For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமது தேசிய கொடி உருவானதற்கு பின்னிருக்கும் வரலாற்று கதை தெரியுமா?

|

Independence Day 2023: ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கொடி மிகவும் முக்கியமானது, அது நம் இந்திய நாட்டிற்கும் பொருந்தும். நமது தேசிய கொடியை மூவர்ணக் கொடி என்றும் அழைப்பர்.

நமது தேசிய கொடியில் உள்ள மூன்று வண்ணங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தேசிய கொடி நமது சுதந்திரத்தையும், தைரியமான சுதந்திர போராளிகள் போராடிய நீண்ட போராட்டத்தையும் குறிக்கிறது.

Independence Day 2023: Significance Of Tricolour In Our National Flag

அதோடு நமது தேசிய கொடியில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதோடு நமது தேசிய கொடி இந்த மாதிரி இருப்பதற்கான பின்னணி கதை ஒன்றும் உள்ளது. ஒரு இந்திய குடிமகனாக, சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது நமது தேசியக் கொடியின் வரலாற்றுக் கதையும், அந்த கொடியில் உள்ள வண்ணங்களின் முக்கியத்துவத்தையும் அறிந்து வைத்திருக்க வேண்டியது முக்கியம்.

MOST READ: ஒவ்வொரு இந்தியனும் தலை வணங்க வேண்டிய இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனைகள்!

எனவே தமிழ் போல்ட் ஸ்கை இந்திய தேசிய கொடியில் உள்ள வண்ணங்களின் அர்த்தத்தையும், அந்த கொடி வந்ததன் பின்னணியில் உள்ள கதையையும் உங்களுக்காக கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்திய தேசிய கொடி

இந்திய தேசிய கொடி

இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்றால், அதற்கு துணிச்சலுடன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய நமது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் தான் காரணம். இவ்வாறு போராடி வாங்கிய சுதந்திரத்தின் அடையாளமாகவும், இந்திய நாட்டிற்காக இன்னுயிரை விட்ட தியாகிகளைப் போற்றும் வகையிலும் உருவானது தான் இந்திய தேசிய கொடி.

மூன்று வண்ணங்கள்

மூன்று வண்ணங்கள்

இந்திய தேசிய கொடியில் காவி, வெள்ளை, பச்சை என மூன்று வண்ணங்கள் உள்ளதால், இது மூவர்ணக் கொடி என்று அழைக்கப்படுகிறது. இதில்,

காவி - பலத்தையும், தைரியத்தையும் குறிக்கிறது.

வெள்ளை - அமைதியையும், உண்மையையும் குறிக்கிறது.

பச்சை - வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாயத்தையும் குறிக்கிறது.

அசோக சக்கரம்

அசோக சக்கரம்

இந்திய தேசிய கொடியின் மையப் பகுதியில் நீல நிறத்தில் 24 ஆரங்களைக் கொண்ட அசோக சக்கரம் உள்ளது. இது தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்திய தேசிய கொடி உருவானதற்கு பின் ஒரு பெரிய வரலாற்று கதை ஒன்று உள்ளது. இப்போது அதைக் காண்போம்.

22 முறை மாற்றப்பட்ட தேசிய கொடி

22 முறை மாற்றப்பட்ட தேசிய கொடி

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் ராஜேந்திர பிரசாத் தலைமையில், அபுல் கலாம் ஆசாம், சரோஜினி நாயுடு, அம்பேத்கார் ஆகியோர் கொண்ட ஒரு அவசர அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் ஒரு கொடி வேண்டுமென தீர்மானித்தது. இதற்காக பல கொடிகள் உருவாக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இதுவரை 22 முறை இந்திய கொடியானது மாற்றப்பட்டது.

இறுதியாக ஒரே அளவிலான காவி, வெள்ளை, பச்சை வண்ண பட்டைகளுடன், நடுவில் நீல நிறத்திலான அசோக சக்கரம் தாங்கிய கொடி வேண்டுமென அந்த அமைப்பு முடிவு செய்தது.

1947 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று இந்திய தேசிய கொடியின் மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு, 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ம் தேதி அரசியல் சட்ட நிர்ணய சபையின் முன் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இறுதியாக பிங்காலி வெங்கய்யா வடிவமைத்த கொடியை இந்திய தேசிய கொடியாக அந்த அமைப்பு அறிவித்தது.

1947 ஆகஸ்ட் 15

1947 ஆகஸ்ட் 15

ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அவசர அமைப்பு இந்திய தேசிய கொடியை, இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று டெல்லியில் உள்ள கோட்டை கொத்தளத்தில், இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, ஆங்கிலேயரின் கொடியை இறக்கி விட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார். அதோடு இந்திய தேசிய கொடிக்கு உரிய மரியாதை அனைவராலும் செலுத்தப்பட்டும் வருகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நம் நாட்டு சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை மறவாமல் நம் தேசத்தையும், நம் தேசியக் கொடியையும் காப்போம், போற்றுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Independence Day 2023: Significance Of Tricolour In Our National Flag

Every year on Independence Day and Republic Day, the National Flag is hoisted by the Prime Minister and the President of our country. On this Independence Day, we are going to tell you the significance of tricolours in our National Flag.
Desktop Bottom Promotion