For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய உலகை வடிவமைத்த வரலாற்றில் வாழும் உண்மையான சிங்கப்பெண்கள்... சிலிர்க்க வைக்கும் வரலாறு...!

உலகம் முழுவதும் ஏற்பட்ட அனைத்து வரலாற்று மாற்றங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண்கள் காரணமாக இருந்த வருகின்றனர்.

|

பெண்கள் இயற்கையாகவே வலிமையாக படைக்கப்பட்டவர்கள். உலகம் முழுவதும் ஏற்பட்ட அனைத்து வரலாற்று மாற்றங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண்கள் காரணமாக இருந்த வருகின்றனர். பெண்களின் இந்த பேராளுமை ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது.

Inspiring Women Who Changed the World

நாம் அறிந்த உலக வரலாறு முழுவதிலும் வெவ்வேறு கலாச்சாரங்களிலும் பெண்கள் பல்வேறு சவால்களையும், அநீதிகளையும் சந்தித்துள்ளனர், இப்போதும் சந்தித்து கொண்டிருக்கின்றனர். அத்தனை இடையூறுகளையும் தாண்டி வெளிவந்த பெண்கள் வரலாற்றில் அசைக்கமுடியாத இடத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில் உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய சில பெண்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூசன் பி. ஆண்டனி

சூசன் பி. ஆண்டனி

சூசன் பி. ஆண்டனி ஒரு போராட்ட குடும்பத்தில் பிறந்து சிறுவயது முதலே போராட்ட குணத்துடன் வளர்க்கப்பட்டார். பெண்களின் வாக்குரிமை, பெண்களின் சொத்துரிமை மற்றும் அடிமைத்தனத்தை ஒழித்தல் ஆகியவற்றிற்காக போராடும் வக்கீலாக தன்னை மாற்றிக்கொண்டார். 1872 ஆம் ஆண்டு பெண்களின் வாக்குரிமைக்காக போராடிய அவர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முயன்று கைது செய்யப்பட்டார். அவரின் வாழ்நாள் முழுவதும் அவரால் சட்டபூர்வமாக வாக்களிக்க முடியவில்லை என்றாலும், 1920 இல் அங்கீகரிக்கப்பட்ட 19 வது சட்ட திருத்தம் "சூசன் பி.ஆண்டனி திருத்தம்" என்று பெயரிடப்பட்டது. பெண்களின் வாக்குரிமைக்கான விதை இவரிலிருந்தே தொடங்கியது.

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

1997 ஆம் ஆண்டில் விண்வெளி வீரராகி விண்வெளியை அடைந்த முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா தனது விதிவிலக்கான சாதனைகளுக்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார். எண்ணற்ற இந்திய பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய இந்த வீரப்பெண் ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியாவில் இறந்தது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அன்னே பிராங்க்

அன்னே பிராங்க்

உலகம் முழுவதும் அதிகளவில் விற்பனையாகிய ' தி டைரி ஆஃப் எ யங் கேர்ள் ' புத்தகத்தின் ஆசிரியர் இவர். அன்னே ஃபிராங்க் ஒரு இளம் யூதப் பெண், தனது குடும்பம் நெதர்லாந்தில் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தபோது ஹோலோகாஸ்டின் போது ஏற்பட்ட அனுபவங்களை தனது டரியில் விவரித்தார். அவரது டைரி 1947 இல் இறந்த பிறகு வெளியிடப்பட்டது.

அன்னை தெரசா

அன்னை தெரசா

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே அன்னை தெரசாவின் புகழ் பரவியுள்ளது. அன்னை தெரசாவின் அர்ப்பணிப்பு மற்றும் பக்திமிக்க சமுதாயத்திற்கான பக்தி 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றது. அன்பு மற்றும் கனிவின் அடையாளமாக இருந்த அவர், உடல்நலம் குறையும் வரை ஆதரவற்ற மற்றும் நோயுற்றவர்களுக்காக இடைவிடாமல் உழைத்தார்.

மேரி கியூரி

மேரி கியூரி

உலகின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான மேரி கியூரி கதிரியக்கக் கூறுகள் குறித்து பல வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார் மற்றும் 1911 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வென்ற முதல் பெண்மணி ஆனார். இந்த போலந்து விஞ்ஞானி ஒரு குறிப்பிடத்தக்க மனிதாபிமானம் கொண்டவர் மற்றும் X -கதிர்களை உருவாக்கியதில் அவரின் பங்கு அளப்பரியது. மருத்துவ உலகின் புரட்சியாக இது கருதப்பட்டது.

ரோசா பார்க்ஸ்

ரோசா பார்க்ஸ்

ரோசா பார்க்ஸ் 1955 ஆம் ஆண்டில் அலபாமாவில் ஒரு பேருந்தில் ஒரு வெள்ளை பயணிகளுக்கு தனது இருக்கையை கொடுக்க மறுத்தபோது, ஓட்டுநரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் வரலாற்றை உருவாக்கினார், இது மாண்ட்கோமரி பஸ் புறக்கணிப்பைத் தூண்டியது. ஒரு சிவில் உரிமை ஆர்வலர், ஆப்பிரிக்க-அமெரிக்க பார்க்ஸ் அமெரிக்காவில் இனவெறியை முடிவுக்கு கொண்டுவர அயராது போராடினார்.

ஜே.கே. ரவுலிங்

ஜே.கே. ரவுலிங்

450 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்ட உலகில் அதிகளவு மக்களால் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் சாதனை படைத்த ஹாரி பாட்டர் தொடரின் ஆசிரியர் இவர். ஜே.கே. ரவுலிங் லண்டனில் உள்ள மனித உரிமை அமைப்பு அம்னஸ்டி இன்டர்நேஷனலில் பணியாற்றியுள்ளார். இவரது இளமைக்காலம் எண்ணற்ற துயரங்கள் நிறைந்ததாக இருந்தது, அனைத்து சவால்களையும் தாண்டி தனது 30களில் உலகையே தன்னை திரும்பி பார்க்கும்படி செய்தார்.

இந்திரா நூயி

இந்திரா நூயி

உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்களாகப் புகழ் பெற்ற இந்திரநூயி பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் ஆரோக்கியமான உணவு மற்றும் பான விருப்பங்களைக் கொண்டுவருவதன் மூலம் நிறுவனத்தை மிக வெற்றிகரமான நிறுவனமாக மாற்றினார். அவர் தற்போது அமேசான் நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக பணியாற்றி வருகிறார்.

மலாலா யூசுப்சாய்

மலாலா யூசுப்சாய்

பலருக்கு உத்வேகம் அளித்த மலாலா யூசுப்சாய் 11 வயதிலேயே சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடத் தொடங்கி அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இளைய நபர் என்ற பெருமையைப் பெற்றார். உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரான அவர் மனித உரிமைகளின் வாதத்திற்கு நன்கு அறியப்பட்டவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Women's Day 2021: Inspiring Women Who Changed the World

Here is the list of inspiring women who changed the world.
Desktop Bottom Promotion