For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நித்தியானந்தவுக்கு முன்னாடியே தனிநாடு உருவாக்கி அதோட ராஜாவான இந்தியர் யார் தெரியுமா?

|

இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் நித்தியானந்தாவின் தனிநாடு பற்றியதுதான். இந்தியாவின் பல மாநில காவல்துறை நித்தியானந்தவை தேடிக்கொண்டிருக்கும் போது அவர் எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கரீபியன் தீவில் ஒன்றை வாங்கி அதனை கைலாச நாடாக அறிவித்து அதற்கு தன்னை அதிபர் எனவும் அறிவித்துக்கொண்டார். ஒருவர் தனிநாடு உருவாக்குவது இதுதான் முதல்முறை என்று நீங்கள் நினைத்தால் அது தவறாகும்.

Indian Guy Who Became The King Of An Unclaimed Land

உண்மைதான், நித்தியானந்தாவுக்கு முன்னரே ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை தனிநாடாக அறிவித்து அதற்கு தனிக்கொடி உருவாக்கி தன்னை மன்னர் என்றும் அறிவித்துக் கொண்டார். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் அவரும் ஒரு இந்தியர்தான். இந்தியர்களுக்கு மட்டும்தான் இதுபோன்ற யோசனைகளும், துணிச்சலும் வரும்போல. இந்த பதிவில் அந்த புதிய நாட்டின் அதிபர் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுயாஸ் தீக்ஷித்

சுயாஸ் தீக்ஷித்

அதிர்ஷ்டமும், புத்திசாலித்தனமும் ஒருவரிடம் ஒன்றாக இருந்தால் அவரின் வாழ்க்கை அதிசயங்கள் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டம் மட்டும் உங்களுக்கு சாதகமாக இருந்தால் ஒரே இரவில் உங்களால் செல்வந்தராக மாறமுடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சுயாஸ் தீக்ஷித் ஆவார். பூமியில் யாரும் உரிமை கோராத இடமான பிர் தவிலை கண்டுபிடித்து அதனை எளிதான வழியில் தனக்கு சொந்தமாக்கி தன்னை மன்னராக்கிக் கொண்டார்.

பேஸ்புக் பதிவு

பேஸ்புக் பதிவு

தன்னுடைய பேஸ்புக் பதிவில் சூயஸ் கூறியிருந்தது என்னவெனில், " சுயாஸ் தீக்ஷித் ஆகிய நான் இந்த இடத்தின் பாதுகாவலராகவும், என்னை இந்த " தீக்ஷித் இராஜ்ஜியத்தின் " மன்னராகவும் அறிவிக்கிறேன் இன்று முதல் என்னை சுயாஸ் மன்னர் என்று அறிவித்துக் கொள்கிறேன். பிர் தவிலின் உரிமைகோரப்படாத இந்த நிலத்தை இப்போது தொடங்கி காலம் உள்ளவரை எனது நாடாக அறிவிக்கிறேன். எனது நாட்டின் மக்கள் மற்றும் இந்த தாய்நாட்டின் செழிப்புக்காக தொடர்ந்து பணியாற்றுவதாக உறுதியளிக்கிறேன், என்று தனது பதிவில் தெரிவித்து இருந்தார்.

பயணத் தகவல்கள்

பயணத் தகவல்கள்

சுயாஸ் தீக்ஷித் தனது பதிவில் " பிர் தவிலின் இந்த உரிமை கோரப்படாத நிலத்தை கோருவதற்கு சாலைகள் இல்லாத 319 கி.மீ நான் பயணித்தேன். இந்த 800 சதுர மைல் நிலம் எந்த நாட்டிற்கும் சொந்தமானது அல்ல. பூமியில் மனிதர்கள் வாழக்கூடிய ஒரே இடம் இதுதான் ஆனால் எந்தவொரு மாநிலத்தின்/நாட்டின் ஒரு பகுதியாக இல்லை. ஆரம்பகால நாகரிக நெறிமுறைகளையும் விதிகளையும் பின்பற்றி, நீங்கள் ஒரு நிலத்தை கோர விரும்பினால், அதன் மீது பயிர்களை வளர்க்க வேண்டும். நான் ஒரு விதை சேர்த்து இன்று அதில் சிறிது தண்ணீர் ஊற்றினேன். இது என்னுடையது " என்றும் தனது பதிவில் கூறியுள்ளார்.

சுயாஸின் பயணம்

சுயாஸின் பயணம்

அதிகாலை 4 மணிக்கு அபு சிம்பலில் இருந்து தொடங்கும் ஒரு பயணம் அது. காருக்காக உள்ளூர் ஓட்டுநர் முஸ்தபாவிடம் உதவி கோரினேன். இந்த திட்டத்தை முதலில் கூறியபோது அவர் என்னை பைத்தியம் என்று நினைத்தார் ஆனால் அதற்குப்பின் பெரிய தொகையை கொடுத்தபின்னர் ஒப்புக்கொண்டார். இரண்டு இரவுகள் செலவழித்து எங்கள் பயணத்திற்கான உகந்த பாதையை கண்டறிந்தேன்.

MOST READ: பண்டைய இந்தியாவில் பாலியல் தொழிலில் நடத்தப்பட்ட கொடுமைகள் என்ன தெரியுமா?

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்

இந்த பயணம் மிகுந்த ஆபத்தான பயணம் ஆகும். ஏனெனில் இது எகிப்திய இராணுவத்தின் கீழ் வருகிறது. சர்வதேச எல்லையான இது பயங்கரவாதிகளின் பகுதியாகவும் இருந்தது, அதனால் இராணுவத்தினருக்கு கண்டதும் சுட உத்தரவு இருந்தது. ஆனால் புத்திசாலித்தனமான யோசனைகள் இருக்கும்போது அச்சப்படத் தேவையில்லை. இந்த இடத்திற்குள் நுழைய உங்களுக்கு அனுமதித் தேவை, 3 நிபந்தனைகளுக்கு பின் எங்களுக்கு அனுமதி கிடைத்தது. இராணுவப் பகுதிகளை புகைப்படம் எடுக்கக்கூடாது, ஒரே நாளில் திரும்பி வந்துவிட வேண்டும், விலையுயர்ந்த பொருட்கள் எதையும் எடுத்துச்செல்லக்கூடாது. 6 மணி நேரம் பாலைவனத்தில் பயணம் செய்து ஒரு இராணுவ பகுதியைத் தாண்டி அந்த இடத்திற்கு சென்றோம்.

புது நாடு

புது நாடு

எங்கள் வழியில் தூய மணல் திட்டுகள், பாறை மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைக் கண்டோம். நான் எனது விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு என் உள்ளூர் நண்பர் எஸ்ராவிடம் (ஆரம்பத்தில் இந்த திட்டத்தை அவளிடம் சொன்னபோது அவள் மிகவும் கோபமடைந்தாள், அதனால் நான் அவளிடம் பொய் சொன்னேன்! மன்னிக்கவும் எஸ்ரா!) நான் நள்ளிரவுக்குள் திரும்பி வரவில்லை என்றால் .. போலீஸை அழைக்கவும். இங்கு வந்த முதல் ஆள் நான் அல்ல என்பது எனக்கு தெரிய வந்தது. 5 முதல் 10 பேர் வரை இதனை செய்திருக்கிறார்கள், ஆனால் இது இப்போது எனது நிலம் (விதிகளை பின்பற்றி நான் அதிகாரப்பூர்வமாக விதைகளை நட்டுள்ளேன்), இதை அவர்கள் மீட்க விரும்பினால் போரிட நேரும்.

கொடி

கொடி

எங்கள் கொடியை வைக்க 2 இடங்களைக் கண்டோம். ஒரு கொடியை நாட்டின் தலைநகரத்திலும், மற்றொரு கொடியை எல்லையிலும் வைத்தோம். இந்த காவிய பயணத்தில், காரை இங்கிருந்து வெகுதூரம் செல்ல முடியாது என்று நினைத்த நேரங்கள் இருந்தன அல்லது இப்போது எங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லை அல்லது அந்த மலையை கடக்க எங்களுக்கு நேரம் இல்லை ஆனால் சிறிது தைரியமும், கணித அறிவும் தேவை என்ற எண்ணம் மட்டும் இருந்தது. இந்த பயணத்தில் இருந்து இனிமேல் ஒருபோதும் இதுபோன்ற ஒன்றை நான் செய்யக்கூடாது என்று கற்றுக்கொண்டேன். எங்கள் நாட்டின் முதலீட்டுக்கான வரவேற்ப்பையும், குடியுரிமைக்கான விண்ணப்பங்களையும் வரவேற்கிறேன் என்று சுயாஸ் தனது பதிவில் கூறியிருந்தார்.

தீக்ஷித் இராஜ்ஜியம் பற்றியத் தகவல்கள்

தீக்ஷித் இராஜ்ஜியம் பற்றியத் தகவல்கள்

பெயர் தீக்ஷித் இராஜ்ஜியம், நாட்டின் தற்போதைய மக்கள்தொகை 1, தலைநகரம் சுயாஸ்பூர், ஆட்சியாளர் - மன்னர் சுயாஸ் 1, நாடு உருவாக்கபட்ட நாள் நவம்பர் 5, 2017, தேசிய விலங்கு பல்லி.

MOST READ: இந்தியாவின் பெருமை என்று நீங்கள் நினைக்கும் இந்த விஷயங்கள் வெறும் கட்டுக்கதைகள்தானாம் தெரியுமா?

மன்னர் சுயாஸின் உறுதி மொழி

மன்னர் சுயாஸின் உறுதி மொழி

நான் இன்று முதல் சுயோக் தீட்சித்தை செயல் பிரதமராகவும், இராணுவத் தலைவராகவும் (எங்களிடம் ஏதேனும் இருந்தால்) அறிவிக்கிறேன். பிற பதவிகளுக்கான விண்ணப்பங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனது தந்தைக்கு அவருக்கு பிறந்தநாள் பரிசாக தீக்ஷித் ராஜ்ஜியத்தின் தலைவராக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா! வாழ்க்கை என்பது ஒரு நம்பமுடியாத சாகசமாகும். நீங்கள் ஏதேனும் சாகசத்தை செய்யாவிட்டால் உங்கள் வாழக்கை ஏதாவது ஒரு கல்லறையில்தான் முடியப்போகிறது. நான் அரசன், இது நகைச்சுவை அல்ல, எனக்கென்று ஒரு நாடு இருக்கிறது, ஐ.நா சபைக்கு கடிதம் எழுத வேண்டிய நேரமிது " என்று சுயாஸ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Guy Who Became The King Of An Unclaimed Land

Check out the Indian guy who became the king of an unclaimed land.
Story first published: Friday, December 6, 2019, 12:38 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more