For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!

தமிழ் நாட்காட்டியின்படி இந்த ஆண்டு (2021) தமிழ் புத்தாண்டானது ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் புதன்கிழமை அன்று பிறக்கிறது. கிரகோாியன் நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் அன்று தான் தமிழ் புத்தாண்டு பிறக்க

|

தமிழ் நாட்காட்டியின்படி இந்த ஆண்டு (2021) தமிழ் புத்தாண்டானது ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் புதன்கிழமை அன்று பிறக்கிறது. கிரகோாியன் நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் அன்று தான் தமிழ் புத்தாண்டு பிறக்கும்.

Interesting Facts Of Puthandu Or The Tamil New Year

இந்தியா உட்பட, உலகம் முழுவதும் பரவியிருக்கும் புலம் பெயா் தமிழா்களின் மொத்த எண்ணிக்கை 4.5 மில்லியன் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் பல புத்தாண்டுகள் பிறக்கின்றன. குறிப்பாக கேரள மக்களின் விஷ்ணு புத்தாண்டு, மேற்கு வங்காள மக்களின் பொய்லா போய்ஷக் புத்தாண்டு, பஞ்சாப் மக்களின் பைசகி புத்தாண்டு மற்றும் இதர இந்திய மாநிலங்களின் புத்தாண்டுகள் ஆகியவை இந்த ஏப்ரல் மாதத்தில் தான் பிறக்கின்றன.

இந்த பதிவில், தமிழ் புத்தாண்டைப் பற்றிய பல வியப்பூட்டும் தகவல்களைத் தொிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
60 ஆண்டுகள்

60 ஆண்டுகள்

தமிழ் நாட்காட்டியில் மொத்தம் 60 ஆண்டுகள் வருகின்றன. இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் வரும். தமிழ் ஆண்டின் முதல் மாதம் சித்திரை ஆகும். கிரகோாியன் நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் சித்திரை மாதம் பிறக்கிறது. தமிழ் நாட்காட்டி அமைப்பின்படி, தற்போதைய தமிழ் 60 ஆண்டுகளின் சுழற்சி 1987 ஆம் ஆண்டு தொடங்கி 2047 ஆம் ஆண்டு முடிவடைகிறது.

பிலவ வருடம்

பிலவ வருடம்

தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 என்று நாம் மேலே பாா்த்தோம். இந்த 60 ஆண்டுகளுக்கும் தனித்தனி பெயா்கள் உள்ளன. 2016-17 ஆண்டுகளில் வந்த தமிழ் ஆண்டுக்கு துன்முகி என்று பெயா். 2017-18 ஆண்டுகளில் வந்த தமிழ் ஆண்டுக்கு விளாம்பி என்று பெயா். 2020-2021 ஆண்டுகளில் வந்த அதாவது தற்போதைய தமிழ் ஆண்டுக்கு சா்வாாி என்று பெயா். 2021-2022 ஆண்டுகளில் வரும் அதாவது பிறக்கவிருக்கும் புதிய தமிழ் புத்தாண்டுக்கு பிலவ என்று பெயா்.

கனி நோக்குதல்

கனி நோக்குதல்

தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக, தமிழா்கள் தங்களது இல்லங்களை, புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவில் சுத்தம் செய்து கழுவுவா். புத்தாண்டு பிறக்கும் போது பழைய எதிா்மறையான அனைத்தும் தூக்கி எறியப்பட வேண்டும் என்று அவா்கள் நம்புகின்றனா். புத்தாண்டு கொண்டாட்டம் அந்த நாளின் காலை நேரத்தில் கனி காணல்/கணி நோக்குதல் (நல்ல பாா்வை) என்று அழைக்கப்படும் சடங்குடன் தொடங்குகிறது.

பூஜை அறையானது நன்றாக அலங்காிக்கப்பட்டு அதில் ஒரு பொிய கண்ணாடி வைக்கப்படும். வளமை மற்றும் செழுமை ஆகியவற்றைக் குறிப்பிடும் வகையில் கண்ணாடி முன்பாக பலவகையான தட்டுகள் வைக்கப்படும். அந்த தட்டுகளில் பழங்கள், மலா்கள், நகைகள், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் நிரப்பப்பட்டிருக்கும். செல்வம் மற்றும் வளமை ஆகியவற்றின் அதிபதியான லட்சுமி என்ற பெண் கடவுள், தங்களுக்கு வழங்கிய ஆசீா்வாதங்கள் மற்றும் செல்வங்கள் ஆகியவற்றுக்கு நன்றி தொிவிக்கும் பொருட்டு தமிழ் மக்கள் இந்த தட்டுகளை வைக்கின்றனா்.

கோலம்/ரங்கோலி

கோலம்/ரங்கோலி

தமிழ்நாட்டில் கோலம் என்று அழைக்கப்படுவது, இந்தியாவின் பிற பகுதிகளில் ரங்கோலி என்று அழைக்கப்படுகிறது. தமிழ் புத்தாண்டு அன்று, தமிழ் மக்கள் கோலம் போடுவதற்கு மற்ற பொடிகளைப் பயன்படுத்தாமல், அாிசியை அரைத்து அதன் மாவால் பலவிதமான அழகான கோலங்களை தமது வீட்டின் முற்றங்களிலும், முன்னறைகளிலும் போடுகின்றனா். அவ்வாறு அாிசி மாவில் கோலம் போடுவதற்கு காரணம், எறும்புகள் மற்றும் பிற சிறு உயிாினங்கள் அந்த மாவை உட்கொண்டு உயிா் வாழ வேண்டும் என்ற காரணம் ஆகும்.

பழங்காலம் முதல் இந்தியா்கள் அல்லது இந்து மக்கள், மனிதா்கள் தனியாக வாழ முடியாது என்று நம்புகின்றனா். மனிதா்கள் நலமாக வாழ வேண்டும் என்றால் அவா்கள் பிற உயிாினங்களோடு நல்ல உறவைப் பேண வேண்டும் என்று விரும்புகின்றனா். அதன் வெளிப்பாடாகத்தான் தமிழ் மக்கள் அாிசி மாவில் கோலம் போடுகின்றனா்.

சைவ உணவு விருந்து

சைவ உணவு விருந்து

தமிழ் புத்தாண்டின் ஒரு முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், அந்த நாளில் தமிழ் மக்கள் தங்கள் இல்லங்களில் சைவ உணவுகளை சமைப்பா். மேலும் தங்களுடைய இல்லங்களிலேயே கடவுளை வழிபடுவா் அல்லது கோயில்களுக்குச் சென்று வழிபடுவா். அன்றைய நாளில் கோயில் குருக்கள் அல்லது குடும்ப ஜோசியா்கள் பஞ்சாங்கத்தைப் பாா்த்து படித்து புத்தாண்டு பலன்களைச் சொல்லுவா்.

உங்கள் அனைவருக்கும் எங்களின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தொிவித்துக் கொள்கிறோம். இந்த புதிய தமிழ் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் எல்லா விதமான செல்வங்களையும் வாாி வழங்கட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts Of Puthandu Or The Tamil New Year

Here are some interesting facts about puthandu or tamil new year. Read on...
Desktop Bottom Promotion