Just In
- 13 min ago
வயதின் அடிப்படையில் உங்களுக்கு இதய நோய் ஏற்படுமாம்... ஆய்வு என்ன சொல்கிறது? அது எந்த வயது தெரியுமா?
- 2 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- 3 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் அப்பாவிகளாக இருப்பார்களாம்... இவங்கள சமாளிப்பது ரொம்ப கஷ்டமாம்!
Don't Miss
- Finance
தமிழ்நாடு அரசின் அடுத்த சிக்ஸர்.. செமிகண்டக்டர் உற்பத்தியில் கலக்க பலே திட்டம்!
- Automobiles
ஒரே ஆண்டில் 27 சதவீத வளர்ச்சி... எம்ஜி செய்த எதிர்பாராத சாதனை...
- Movies
Yaanai Review: கம்பீரமாக கம்பேக் கொடுத்தாரா இயக்குநர் ஹரி? அருண் விஜய் நடித்த யானை விமர்சனம் இதோ!
- News
உலகில் அதிவிரைவாகக் கரைந்து காணாமல் போகும் பொருள்.. வேறென்னங்க.. சம்பளப் பணம்தான்!
- Sports
எனக்கே ஸ்கெட்ச்சா?? இங்கிலாந்து அணியை அலறவிட்ட டிராவிட்.. இந்திய ப்ளேயிங்11ல் இதை கவனித்தீர்களா??
- Technology
iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தன்னை விட 5 வயது சிறியவரை திருமணம் செய்து கொண்ட நடிகைகள்!
பொதுவாக திருமணம் செய்யும் போது ஆண்களின் வயது அதிகமாகவும், பெண்களின் வயது குறைவாகவும் இருப்பது வழக்கம். ஆனால் காதல் என்ற ஒன்று ஒருவரது மனதில் வந்த பின் வயது என்பது வெறும் எண் தான். இதை பல பிரபலங்கள் நிரூபித்துள்ளனர் மற்றும் வெற்றிகரமாக மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டி வருகின்றனர்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் மற்றும் பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் திருமணத்தால் கடந்த சில நாட்களாகவே பாலிவுட் பரபரப்பாக இருந்தது. இவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டை ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் கத்ரீனா கைஃப் திருமணம் செய்து கொண்ட விக்கி கௌஷல், அவரை விட 5 வயது சிறியவர் என்பது தெரியுமா? இந்த ஜோடி மட்டுமின்றி, ஏற்கனவே வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்ட பல நடிகைகள் உள்ளனர். அந்த நடிகைகளின் பட்டியல் இதோ!

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல்
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கத்ரீனா கைஃப் தனது 38 வயதில், 33 வயது நடிகரான விக்கி கௌஷலை காதலித்து, ராஜஸ்தானில் உள்ள கோட்டையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் சந்தோஷமாக நீண்ட காலம் வாழ வாழ்த்துவோம்.

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்
பாலிவுட் நடிகையும், சர்வதேச ஐகானுமான பிரியங்கா சோப்ரா தனது 37 வயதில், 27 வயதான அமெரிக்க நடிகரும், பாடகருமான நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 10 வயது வித்தியாசம் உள்ளது மற்றும் இது சமூக ஊடகங்களில் மில்லியன் முறை சுட்டிக்காட்டவும்பட்டுள்ளது. ஆனால் பிரியங்கா மற்றும் நிக் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

மலாய்கா அரோரா கான்- அர்ஜுன் கபூர்
பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா கான் தனது 48 வயதில், இயக்குனர்-தயாரிப்பாளரான போனி கபூரின் மகனும் நடிகருமான அர்ஜுன் கபூருடன் டேட்டிங் செய்து வருகிறார். இதில் அர்ஜுன் கபூருக்கு வயது 36. இந்த ஜோடி தங்களுக்குள் 12 வயது வித்தியாசம் இருப்பதை எவ்வித கூச்சமுமின்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஊர்மிளா மடோன்கர் - மொஹ்சின் அக்தர்
ஒரு காலத்தில் வெள்ளித்திரையை ஆட்சி செய்த ஊர்மிளா மடோன்கர், திடீரென்று நீண்ட காலம் விலகி இருந்தார். பின் ஒரு நாள் திருமணம் பற்றிய செய்தியை வெளியிட்ட போது நாடே அதிர்ச்சி அடைந்தது. ஏனெனில் ஊர்மிளா தன்னை விட 10 வயது குறைவான காஷ்மீரி தொழிலதிபரும் மாடலுமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சுஷ்மிதா சென் -ரோஹ்மான் ஷால்
சுஷ்மிதா சென் மற்றும் அவரது காதலர் ரோஹ்மான் ஷால் ஆகியோருக்கு 15 வயது வித்தியாசம் உள்ளது. சுஷ்மிதா சென் 46 வயதில் 31 வயதான ரோஹ்மானை இன்ஸ்டாகிராமில் சந்திதார். ரோஹ்மானிடம் இருந்து வந்த செய்தியை அவளது டிஎம்மில் பார்த்த பிறகு தான் அவர்களின் காதல் கதை தொடங்கியது. சுஷ்மிதாவும் ரோஹ்மானும் சில ஆண்டுகளுக்கு முன்பு டேட்டிங் செய்யத் தொடங்கினர். பின் 2018 இல் இவர்கள் தங்களின் உறவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

சோஹா அலி கான்-குனால் கெம்மு
குனால் கெம்மு மற்றும் சோஹா அலி கான் காதல் கதை ஒரு வகையான விசித்திர கதைகளை நினைவுப்படுத்தும் வகையில் மகிழ்ச்சியான முடிவுடன் இருக்கும். இதில் குனால் கெம்மு சோஹா அலி கானை விட 5 வயது சிறியவர். இவர்கள் இருவருக்கும் 2009 ஆம் ஆண்டு 'தூன்டே ரே ஜாவோகே' என்னும் படத்தில் ஒன்றாக பணியாற்றிய போது காதல் ஏற்பட்டது.

ஃபரா கான் மற்றும் ஷிரிஷ் குந்தர்
ஃபரா கான் ஷிரிஷ் குந்தரை 'மை ஹூன் நா' படத்தின் செட்டில் தான் சந்தித்தார். அங்கு அவர் ஒரு இயக்குனராக அறிமுகமானார். பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 8 வயது வித்தியாசம் கொண்ட இந்த தம்பதியருக்கு அன்யா மற்றும் திவா என்ற இரண்டு மகள்களும், ஜார் என்ற ஒரு மகனும் உள்ளனர்.