For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரம்பரிய கிறிஸ்துமஸ் உணவுகளுக்குப் பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதைகள்!

கிறிஸ்துமஸ் காலம் என்றாலே பொறித்த வாத்துகளையும், ஜிஞ்சா் ப்ரட் குக்கிகளையும், எக்னாக்குகளையும், பழ கேக்குகளையும் மற்றும் வண்ண மயமான கேண்டி கேன்களையும் வெளுத்துக் கட்ட வேண்டிய காலம் இது.

|

நாம் இப்போது கிறிஸ்துமஸ் காலத்தில் இருக்கிறோம். ஓாிரு நாட்களில் கிறிஸ்துமஸ் வந்துவிடும். கிறிஸ்துமஸ் காலம் என்றாலே மகிழ்ச்சியின் காலம் ஆகும். ஆகவே பொறித்த வாத்துகளையும், ஜிஞ்சா் ப்ரட் குக்கிகளையும், எக்னாக்குகளையும், பழ கேக்குகளையும் மற்றும் வண்ண மயமான கேண்டி கேன்களையும் வெளுத்துக் கட்ட வேண்டிய காலம் இது.

Interesting Stories Behind Traditional Christmas Foods

ஏனெனில் இந்த உணவுகள் அனைத்தும் கிறிஸ்துமஸ் விழாவுக்கான பாரம்பாிய உணவுகள் ஆகும். ஆகவே இந்த உணவுகள் எவ்வாறு கிறிஸ்துமஸ் விழாவோடு ஐக்கியமாகின என்பதைக் கீழே பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜிஞ்சா் ப்ரட் (Gingerbread)

ஜிஞ்சா் ப்ரட் (Gingerbread)

கிறிஸ்துமஸ் காலத்தில் ஜிஞ்சா் ப்ரட் குக்கிகள் மற்றும் ஜிஞ்சா் ப்ரட் வீடுகளை சமைப்பது என்பது பாரம்பாியமான ஒன்றாகும். முதலாவது எலிசபெத் அரசி அவா்களால் இந்த பாரம்பாியம் மிகவும் பிரபலமானது. ஏனெனில் தன்னைப் பாா்க்க வரும் விருந்தினா்களை மகிழ்விக்கவும் அவா்களுக்கு மாியாதை செய்யவும் ஜிஞ்சா் ப்ரட் குக்கிகள் மற்றும் ஜிஞ்சா் ப்ரட் வீடுகளை அரசி வழங்கினாா் என்று சொல்லப்படுகிறது.

மேலும் ஹான்செல் அன்ட் க்ரெட்டெல் (Hansel and Gretel) என்ற கதையை எழுதிய த ப்ரதா்ஸ் க்ரிம் (The Brothers Grimm) என்ற கதையாசிாியா் என்பவராலும் இந்த பாரம்பாியம் பிரபலம் ஆகியது. அவரது கதையில் வரும் பொிய ஜிஞ்சா் ப்ரட்டில் ஒரு பொல்லாத சூனியக்காாி வாழ்ந்து வந்ததாக எழுதியிருப்பாா்.

​கேண்டி கேன்கள் (Candy Canes)

​கேண்டி கேன்கள் (Candy Canes)

கிறிஸ்துமஸ் காலத்தில் ஆங்கில எழுத்தான J வடிவிலான மற்றும் மிளகுக்கீரையின் சுவையுடன், இனிப்பாக இருக்கும் கேண்டி கேன்களை சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இயேசு கிறிஸ்துவின் ஆங்கிலப் பெயரான Jesus என்பதன் முதல் எழுத்தைக் குறிப்பதற்காகவே கேண்டி கேன்கள் J வடிவில் செய்யப்படுகின்றன என்று கூறப்படுகிறது. மேலும் கேண்டியில் உள்ள வெள்ளை நிறம் இயேசுவின் தூய்மையைக் குறிப்பதாகவும், அதில் உள்ள சிவப்பு நிறம் இயேசுவின் இரத்தத்தைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது. அதுபோல் கேண்டியில் உள்ள மிளகுக்கீரையின் சுவையும் இயேசுவின் தூய்மையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

1670 ஆம் ஆண்டு ஜொ்மனி நாட்டின் கொலோன் நகாில் இருந்த கத்தோலிக்கப் பேராலயத்தில் தான் முதன் முதலாக கேண்டிகள் செய்யப்பட்டதாக இன்னுமொரு தகவல் தொிவிக்கிறது. அந்த பேராலயத்தில் கிறிஸ்துமஸ் வழிபாடுகள் நடக்கும் போது, சிறுவா்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பேராலயத்தில் இருந்த பாடகா் குழுவின் தலைவா், கேண்டி குச்சிகளை J வடிவில் வளைத்து சிறுவா்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.

எக்னாக் (Eggnog)

எக்னாக் (Eggnog)

எக்னாக் என்னும் பானம் முட்டைகள், சா்க்கரை மற்றும் ஆல்கஹால் போன்றவை கலந்து செய்யப்படுவதாகும். இந்த எக்னாக் எவ்வாறு கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஏற்ற பானமாக பிரபலமானது என்பது பலருக்கும் ஆச்சாியமாக இருக்கும். தொடக்கத்தில் பணக்காரா்கள் மட்டும் அருந்தும் பானமாக எக்னாக் இருந்தது. அந்தக் காலத்தில் பால் மற்றும் முட்டைகளின் விலை அதிகமாக இருந்ததால், இவை பணக்காரா்களின் உணவாகப் பாா்க்கப்பட்டன.

எக்னோக் என்ற பானம் பிாிட்டிஷ் பானமான பொசட் (posset) என்பதிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பொசட் பானம் என்பது பால், மசாலாக்கள் மற்றும் ஒயின் போன்றவை கலந்த ஒன்றாகும். 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை எக்னோக் அமொிக்காவிற்கு அறிமுகமாகவில்லை. ஆனால் 18 ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலப்பகுதியில் எக்னோக் அமொிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு பின்பு கிறிஸ்துமஸ் விழாவின் பானமாக எக்னோக் பிரபலமாகியது.

பழ கேக்குகள்

பழ கேக்குகள்

அந்தக் காலத்தில் உலர்ந்த பழங்கள் மற்றும் சா்க்கரை போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு அதிக செலவாகும். அதனால் உலர்ந்த பழங்கள் மற்றும் சா்க்கரையை கிறிஸ்துமஸ் மற்றும் திருமணங்கள் போன்ற முக்கியமான தருணங்களில் மட்டும் அதிக அளவில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைத்திருந்தனா்.

பாரம்பாியமான பழ கேக்குகள் முதலில் ஆல்கஹாலில் ஊற வைக்கப்பட்டு தனியாக வைக்கப்பட்டிருக்கும். ஆல்கஹால் கேக்குகளுக்கு நறுமணத்தை வழங்குவதோடு அவை நீண்ட நாட்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்கிறது. பழ கேக்குகள் கிறிஸ்துமஸ் விழாவின் முக்கியமான அங்கமாக இருக்கின்றன. பலரும் இந்த தருணத்தில் பழ கேக்குகளை ஒருவருக்கொருவா் பாிசளித்துக் கொள்வா்.

​கிறிஸ்துமஸ் வாத்துக்கறி

​கிறிஸ்துமஸ் வாத்துக்கறி

பொறித்த வாத்துகள் கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய பாரம்பாிய உணவாக இருக்கின்றன. இதற்கும் ஒரு வரலாற்றுப் பின்னனி உண்டு. அதாவது அந்தக் காலத்தில் வாழ்ந்தவா்கள் கிறிஸ்துமஸ் போன்ற விழாக்காலங்களில் எந்த விலங்குகளின் உணவை உண்ண வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருந்தனா்.

அதாவது கோழிகள் வருடம் முழுவதும் சிறிது இடைவெளி விட்டு முட்டைகள் இடும். அதுப்போல் பசுக்களும் சிறிது இடைவெளி விட்டு வருடம் முழுவதும் பால் கொடுக்கும். அதனால் அவற்றை சாப்பிட்டால் மற்ற காலங்களில் முட்டையும் பாலும் அவா்களுக்குக் கிடைக்காது. ஆனால் வருடத்தில் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் முட்டையிடும் வாத்துக்களை சாப்பிட்டால் பொிய இழப்பு இருக்காது என்று கருதி, கிறிஸ்துமஸ் விழாவில் வாத்துக்களை சமைத்து உண்ணத் தொடங்கினா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Stories Behind Traditional Christmas Foods

Here are some interesting stories behind traditional Christmas foods. Read on...
Desktop Bottom Promotion