Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
உங்க கையில இருக்குற மச்சம் அதிர்ஷ்டமானதா? துரதிர்ஷ்டமானதா? இத படிங்க...
உடலின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்கள் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் கைகளில் உள்ள மச்சங்கள் இன்னும் முக்கியமானவை.
மருத்துவ ரீதியாக, மச்சம் என்பது சருமத்தில் மெலனின் தேக்கத்தின் ஒரு அடையாளமாகும். ஆனால் ஜோதிடத்தின் படி உடலில் உள்ள மச்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சிலர் இந்த மச்சங்கள் நமது கடந்தகால வாழ்க்கையின் முத்திரைகளாக நம்புகிறார்கள். நம் உடலில் உள்ள மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் உள்ளன. உடலின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்கள் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் கைகளில் உள்ள மச்சங்கள் இன்னும் முக்கியமானவை. இப்போது கைகளில் உள்ள மச்சத்திற்கான ரகசியம் என்னவென்பதைக் காண்போம்.

கையில் மச்சம்
வலது கையில் மச்சம் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலி. இடது கையில் மச்சம் உள்ளவர்கள் தங்கள் தொழிலில் வெற்றியைக் காண்பார்கள். அதுவும் இடது கையில் மச்சம் உள்ள பெண் தன் கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தை மிகவும் நேசிப்பாள். ஆனால் வலது கையில் மச்சம் உள்ள பெண்ணுக்கு வாழ்க்கையில் செழிப்பும் திருப்தியும் ஏற்படும்.

முழங்கை மச்சம்
வலது முழங்கையில் மச்சம் கொண்டவர்கள் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்கள். அதுவும் ஒரு பெண்ணுக்கு வலது முழங்கையில் மச்சம் இருந்தால், அப்பெண் நல்ல திறமை கொண்ட வலிமையான பெண்ணாக இருப்பார். இடது முழங்கையில் மச்சத்தைக் கொண்டவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பர்.

மணிக்கட்டில் மச்சம்
வலது மணிக்கட்டில் மச்சம் உள்ள பெண் மிகவும் புத்திசாலியாக இருப்பார். மேலும் வலது மணிக்கட்டில் மச்சம் உள்ளவர்களுக்கு சமூகத்தில் நல்ல பெயரும் மரியாதையும் கிடைக்கும். இடது மணிக்கட்டில் மச்சம் உள்ள பெண் நல்ல இல்லத்தரசியாக இருப்பார். மேலும் இடது மணிக்கட்டில் மச்சம் இருப்பது தொழிலுக்கு நல்லது.

உள் மணிக்கட்டில் மச்சம்
உள் மணிக்கட்டில் மச்சம் உள்ளவர் புத்திசாலியாகவும், நல்ல சிந்தனையுடனும், எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் மற்றும் தீர்க்கும் அளவில் தைரியம் கொண்டவர்களாக இருப்பர்.

வெளிப்புற மணிக்கட்டில் மச்சம்
வெளிப்புற மணிக்கட்டில் மச்சம் உள்ளவர்கள், தங்கள் கூட்டாளிகள் மற்றும் குடும்பத்தினரை நன்றாக கவனித்துக் கொள்வார்கள், பொறுப்பானவர்கள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

உள்ளங்கையில் மச்சம்
ஒருவரது வலது உள்ளங்கையின் நடுவே மச்சம் இருந்தால், அந்நபர் வாழ்வில் மிகுந்த புகழும் பெயரும் பெறுவார். அத்தகையவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை மிகவும் நேசிப்பார்கள். இடது உள்ளங்கையின் நடுவில் உள்ள மச்சம் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகும்.

உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம்
ஒரு பெண்ணின் வலது உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால், அவள் மிகவும் புத்திசாலி மற்றும் நல்ல வாழ்க்கை நடத்துவாள் என்றும் அர்த்தம். ஒரு ஆணின் வலது உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால், அவன் மிகவும் புத்திசாலி மற்றும் வெற்றிகரமாக தொழிலதிபராகும் திறன் கொண்டவர். அதுவே இடது உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால், அதுவும் புத்திசாலி என்பதை குறிக்கிறது.

கையின் பின்புறத்தில் மச்சம்
கையின் பின்புறத்தில் பள்ளம் உள்ளவர் நல்ல பண மேலாளராக இருப்பார் மற்றும் குடும்பத்தின் பொருளாதார பலத்தை புரிந்து கொள்வார்கள். கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால், அவர் திறமையானவர் மற்றும் வாழ்வில் விரைவில் பதவி உயர்வு பெறும் அதிர்ஷ்டசாலி.



Click it and Unblock the Notifications