Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
காதலர் தினத்தன்று உங்க லவ்வர் ராசிப்படி எப்படி நடந்துப்பாங்க தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்க வேற லெவல்..
நீங்கள் உங்கள் லவ்வர் எப்படி நடந்து கொள்வார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? ஜோதிடத்தின் படி, ராசியைப் பொறுத்து காதலர் தினத்தன்று ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி நடந்து கொள்வார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
காதலர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காதலர் தினம் வந்துவிட்டது. நாம் அனைவருமே நம் வாழ்க்கைத் துணையை நேசிப்போம். மேலும் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று பல காதலர்களும் தங்கள் காதலருடன் சிறப்பாக இருக்க வேண்டுமென்ற ஓர் ஆசையை கொண்டிருப்போம். ஆனால் நம் ஆசைக்கேற்ப நமது லவ்வரும் நடந்து கொள்வாரா என்று கேட்டால், பலரும் பதிலளிக்க முடியாமல் இருப்போம்.

நீங்கள் உங்கள் லவ்வர் எப்படி நடந்து கொள்வார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? ஜோதிடத்தின் படி, ராசியைப் பொறுத்து காதலர் தினத்தன்று ஒவ்வொரு ராசிக்காரரும் எப்படி நடந்து கொள்வார் என்பதை தெரிந்து கொள்ளலாம். கீழே உங்கள் லவ்வரின் ராசிப்படி அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் பழகுவதில் சிறந்தவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் பழகுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இவர்கள் மிகச்சிறப்பாக உரையாடக்கூடிய திறன் கொண்டவர்கள். மென்மையாக பேசக்கூடியவர்கள். ஆகவே இவர்கள் காதலர் தினத்தன்று தங்களின் பேச்சாலேயே தங்கள் துணையை ஈர்ப்பார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கைத் துணையை மிகவும் வசதியாக உணர வைப்பார்கள் மற்றும் இவர்கள் எப்போதும் தங்கள் கூட்டாளருக்கு என்று எப்போதுமே தனி இடத்தைக் கொடுப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் துணையுடன் சாகச நடவடிக்கைகளில் ஈடுபட அதிகம் விரும்புவார்கள் மற்றும் இந்த மனநிலையில் தான் காதலர் தினத்தன்று இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் வலிமையானவர்கள். இவர்கள் தங்கள் நகைச்சுவை, கிண்டல், வேடிக்கையான சைகைகள் மூலம் தங்கள் துணையை வசீகரிப்பார்கள் மற்றும் இதன் மூலம் தங்கள் துணையை எப்போதும் சந்தோஷமாக வைத்து, காதலர் தினத்தை மட்டுமின்றி, அனைத்து நாட்களையும் அழகாக வைத்துக் கொள்ள முயல்வார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை துணைக்கு ஒரு நல்ல நலம் விரும்பியாக இருப்பார்கள். ஆகவே தங்கள் வாழ்க்கைத் துணைக்காக காதலர் தினத்தை சிறப்பானதாக மாற்ற முயற்சிகளை எடுப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சந்திரன் வலுவாக உள்ளது. ஆகவே காதலர் தின நாளில் தங்களுக்கும் தங்கள் துணைக்கும் இடையே மூன்றாம் நபரின் நுழைவால், இந்த ராசிக்காரர்கள் மனமுடைந்து போக வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் பெரிய மனநிலை மாற்றங்களைக் கொண்டிருக்கக்கூடும். இருப்பினும், தங்கள் வாழ்க்கைத் துணையிடம் முழு அன்பையும் வெளிக்காட்டி அவர்களை மகிழ்ச்சிப்பார்கள். அதோடு முன்றாம் நபரால் காதல் உறவில் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

கன்னி
கன்னி ராசியில், குருவும், புதனும் வலுவாக உள்ளது. ஆகவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் ரொமான்டிக்கான உணர்வால் நிறைந்திருப்பார்கள் மற்றும் தங்கள் காதலருடனான எந்த ஒரு அணுகுமுறையும் காதல் நிறைந்திருக்கும்.

துலாம்
துலாம் ராசியில் செவ்வால் வலுவாக உள்ளார். ஆகவே இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் காதலர் தினத்தன்று மிகவும் தீவிரமான உறவில் ஈடுபடுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் சுக்கிரனும், செவ்வாயும் நல்ல நிலையில் உள்ளனர். எனவே காதலர் தினத்தன்று இந்த ராசிக்காரர்களின் தகவல்தொடர்பு திறன் அற்புதமாக இருக்கும். இது இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையை வசீகரிக்கும். இந்த காதலர் தினத்தில் இவர்களை சரியாக கவனித்துக் கொண்டால், அவர்களின் முழு அன்பையும் உணரலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் காதலர் தினத்தன்று ஒன்றாக நேரத்தை செலவிட விரும்புவார்கள். அது வெளியிடமாக மட்டுமின்றி, பணியிடத்திலும் கூட ஒன்றாக நேரத்தை செலவிடுவதாக இருக்கலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் சிறந்த பாதுகாவலர்கள். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சூரியன் மிகவும் வலுவாக உள்ளார். ஆகவே காதலர் தின நாளில் இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். மேலும் இவர்கள் எப்போதும் ஸ்மார்ட்டாகவே செயல்பட விரும்புவார்கள். இத்தகையவர்கள் உங்கள் காதலராக இருந்தால், அவர்கள் காதலர் தினத்தன்று உங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ள மிகவும் தீவிரமாக இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உங்கள் காதலராக இருந்தால், உங்களுக்கு நிபந்தனையற்ற அன்பைப் பொழிவார்கள். இவர்கள் காதலர் தினத்தன்று தங்கள் காதலரின் மேல் 100 சதவீத அன்பைக் கொடுப்பார்கள்.

மீனம்
மீன ராசியில் குரு வலுவாக இருப்பதால், மீன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் மேல் மிகுந்த அன்பைக் காட்டுவார்கள். அதுவும் நீங்கள் இந்த ராசிக்காரர்களை நன்கு புரிந்து கொண்டு காதலித்தால், இவர்கள் காதலர் தின நாளில் உங்களுடன் இருக்க விரும்புவார்கள்.



Click it and Unblock the Notifications