For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்?

|

மரணம் என்பது வாழ்க்கையின் மறுக்க முடியாத எதார்த்தம் ஆகும். இந்த உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை மாறாமல் இருப்பது மரணம்தான். மரணம் எப்பொழுது வரும் என்று யாராலும் கூறமுடியாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் மரணம் நெருங்குவதற்கு முன்னால் நமக்கு சில அறிகுறிகளை அனுப்பிவிட்டுத்தான் வரும். நாம் தயாராக இல்லாவிட்டாலும் அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

how you will die according to ancient texts

நம்முடைய மரணம் எப்படி இருக்கும் என்பதை நமது புராணங்கள் முன்கூட்டியே தீர்மானித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உங்களின் கர்மாவினை பொறுத்தது. ஒரு நபர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், அவர் மரணத்தை நெருங்கும் போது, அவர் அமைதியாக இருந்து நல்ல கர்மங்களைச் செய்ய விரும்புகிறார் என்பது பெரும்பாலும் காணப்படுகிறது. ஒரு நபர் எவ்வாறு இறப்பார் என்பதைக் கூறும் அறிகுறிகள் நமது புராணங்கள் முழுவதும் நிரம்பியுள்ளது. கருட புராணத்தில் கூறியுள்ளபடி, ஸ்ரீ கிருஷ்ணர் நீங்கள் எந்த சூழ்நிலையில், நிலைமையில் இறப்பீர்கள் என்று விவரித்துள்ளார். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எளிமையான மரணம்

எளிமையான மரணம்

மரணம் என்பது இறந்து கொண்டிருப்பவரைத் தவிர அனைவருக்கும் துன்பத்தையும், சோகத்தையும் ஏற்படுத்துவதாகும். நீங்கள் வலியில்லா மரணத்தை பெற விரும்பினால் வாழ்க்கையில் பொய் கூறுவதை தவிர்க்கவும். கடவுள் மீது அதிக நம்பிக்கை வைத்து இருப்பவர்களுக்கு வலியில்லா மரணம் நிகழும் என்று கருட புராணம் கூறுகிறது.

வேதனையான மரணம்

வேதனையான மரணம்

இழிவான வாழ்க்கை வாழ்பவர்கள், வஞ்சகம் நிறைந்தவர்கள், திமிர்பிடித்தவர்கள், எளியவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்கள், மக்களை மதிக்காதவர்களுக்கு மிகவும் வேதனையான மரணம் காத்திருப்பதாக கருட புராணம் கூறுகிறது.

குற்றங்களைச் செய்தல்

குற்றங்களைச் செய்தல்

கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களைச் செய்பவர்கள் மிகவும் வேதனையான மரணத்தை அடைகிறார்கள் என்று கூறப்படுகிறது. அத்தகையவர்களை அழைத்துச் செல்ல எமதர்மன் பூமிக்கு வரும்போது, அவர் மிகவும் மோசமான மனநிலையில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

MOST READ: உங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

மரணத்தின் செயல்முறை

மரணத்தின் செயல்முறை

வலிமிகுந்த மரணத்தை இறப்பவர்கள் இறப்பதற்கு சற்று முன்னதாகவே இதைக் காண்பார்கள் என்று கூறப்படுகிறது. மந்தமான பேச்சு, மூளையதிர்ச்சி, வறண்ட வாய், அதிகரித்த இதயத் துடிப்பு. இதைத் தொடர்ந்து தீவிர வலி மற்றும் இறுதியாக மரணம் என்று கருட புராணம் கூறுகிறது.

சிவபுராணம்

சிவபுராணம்

சிவ புராணத்தில் ஒரு நபர் எப்போது இறப்பார் என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஒரு நபரின் உடல் சிவப்புத் திட்டுகளுடன் வெளிர் நிறமாக மாறினால், அந்த நபர் 6 மாதங்களுக்குள் இறந்துவிடுவார்.

பிற அறிகுறிகள்

பிற அறிகுறிகள்

ஒரு நபர் தனது வாசனை மற்றும் தொடு உணர்வை இழந்துவிட்டால், அவர் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும், அந்த நபர் சூரியனின் வெப்பத்தை பார்க்கவோ உணரவோ முடியாவிட்டால், அவர் விரைவில் இறந்துவிடுவார்.

MOST READ: பாதாம் பால் குடிப்பது உங்க ஆரோக்கியத்துல எப்படிப்பட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா?

உடல் அறிகுறிகள்

உடல் அறிகுறிகள்

ஒரு நபர் எல்லாவற்றையும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பார்க்கத் தொடங்கினால், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம். மேலும் அவரது இடது கை நிறைய இழுக்கிறது என்றால், அவர் மிக விரைவில் இறக்கக்கூடும்.

நிழல்கள்

நிழல்கள்

ஒரு நபர் தனது நிழலை ஒரு கண்ணாடியில், எண்ணெய் அல்லது தண்ணீரில் தெளிவாகக் காண முடியாவிட்டால், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு சற்று முன்பு தனது நிழலைப் பார்ப்பதை கூட நிறுத்தக்கூடும்.

நட்சத்திரங்களைப் பார்ப்பது

நட்சத்திரங்களைப் பார்ப்பது

ஒரு நபருக்கு நட்சத்திரங்களையோ சந்திரனையோ பார்க்க முடியாவிட்டால், அவர் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. இது தவிர, அவர் நீலத்திற்கு பதிலாக வானத்தை சிவப்பு நிறமாகக் கூட பார்க்கக்கூடும். மரணத்தை எப்படி எளிமையாக்குவது என்று பகவத் கீதையில் கூறியுள்ளதை மேற்கொண்டு பார்க்கலாம்.

MOST READ: நீங்கள் கிச்சனில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் வாழ்க்கையில் தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...!

கடவுளை நினைப்பது

கடவுளை நினைப்பது

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒரு நபர் அதிகமாக பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் தனது முழு நேரத்தையும் கடவுளை நினைப்பதில் செலவழித்து அவருடன் ஆன்மீக மட்டத்தில் இணைக்க வேண்டும்.

நல்ல கர்மா

நல்ல கர்மா

ஒரே நாளில் நல்ல கர்மைக்கல் அடையப்படுவதில்லை, இருப்பினும் நீங்கள் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே நல்ல கர்மாக்களைச் செய்வது உங்கள் முழு வாழ்க்கையிலும் நீங்கள் செய்த அனைத்து கெட்ட காரியங்களையும் ஓரளவிற்கு சமன் செய்யும்.

நேசிப்பவர்கள்

நேசிப்பவர்கள்

இறப்பதற்கு சற்று முன்பு, ஒரு நபர் தனது அன்புக்குரிய அனைவரையும் அழைத்து அவர்களுடன் பேச வேண்டும். அவர் அவர்களை எவ்வளவு நேசிக்கிறார், ஏன் அவர் மரணத்திற்கு அவர்கள் வருந்தக்கூடாது என்று அவர் சொல்ல வேண்டும். அவர் கடவுளின் வீட்டிற்குச் செல்கிறார்.

மரணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்

மரணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்

ஒரு நபர் தான் விரைவில் இறக்கப்போகிறார் என்று தெரிந்தால், அவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அது விரைவில் வந்தால் கடவுளுடன் சண்டையிடக்கூடாது. நீங்கள் எவ்வளவு விரைவில் மரணத்தை ஏற்றுக்கொள்கிறீர்களோ அது அவ்வளவு மென்மையாக இருக்கும்.

MOST READ: உங்களுக்கு பிடிச்ச பொண்ணு உங்கள காதலிக்கணுமா? இத பண்ணுங்க போதும்...!

மன்னிப்பு கேட்பது

மன்னிப்பு கேட்பது

இறுதியாக, பரலோக வாசஸ்தலத்திற்கு புறப்படுவதற்கு சற்று முன்பு, அவர் அநீதி இழைத்த அனைவருக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும். இது அவரது கர்மாவை சிறந்ததாக்கும், அவர் நிம்மதியாக மரணத்தை அடைவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How You Will Die, According To Ancient Texts

Read to know how you will die according to ancient texts.
Story first published: Wednesday, November 6, 2019, 12:12 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more