Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- 14 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 17 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 18 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
Don't Miss
- News
குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு.. வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு... போலீஸ் குவிப்பு
- Movies
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே ராத்திரியில் வைரலான இந்தியர்கள் யார் யார்னு தெரியுமா?... இதோ இவங்க அது...
ஒரு காலத்தில் ஊடகங்கள் என்பது சாமானியர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயமாக இருக்கும். ஆனால் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு எல்லாமே எல்லாருக்கும் என்கிற அளவுக்கு ஊடகம் என்பது பொதுவெளி ஆகிவிட்டது. அதன்பிறகு சிலர் செய்யும் சின்ன டிக்டாக் விடியோ கூட பெரும் வைரலாகி விடும்.
திறமை எங்கிருந்தாலும் மக்களிடம் இருந்து நிறைய வரவேற்பு கிடைக்கும். சமூக ஊடகங்களில் சிலருடைய சின்ன சின்ன விஷயங்கள் கூட ஒரே ராத்திரியில் பெரும் வைரலாகி விடும். லைக்குகளும் ஷேர்களும் வந்து குவிந்த இருக்கும்.

ஏர்டெல் பொண்ணு
ஏர்டெல் விளம்பரத்தில் பிங்க் கலர் டிரஸ் போட்டுகிட்டு ஒரு பெண் துள்ளிக் குதித்து ஆடிக்கொண்டிருப்பாள். அந்த விளம்பரமே அந்த பெண்ணின் க்யூட்டான செய்கையால் தான் படு ஃபேமஸானது. ஏனென்றால் அந்த பெண்ணை பிடித்தவர்களைத் தவிர பிடிக்காதவர்கள் தான் அதிகம். ஏனென்றால் அந்த சமயத்தில் சில வெப்சைட்டுகளில் அந்த பெண்ணைப் பற்றிய பல்வேறு விமர்சனங்களும் மீம்ஸ்களும் போட்டு வெச்சு செஞ்சாங்கன்னு தான் சொல்லணும்.
MOST READ: பரம ஏழையாக பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஹனான் ஹமீத்
கேரளாவில் ஒரு தனியார் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தவர் தான் ஹனான். தன்னுடைய படிப்பு செலவுக்கான பணத்தை தானே சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து பஜாரில் தெருவோரம் மீன் கடை போட்டு, தன்னுடைய படிப்புக்காக மீன் விற்றார். அது சோசியல் மீடியாக்களில் பரவ நிறைய பேர் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் சிலரோ இந்த பெண்ணின் கதை பொய்யாக சித்தரிக்கப்பட்டது என்றும் கமெண்ட்டுக்கள் போட ஆரம்பித்தனர்.

ப்ரியா பிரகாஷ்
வாம்மா மின்னல்... என்று சொல்லுமளவுக்கு தன்னுடைய ஒரே ஒரு செகண்ட் செய்கை மூலம் ஒரே ராத்திரியில் இந்தியா முழுக்க ஃபேமஸ் ஆன பெண் தான் ப்ரியா பிரகாஷ். கண்ணடித்து பிளெயின் கிஸ் கொடுப்பது போல் இவர் பதிவிட்ட ஒரு விடியோ தான் இவரை ஒரே ராத்திரியில் பெரிய ஸ்டார் ஆக்கியது. அதன்பின் வெவ்வேறு திரைப்படத்துறையில் (பல மொழிகளில்) நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இவரைத் தேடி வந்த வண்ணமிருக்கின்றன.

தின்சாக் பூஜா (Dhinchak pooja)
இந்த பெண்ணின் செல்ஃபி பாடல் விடியோ இந்தியா முழுக்க மிகப் பிரபலம். எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் தன்னுடைய பாடலை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறார். தன்னுடைய விமர்சகர்களுக்கு தீனி போடுவதென்பது இவருக்கு மிகப் பிடித்த விஷயம்.
MOST READ: திருமணத்திற்கு இந்த பொருத்தங்கள் ரொம்ப அவசியம் - பரிகாரமும் இருக்கு

கமலேஷ் (Kamalesh)
போதைப் பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்களைப் பற்றிய ஒரு ஆவணப் படத்தில் நடித்ததன் மூலமாகத்தான் இந்த கமலேஷ் என்ற சிறுவன் ஒரு ஓவர் நைட்டில் வைரலானான். இந்த சிறுவன் வீட்டை விட்டை வெளியே வந்து குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகள் சேகரித்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தனக்கான உணவையும் போதைப் பொருள்களையும் வாங்கிக் கொள்வாராம்.

டப்பு அங்கிள்
இந்த அங்கிளை வீடியோக்களில் நாம் எல்லோருமே பெரும்பாலும் சோசியல் மீடியாவில் பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருப்போம். இவர் இவருடைய சூப்பரான தன்னுடைய நடனத்தின் மூலமாக ஃபேமஸானவர். இவருடைய நடனத் திறமையை இந்தியா முழுக்க நன்கு அறிவார்கள்.

டிரவாஹோ விளம்பர மனிதர்
டிரவாஹோ விளம்பரத்தில் அடிக்கடி எல்லா இடங்களிலும் வந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த நபரை நாம் பார்த்திருப்போம். இவர்தான் அந்த நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவருடைய பெயர் அபினவ் குமார். இவர் ஜெர்மனியில் வசித்து வந்தார். விளம்பரத்தில் நடித்த பின் படு வைரலாகிவிட்டார்.

குணமா சொல்லணும்
குழந்தைங்கள அடிக்கக்கூடாது. வாயில குணமா சொல்லணும் என்று சொல்லி தன்னுடைய அம்மாவுக்கே அறிவுரை சுட்டிப்பெண் இவர். அந்த ஒரு வசனத்திலேயே ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
MOST READ: டீச்சர் வேடிக்கையாக மாணவர்களுக்கு கொடுக்கும் 5 சூப்பர் தண்டனைகள் இதுதான்...

பசிக்கும்ல...
இவர் வேற லெவல். சோறு தான் முக்கியம், பிகரா பீஸா என்று சாப்பாட்டைப் பற்றி பல டயலாக்குகள் வந்தாலும், இந்த குட்டிப்பையன் சொன்ன பசிக்கும்ல... டயலாக் மற்ற எல்லா டயலாக்குகளையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இது எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக குழந்தையின் மழலைப் பேச்சு மற்றும் அழுகையோடு சொன்னதுதான் இந்த டயலாக்கின் ரீச்சுக்குக் காரணம்.
இப்படி தங்களுடைய சின்ன சின்ன செய்கைகளின் மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர்கள் பலரைப் பற்றி நம்மால் சொல்ல முடியும்.