For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரை கிலோ பழைய பிளாஸ்டிக் கவர்கள் கொடுத்தா ஃபுல் மீல்ஸ் சோறு... எந்த ஹோட்டல்னு தெரியுமா?

By Mahibala
|

பிளாஸ்டிக் குப்பைகளைக் கொடுத்து அதற்கு பதிலாக உணவை வாங்கிக் கொள்ளும் புதிய உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் வெளிநாடுகளில் தானே நடக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் நீங்கள் செய்யும் தவறு.

Garbage Cafe

இந்த உருப்படியான நல்ல திட்டத்தை அமுல்படுத்தியிருப்பது இந்தியாவில் தான். அது எங்கு? என்ன செய்கிறார்கள் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் விளக்கமாகப் பார்க்கவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்பேஜ் கஃபே

கார்பேஜ் கஃபே

Image Courtesy

இப்படி ஒரு மிகச்சிறந்த திட்டத்தை தனியார் நிறுவனங்கள் முயற்சி செய்து எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த முறை உங்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுத்திருப்பது அரசாங்கம் தான் என்றால் நம்புவீர்களா? ஆம். அதுதான் உண்மை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் மாநகராட்சியில் தான் உள்ள கார்பேஜ் கபே திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த திட்டம் யாருக்கானது? அதில் என்ன மாதிரியான நன்மைகள் இருக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம்.

MOST READ: ஆபாசதளங்களில் வரும் அழகி குளித்த நீர் பாட்டில் நிரப்பி ஆண்களுக்கு மட்டும் விற்பனை... எங்க கிடைக்கும்

யாருக்காக?

யாருக்காக?

Image Courtesy

தங்களுக்கென வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் தங்கியிருப்பவர்கள், குப்பை பொறுக்கி விழைப்பு நடத்துகிறவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்கள் ஆகியவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வயிறு நிரம்ப சாப்பிட முடியும்.

இவர்கள் தாங்கள் சாலையோரங்களில் பொறுக்குகிற பிளாஸ்டிக் கழிவுகளை இந்த கபேயில் கொண்டு வந்து கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு அவர்களுக்குத் தேவையான உணவை வழங்குகிறார்கள்.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்த இந்த மாநகராட்சியின் பொதுப்பணித்துறை இதற்காக ஆரம்ப நிதியாக 5 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறது.

இரட்டை பிரச்சினை

இரட்டை பிரச்சினை

பிளாஸ்டிக் கழிவுகள் சேருதல் மற்றும் உணவில்லாமல் தவிக்கிற வறுமை என்ற இரண்டும் மிகப்பெரிய பிரச்சினையான நாட்டில் உருவெடுத்திருக்கிறது. இந்த நிலையில் இப்படியொரு திட்டத்தை அறிமுகம் செய்திருப்பது நாட்டின் மிகப்பெரிய சவாலான இரண்டு விஷயத்தை எதிர்நோக்கி தீர்வு காண்பதற்கான முயற்சியாக இதைப் பார்க்கலாம்.

அம்பிகாபூர் மாநகராட்சி

அம்பிகாபூர் மாநகராட்சி

அம்பிகாபூர் மாநகராட்சி கிட்டதட்ட 2 லட்சம் பேரை பயன்படுத்தி இந்த திட்டத்தைக் கண்காணிக்க முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் வருகிற வருமானத்தில் குறைந்தபட்சம் வீடு இல்லாத 100 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறது.

MOST READ: இவரோட கைய பார்த்தீங்களா? கையில மரம் முளைச்சிருக்கு... எப்படினு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க...

எவ்வளவு கொடுத்தா சோறு

எவ்வளவு கொடுத்தா சோறு

இதற்கென தனியே உணவகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் 1 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் (பிளாஸ்டிக் கவர்கள் உள்பட) கொடுத்தால் ஒரு முழு மீல்ஸ் சாப்பாடு பெற்றுக் கொள்ளலாம். 500 கிராம் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் காலை உணவும் (டிபன்) இரவு உணவும் பெற்றுக் கொள்ள முடியும்.

எப்படி ரீச் ஆகும்?

எப்படி ரீச் ஆகும்?

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் இதுபோன்ற வெவ்வேறு நாடுகளில் வித்தியாசமான முறையில் கஃபேக்கள் இருக்கின்றன.

என்ன செய்வார்கள்?

என்ன செய்வார்கள்?

இப்படி சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அரசாங்கம் என்ன செய்யப்போகிறது? எப்படி மறுசுழற்சி செய்யப்போகிறது என்று கேட்டால், அதற்கும் ஒரு சூப்பர் வழி வைத்திருக்கிறார்கள். இப்படி சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து அந்த மாநகராட்சி முழுக்க புதிய சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இதற்கு முன்பாக கிட்டதட்ட 8 லட்சம் பிளாஸ்டிக் கவர்களை மறுசுழற்சி செய்து, சத்தீஸ்கரில் கோத்பூரில் நகரில் பிரதான சாலைகள் போடப்பட்டிருக்கின்றன.

MOST READ: ரஷ்யமொழி படிக்க நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற செக்யூரிட்டி... சூப்பர்மேன்ப்பா...

தூய்மை நகரம்

தூய்மை நகரம்

தற்போது இந்தியாவிலேயே அம்பிகாபூர் நகரம் தான் இரண்டாவது தூய்மை நகரமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த செயல்திட்டங்கள் அனைத்தும் ஸ்வட்ச் ஷர்வேஸ்கான் 2019 என்னும் திட்டங்களின் கீழ் செய்யப்படுகிறது. இது இந்தியாவில் வெவ்வேறு நகரங்களைத் தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

India’s First ‘Garbage Cafe’ Offers Free Meals in Exchange for Plastic Waste

The Municipal Corporation in Ambikapur, Chattisgarh launched the country’s garbage cafe scheme. Chattisgarh is offering a unique solution for two burning issues in the country — hunger and plastic waste. It introduced a ‘Garbage cafe’ where people can bring in plastic trash and get a free meal in return.
Story first published: Thursday, July 25, 2019, 15:28 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more