Latest Updates
-
கிரகப்ரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த 3 ராசிக்காரர்கள் சும்மா நெருப்பு மாதிரி இருப்பங்களாம்... இவங்கள சீண்டவே கூடாதாம் தெரியுமா?
மேஷ ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பிடிவாதமாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கும் குணமுடையவர்கள். குறிப்பாக, அவர்களின் விருப்பப்படி விஷயங்கள் நடக்காதபோது நெருப்பு போல ஆக்ரோஷமாக இருப்பார்கள்.
திரைப்பட வசனங்களிலும் பேசும்போது பல முறை சொல்லி இருப்போம் 'அவன் அல்லது அவள் நெருப்பு மாதிரினு'. இது அவர்களுடைய செயல் அல்லது குணநலன்களை குறிக்கலாம். ஏனெனில், நெருப்பு மிகவும் தீவிரமானது. நெருப்பு ஆளுமை என்று கூறுவது தைரியமானது, மூர்க்கமானது. இந்த ராசிக்காரர்கள் தீவிர படைப்பாளர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களுக்கென ஒரு வேகத்தையும் பாதையையும் கொண்டுள்ளனர் மற்றும் மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறுகிறார்கள். அவர்கள் தங்கள் நம்பமுடியாத ஆளுமையால் மற்றவர்களை பிரமிக்க வைக்கிறார்கள். நெருப்பு உறுப்புக்கு சொந்தமான ராசி அறிகுறிகள் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு.

இந்த மூன்று ராசிக்கும் பொதுவானது ஒரு நேர்மறையான அணுகுமுறை. ஜோதிடரின் கூற்றுப்படி, இந்த செயல் சார்ந்த, உணர்ச்சிமிக்க அறிகுறிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இக்கட்டுரையில் உள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பிடிவாதமாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்கும் குணமுடையவர்கள். குறிப்பாக, அவர்களின் விருப்பப்படி விஷயங்கள் நடக்காதபோது நெருப்பு போல ஆக்ரோஷமாக இருப்பார்கள். மேஷ ராசிக்காரரை கையாள்வதற்கான சிறந்த வழி, அவர்களை அமைதிப்படுத்த அவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்வது ஆகும். மேலும், அவர்கள் சாதாரணமாக மாறும்போது உங்கள் யோசனைகளை அவர்களுக்கு பரிந்துரைக்கலாம் அல்லது பின்னர் அவற்றை புறக்கணிக்கலாம்.

சிம்மம்
நெருப்பு அறிகுறிகளின் அனைத்து ராசிகளிலும் சிம்மம் மிகவும் பிடிவாதமாக இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு மட்டுமே செவிசாய்ப்பார்கள், மற்றவர்கள் சொல்வதையோ அல்லது கேட்பதையோ இந்த ராசிக்காரர்கள் எதிர்க்கிறார்கள். லியோ சொல்வதை ஒருவர் ஒப்புக் கொள்ளலாம், பின்னர் அவற்றைக் கையாளுவதை புறக்கணிக்கலாம். மற்றொரு வழி, நீங்கள் ஒரு சிம்ம ராசியில் இருந்து என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு நேர் எதிரானது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் எல்லா முடிவுகளிலும் உறுதியாக இருப்பார்கள். அதிலிருந்து விலகிச் செல்ல யாராவது ஒரு தர்க்கரீதியான காரணத்தை அவர்களுக்கு வழங்கினால் மட்டுமே அவர்கள் மாறுவார்கள். தனுசு ராசிக்காரர்களை கையாள்வது மிகவும் எளிது. அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொண்டு அதையே ஆதரிக்க வேண்டும். நீங்கள் அவர்களைப் பின்பற்றாமல் இருக்க விரும்பினால், அவர்கள் விலகிச் செல்லலாம். தனுசு ராசிக்காரர்களுக்கு மன விளையாட்டுகள் மற்றும் அழைக்கப்படாத குறுக்கீடுகள் பிடிக்காது.

'நெருப்பு' ஆளுமை என்றால் என்ன?
"தீ அல்லது நெருப்பு' ஆளுமை என்பது உணர்ச்சி, படைப்பு மற்றும் அதிகாரம் கொண்ட ஒருவரைக் குறிக்கும் சொல்லாக கூறப்படுகிறது. அவர்களின் உடல் அமைப்பு ஒரு புள்ளியுடன் நடுவில் வட்டமாக இருக்கலாம். நெருப்பு ஆளுமை குணம் கொண்டவர்கள் மனக்கிளர்ச்சி மற்றும் எரிச்சல் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும், இவர்கள் தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், மார்பு வலி அல்லது தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

நெருப்பு அடையாளம் எப்படி தெரியும்?
நெருப்பு ஆளுமை அறிகுறிகளும் உணர்ச்சி, ஆற்றல் மற்றும் மனோபாவம் கொண்டதாக இருக்கும். நெருப்பு உங்களை எப்போதும் சூடாக வைத்திருக்கும், அல்லது அது பெரும் அழிவை ஏற்படுத்தும். எரிபொருளின்றி நெருப்பு விரைவாக எரியும் போது, அது அதன் சக்தியை சாம்பலில் இருந்து மீண்டும் உருவாக்க முடியும். ஆதலால், இந்த நெருப்பு ராசிக்காரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

இவர்கள் ஏன் சிறந்தவர்கள்?
நெருப்பு ஆளுமை கொண்ட ராசிக்காரர்கள் பொதுவாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும், தங்கள் சொந்த நபராக இருப்பதற்கும் அதிக சுதந்திரம் தேவைப்படும். இந்த மூன்று ராசிக்காரர்களின் உமிழும் தன்மை அவர்களை "தன்னிச்சையான மற்றும் ஈர்க்கப்பட்ட வழிகளில்" செயல்பட வைக்கிறது. பெரும்பாலும் உள்ளுணர்வால் தூண்டப்படுகிறது. அதனால்தான், அவர்கள் மற்ற எல்லா ராசிகளை காட்டிலும் மிகவும் தைரியமான அறிகுறிகளாக அறியப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
