மற்றும் எந்த ஒரு பிரச்சனைக்கும் நல்ல தெளிவான முடிவைக் காண்பார்கள். இவர்கள் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி கவலைப்படமாட்டார்கள். இவர்களின் புத்திக்கூர்மை மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையால் எந்த துறையிலும் நல்ல முன்னேற்றங்களைக் காண்பார்கள்.



Click it and Unblock the Notifications











