Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சொந்தமாக ஜெட் விமானம் வாங்கி அதில் பறக்கும் நடிகைகள் யார் யார் தெரியுமா?
சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் இந்திய நடிகைகள் யார் யார் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
திரைத்துறையில் இருக்கும் பிரபலங்களுக்கு இருக்கின்ற மவுசு வேறு எந்த துறை சார்ந்தவர்களுக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் முன்னணி நட்சத்திரங்களாக, திறமையுள்ளவர்களாக இருந்துவிட்டால் அவ்வளவு தான் அந்த துறையும் மக்களும் சேர்ந்து கொண்டாடுவார்கள். தயாரிப்பாளர்கள் பணத்தை வாரி இறைக்கத் தயங்குவதில்லை.
அப்படி கோடி கோடியாக சம்பாதிக்கும் பணத்தை வைத்து, பொதுவாக நடிகர்களோ நடிகைகளோ என்ன செய்வார்கள். தங்களுக்கென சில பல ஆடம்பர கார்கள், வீடுகள், தோட்டம், பண்ணை வீடு, வெளிநாடுகளில் சொத்து என்று வாங்கிக் குவிப்பார்கள். அதேசமயம் வித்தியாசமான சிலவற்றையும் வாங்கிப் பயன்படுத்துவார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் விரும்பி வாங்கி, பயணங்களின் போது தனக்கு பிரைவசி வேண்டும் என்று வாங்கி அதில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான் ஜெட் விமானம்.

நடிகர்கள் கூட தன்னுடைய சொந்த சுபயோகம் தாண்டி, அதை பிஸினஸாக பார்க்கிறார்கள். நடிகைகள் தனக்கே தனக்கென வாங்கி வைத்திருக்கிறார்கள். அப்படி தனக்கென தனியாக சொந்தமாக ஜெட் விமானம் வாங்கி, அதில் பறந்து கொண்டிருக்கும் நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதனால் ஷில்பா தனி ஜெட் விமானம் மட்டுமல்ல, சூப்பரான பிரமாண்ட வீடுகளும் இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இருக்கின்றன.

ப்ரியங்கா சோப்ரா
ப்ரியங்கா சோப்ராவும் தனக்கென தனியே ஒரு ஜெட் விமானம் வைத்திருக்கிறார். பாலிவுட் மற்றும் இந்திய சினிமாத்துறையில் பல சாதனைகளைக் கடந்து வந்த பிரியங்கா நிச்சயம் சுதந்திரமாக தனியாக ஜெட் விமானங்களில் பறக்க வேண்டியிருக்கிறது.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் தனக்கென தனி ஜெட் விமானம் வைத்திருக்கிறார். பச்சான் (அமிதாப் மற்றும் அபிஷேக்) ஆகியோருடன் இணைந்து மூன்று ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார். அமிதாப்பும் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதை விரும்புகிறவர். அதனால் தனித்தனி ஜெட் விமானங்களை வைத்திருக்கிறார்கள்.

மல்லிகா ஷெராவத்
பாலிவுட் தன்னுடைய ரசிகர்களுக்குப் பிடித்த படி, எக்கச்சக்கமாக கிளாமர் காட்டி மகிழ்விக்கும் மல்லிகா ஷெராவத். இவரும் சில ஜெட் விமானங்களை வைத்திருக்கிறார்.

சன்னி லியோன்
பல மில்லியன் ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஒரு கவர்ச்சிப் பட (ஆபாசப் படங்களின்) நாயகி தான் சன்னி லியோன். அவர் தான் தனக்கென தனியே ஜெட் விமானம் வைத்திருப்பதில் அவருக்குப் பெருமை தான்.

மாதுரி தீட்ஷித்
டான்சிங் குயின் என்று அன்போடு சொல்லப்படுகின்ற பாலிவுட் நடிகை மாதுரி தீட்ஷித் அழகான கணவருடனும் அவருடைய பல ஜெட் விமானங்களுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். 1990 களில் பாலிவுட் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர் தான் மாதுரி தீட்ஷித்.



Click it and Unblock the Notifications