For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல்உறுப்பு தானம் செய்ய என்ன செய்ய வேண்டும்? சட்டம் என்ன சொல்கிறது?

இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட புதிய உறுப்பு தானம் சட்டம் என்ன சொல்லுகிறது, வாங்க பார்க்கலாம். அதுபற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

|

அடுத்த வருடம் முதலிலே உறுப்பு தானத்திற்கான சட்டத்தை திருத்தம் செய்ய இங்கிலாந்து அரசாங்கம் தயாராக உள்ளது. இந்த புதிய உறுப்புதான சட்டத்தின் படி யார் இனி இறந்தாலும் அவர்களின் உறுப்புகளை தானமாக கொடுக்க முடிவு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் மரணத்திற்கு பின்பு அவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதா என்பதும் பதிவு செய்யப்படும்.

Organ Donation Law

உறுப்பு தானத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உறுப்பு தானம் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் இறப்பிற்கு பிறகு தங்களது உறுப்புகளை தானம் செய்து பிறருக்கு உதவ வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு பிரச்சாரம்

பிரிட்டிஷ் இந்திய சமூகம், ஜெயின் மற்றும் இந்து சமூகத்தினர் இது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த புதிய உறுப்பு தானம் சட்டத்தை பற்றிய விவரங்களை பற்றியும் மக்களிடம் கூறி வருகிறார்கள். இதற்காக இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் உடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லார்ட் ஜிதேஷ் காடியாவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

MOST READ: மும்பை-புணேவுக்கு வெறும் 30 நிமிடத்துல போற ஹைப்பர்லூப் ரயில் திட்டம்... இதுதாங்க ஃபர்ஸ்ட்

மக்களின் ஒத்துழைப்பு

மக்களின் ஒத்துழைப்பு

அடுத்த ஆண்டு சட்டம் அமலுக்கு வரும் போது ஒவ்வொருவரும் தங்கள் ஆதரவை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த சீர்த்திருத்தம் மற்றும் பிரச்சாரம் உறுப்பு தானம் பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் கூறினார்.

தேசிய குழு

தேசிய குழு

இதற்காக ஜெயின் மற்றும் இந்து சமூகங்கள் சேர்ந்த தேசிய குழு(JHOD) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இங்கிலாந்தில் உள்ள உறுப்பு தானத்திற்கு பொறுப்பான அமைப்பான என்.எச்.எஸ். இரத்த மற்றும் மாற்று அறுவை சிகிச்சையுடன் கூட்டுச்சேர்ந்து இந்த பணியை செய்து வருகிறார்கள். " இவர்களின் பங்களிப்பால் ஒவ்வொருவரும் தங்கள் உறுப்புகளை தானமாக கொடுத்து ஏராளமான உயிர்களை காப்பாற்ற முடியும். உயிருக்கு போராடுபவர்களையும், உடல் உறுப்பு ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வும் தர உதவ முடியும்" என்று JHOD இன் தலைவர் கிரிட் மோடி கூறினார்.

வீடியோக்கள் வழி பிரச்சாரம்

வீடியோக்கள் வழி பிரச்சாரம்

இந்து மற்றும் ஜெயின் அமைப்புகள் இந்த புதிய உறுப்பு தானம் குறித்து வீடியோக்களையும், துண்டுப்பிரசுரங்களையும் உருவாக்கி வருகிறது." மரணம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. இது குறித்து நம் கலாச்சாரங்களில் ஏராளமான கருத்துக்கள் கூறியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தான் இறந்த பிறகும் மற்ற உயிர்களுக்கு கை கொடுக்க முடியும். அதற்கு உறுப்பு தானம் செய்ய வேண்டும். உறுப்பு தானத்தின் மூலம் நீங்கள் மற்றவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் புத்துயிரும் கொடுக்க முடியும். இது நம் கடமை மட்டுமல்ல நம் மனிதாபிமான செயலும் கூட. என்று திரு காடியா கூறுகிறார்.

அவர்களின் விருப்பம்

அவர்களின் விருப்பம்

இந்தச் சட்டத்தின் கீழ் பெரியவர்களுக்கு உறுப்பு தானம் செய்வதற்கான விருப்பங்கள் இருக்கும். மரணத்திற்கு முன்பே அவர்களின் விருப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். அவரின் இறப்பிற்கு பிறகு அவரது குடும்பத்தார்கள், உறவினர்கள் அவரின் விருப்பத்தை நிறைவேற்றி கெளரவிக்க வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

MOST READ: கலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? எத்தனைக்கு மேல் சாப்பிடக்கூடாது?

விலக்கப்பட்ட நபர்கள்

விலக்கப்பட்ட நபர்கள்

விலக்கப்பட்ட குழுவில் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள், மனநல கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கிலாந்துக்கு வருபவர்கள், தானாக முன் வருபவர்கள், 12 மாதங்களுக்கு குறைவாக இங்கிலாந்தில் வாழ்பவர்கள் இவர்கள் இதில் இடம் பெறவில்லை. "ஒவ்வொருவரும் உறுப்பு தானம் பற்றி தங்கள் முடிவை மற்றவர்களிடம் பேசுவதும் தங்கள் குடும்பத்தினரிடம் இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசியம்." ன்று NHS இரத்த மற்றும் மாற்று வாரியத்தின் தலைவர் மில்லே பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். JHOD யின் இந்த கூட்டு முயற்சி கண்டிப்பாக மக்களிடையே இன்னும் உறுப்பு தானம் குறித்து நிலவி வரும் தடைகளை நிச்சயமாக மாற்றும்.

இனியாவது இறந்த பின் வீணாக மண்ணில் மட்கிப் போகும் உறுப்புகளை தானம் செய்து பிற உயிர் காப்போம். இறந்த பின்னும் வாழ்வோம் மனிதர்களே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

New Organ Donation Law To Be Enforced In The UK, British Indian Communities Spread Awareness.

The UK Government is all set to revise its organ donation law next year. According to the new law, all adults will automatically be considered eligible to donate organs post death, unless they belong to the excluded groups or they have recorded their decision of not donating.
Desktop Bottom Promotion