For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

#IAmABlueWarrior: கோவிட் வீரர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு உதவ நிதிதிரட்டலை அறிமுகப்படுத்தும் ஜோஷ் ஆப்!

நமது மக்களுக்கு உதவுவதற்காக, டெய்லிஹண்டின் ஷாட் வீடியோ ஆப்பான ஜோஷ் ஒரு நிதி திரட்டும் ‘Blue Ribbon Initiative - #IAmABlueWarrior' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

|

கோவிட்-19 இரண்டாம் அலை இந்திய வரலாற்றில் மிகக்கடினமான காலங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது அனைத்து தரப்பு மக்களையும் படுமோசமாக பாதித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், சில நல்லுள்ளம் கொண்டோர் மக்களுக்கு எல்லா வழிகளிலும் உதவ முன்வந்துள்ளனர். கோவிட்-19 தொடர்பான தகவல்களை சேகரிப்பது முதல் கொடிய வைரஸுக்கு எதிரான தேசத்தின் போருக்கு நிதி நன்கொடை அளிப்பது வரை, எல்லோரும் தங்களால் முடிந்த வரை உதவுவதற்கு முயற்சி செய்கிறார்கள். நமது மக்களுக்கு உதவுவதற்காக, டெய்லிஹண்டின் ஷாட் வீடியோ ஆப்பான ஜோஷ் ஒரு நிதி திரட்டும் 'Blue Ribbon Initiative - #IAmABlueWarrior' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. (2021 ஜூன் 18 வரை செல்லுபடியாகும்)

'ப்ளூ ரிப்பன்' மூலம், முன்கள பணியாளர்கள் மற்றும் கோவிட் வாரியர்கள் உட்பட தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்படுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நிதி திரட்டுவதையும் ஜோஷ் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக ஷாட் வீடியோ ஆப்பிற்கு உள்ளேயும், வெளியேயும் இந்த முயற்சியை இயக்க ஜோஷ் ஆப்பானது அதன் மிகப்பெரிய படைப்பாளி சமூகத்தை மேம்படுத்துகிறது. அதன் புதிய முயற்சியால் சேரும் நிதியை, ஜோஷ் PM CARES (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதிக்கு நன்கொடையாக வழங்கும்.

சமூக ஊடகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள் சரியான செய்தியை மக்களிடைய பரப்புவதன் மூலம், அவர்கள் கோவிட்-19 மற்றும் அதன் பின்விளைவுகளை சமாளிப்பதில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம். இப்படி செல்வாக்கு செலுத்துபவர்களின் தாக்கத்தை மனதில் கொண்டு தான், ஜோஷ் அதன் மிகவும் பிரபலமான செல்வாக்குமிக்கவர்களில் சிலரை ஆப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் 'ப்ளூ ரிப்பன்' முயற்சியைப் பெருக்குவதற்கு, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் விவேகத்தைப் பயன்படுத்தி பொருத்தமான வீடியோவை உருவாக்க வைக்கிறது.

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான கிளின்டன் செரெஜோவும், 'ப்ளூ ரிப்பன்' முயற்சியை ஒரு சிறப்பான வழியில் மேற்கொண்டுள்ளார். பிரபலமான கோக் ஸ்டுடியோ பாடல் 'மடாரி' மற்றும் பல இசையமைப்புகளுக்கு பெயர் பெற்ற செரிஜோ, இந்த மந்தமான காலங்களில் சிறிது பிரகாசத்தைக் கொண்டு வருவதற்காக ஜோஷ் ஆப்பில் 'தில் சே ஜோடின்' என்ற சிறப்பு விழிப்புணர்வு வீடியோவைக் வெளியிட்டுள்ளார்கள்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

Here's the #IAmABlueWarrior challenge on Josh app

மேலும் ஜோஷ் ஆப்பில் உள்ள அனைத்து பயனர்களும், உங்களுக்கு பிடித்த பிரபலங்களைப் போலவே மனிதாபிமான காரணத்திற்காக உங்கள் படைப்பாற்றலை வீடியோவாக எடுக்கலாம். ஜோஷ்-இன் #IAmABlueWarrior சவாலில் எவ்வாறு பங்கேற்பது என்பதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா?

ஜோஷ் ஆப்பின் பயனர்கள் பின்வரும் எட்டு கருப்பொருள்களின் அடிப்படையில் வீடியோக்களை உருவாக்குவதன் மூலம் 'ப்ளூ ரிப்பன்' முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க முடியும்:

1. இரட்டை மாஸ்க்கின் தேவை

2. தடுப்பூசி விழிப்புணர்வு

3. கோவிட்-19 இன் உண்மைகள்

4. சமூக விலகல்

5. சுத்திகரிப்பின் முக்கியத்துவம்

6. கோவிட் -19 சுகாதாரம்

7. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்

8. ஆக்சிஜன் விழிப்புணர்வு

வீடியோக்களில் பயன்படுத்த வேண்டிய ஹேஸ்டேக்: #IAmABlueWarrior

இந்த ஹேஸ்டேக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்கள் நன்கொடை அளிக்க வேண்டிய தொகையுடன் கணக்கிட ஜோஷ் ஆப்பிற்கு உதவும்.

ஸ்பெஷல் டிபி

இந்த சவாலின் ஒரு பகுதியாக, இதில் கலந்து கொள்பவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் டிபியையும், பிரச்சார லோகோவையும் மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

இந்த கடினமான காலங்களில் தேவையில் உள்ள இந்திய மக்களுக்கு உதவ ஜோஷுடன் சேருங்கள். மேலும் உங்கள் நண்பர்களையும் அவ்வாறு செய்து உதவ ஊக்கப்படுத்துங்கள். என்ன நண்பர்களே நீங்கள் ஒரு ப்ளூ வாரியர் ஆக தயாரா?

English summary

IAmABlueWarrior: Josh App Launches Fundraiser To Help COVID Warriors And Frontline Workers

India is going through one of the toughest times in history due to the second wave of COVID-19, which has affected people from all walks of life. Amid this crisis, many Good Samaritans have come forward to help people in every possible way.
Desktop Bottom Promotion