For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைனஸ் அழற்சியில மீள முடியலையா? இதோ நம்ம தாத்தா காலத்துல என்ன பண்ணாங்கனு பாருங்க...

By Mahibala
|

உடலின் வெப்பநிலையில் உண்டாகும் மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபட்டிருத்தல் ஆகியவையே பெரும்பாலும் சைனஸ் உண்டாகக் காரணமாக அமைகின்றன. சைனஸ் பிரச்சினை இருந்தாலே தொடர்ந்த தும்மல், அலர்ஜி போன்ற பிரச்னைகள் உண்டாகும். இந்த அலர்ஜியிலிருந்து மீண்டு வரை என்ன செய்வது?

எவ்வளவு தான் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் அலர்ஜி போன்றவற்றிலிருந்து மீள வேண்டுமென்றால் நம்முடைய அன்றாடப் பழக்கங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நம்முடைய உடல் ஒத்துழைப்பு மற்றும் நம்முடைய உணவு மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்கள் தான் நம்முடைய உடலில் ஏற்படும் நோய்களைத் தீர்மானிக்கிற அடிப்படையான விஷயங்களாக இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் அதிக அளவில் தூசி சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தூசி அதிகமுள்ள இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் மூக்கில் சுத்தமான கர்சீப் போன்றவற்றைக் கட்டிக் கொள்ளுங்கள். மிக எளிதாக முகத்துக்குப் பயன்படுத்துகிற மாஸ்க் கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

தலையணை உறையை அடிக்கடி தூய்மை செய்ய வேண்டும். கை நகங்களை அழுக்கு ஏதுமில்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். முடிந்தவரையில் நீளமாக நகங்கள் வளர்க்காமல் குறிப்பிட்ட இடைவெளிகளில் நகங்களை வெட்டுவது மிகச் சிறந்தது.

MOST READ: இந்த ஒரு சத்து குறைஞ்சா தான் மார்பக புற்றுநோய் வருமாம்... அதுக்கு என்ன பண்ணலாம்?

நோ கொழுப்பு

நோ கொழுப்பு

பொதுவாக கொழுபு்பு உணவுகளை சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்ப்பது மிக நல்லது. கொழுப்புக்கள் தொண்டை முதல் வயிற்றுப் பகுதிகளில் படிய ஆரம்பித்து விடும். அதிலும் இதய வால்வுகளில் கொழுப்புக்கள் படிய ஆரம்பித்து விட்டால் அது மாரடைப்புக்குக் கூட வழிவகுத்துவிடும். அதனால் அதை தவிர்த்தல் நலம்.

துளசி

துளசி

பொதுவாக சில வீடுகளில் துளசி மாடங்கள் வைத்து தினமும் பூஜைகள் செய்வது, துளசி தீர்த்தம் குடிப்பது வழக்கம். ஆனால் எல்லா வீடுகளிலும் அந்த பழக்கம் இருப்பதில்லை. வழிபாடு செய்யாவிட்டாலும் கூட வீட்டில் ஒரு தொட்டியில் துளசி செடியை வைத்து வளர்க்கலாம். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் அப்படியே சில இலைகளைப் பறித்து மென்றும் சாப்பிடலாம். டீயில் போட்டும் காய்ச்சிக் குடிக்கலாம்.

கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் இதை செய்யும்முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

MOST READ: குரு பெயர்ச்சி 2019 - 20: அற்புதங்களை அனுபவிக்கப் போகும் மேஷ லக்னகாரர்கள்

மிளகு

மிளகு

சுவாசப் பிரச்சினை, சளித்தொல்லை மற்றும் சைனஸ் பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வை மிளகு கொடுக்கும். அதனால் உங்களுடைய சமையலில் மசாலா பொடிக்குப் பதிலாக மிளகை தட்டிப் போடலாம். சூப் போன்றவற்றில் மிளகை அதிகமாகப் பயன்படுத்தி வாருங்கள். இரவில் தூங்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் பாலில் இரண்டு மிளகைத் தட்டிப் போட்டு குடியுங்கள். சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினையே உங்களுக்கு இருக்காது.

தூதுவளை

தூதுவளை

தூதுவளை இலை அரைச்சு... தொண்டையில தான் நனைச்சு... என்று சினிமா பாடல் ஒன்றை நாம் கேட்டு ரசித்திருப்போம். கிராமங்களில் வீட்டிலோ அல்லது வேலிகளிலோ தூதுவளையைப் படர விட்டிருப்பார்கள். அதை சுவாசப் பிரச்சினை ஏற்படும் போது கொஞ்சம் இலைகளைப் பறித்து சட்னியாகவோ ரசமாகவோ வைத்து சாப்பிடுவார்கள். அப்படி செய்யப் பிடிக்காதவர்கள் தோசை வார்க்கும் போது, தூதுவளைப் பொடியைத் தூவி சாப்பிடுங்கள். தூதுவளை லேகியம், பொடி, சூரணம் என பல வகைகளில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மூச்சுப்பயிற்சி

மூச்சுப்பயிற்சி

தினசரி மூச்சுப்பயிற்சி செய்வது அவசியம். பிரணாயாமம் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சினைகளையும் சரிசெய்யும். குறிப்பாக, மூச்சுப் பயிற்சியின் போது முறையாக காற்றை உள்ளிழுத்து, மெதுவாக வெளியே விடும்பொழுது நுரையீரல் சீராகச் செயல்படும். அதிலுள்ள டாக்சின்கள் வெளியேற்றப்படும். வீசிங், சைனஸ் போன்ற பிரச்சினைகள் நம்மை அண்டவே அண்டாது.

MOST READ: அனுஷ்காவைப் பற்றி உங்களுக்கு தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...

கார்பனேட்டட் பானங்கள்

கார்பனேட்டட் பானங்கள்

கார்பனேட்டட் பானங்கள், குளிர்ச்சியான சூழல் மற்றும் அதிக குளிர்ச்சியுடைய பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திடுதல் வேண்டும். ஃபிரெஷ் ஜூஸாக இருந்தாலும் ஐஸ் கட்டி எதுவும் போடாமல், முடிந்தால் சர்க்கரையும் சேர்க்காமல் அப்படியே குடிப்பது தான் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Recover From Sinus Allergy with Ancient Home Treatments

Sinuses are air filled cavities located on either side of the nose. Due to allergies, cold, or bacterial infections, these may sometimes get clogged or infected. This can create various complications like headache, snoring or difficulty in breathing. In serious cases, a sinus infection may even lead to brain fever or meningitis.
Story first published: Thursday, September 12, 2019, 14:20 [IST]