For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலட்சுமணனின் மரணத்திற்கு இராமரே எப்படி காரணமாக மாறினார் தெரியுமா?

இராமாயணத்தை பொறுத்தவரை இராமர் மட்டுமின்றி அவரது சகோதரன் இலட்சுமணனும் கடவுளின் அவதாரமாகத்தான் இருந்தார். அவரும் மரணத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

|

இந்து புராணங்களில் கடவுள்கள் அதர்மத்தை அழிக்க பூமியில் மனிதர்களாக பிறந்ததாகக் கூறுகிறது. கடவுளின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான இரு அவதாரங்கள் இராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும். இந்த இரு அவதாரங்களின் சாகசங்கள்தான் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதமாக இருக்கிறது.

How Lord Rama Became The Cause Of Laxmans Death?

இராமரும், கிருஷ்ணரும் கடவுளின் அவதாரங்களாக இருந்தாலும் அவர்கள் பூமியில் மனிதர்களாக பிறந்ததால் மரணத்தை அடைந்துதான் ஆகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. இராமாயணத்தை பொறுத்தவரை இராமர் மட்டுமின்றி அவரது சகோதரன் இலட்சுமணனும் கடவுளின் அவதாரமாகத்தான் இருந்தார். அவரும் மரணத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்த மரணம் இராமரின் மூலம் நேர்ந்தது என்பதுதான் துரதிர்ஷ்டவசமானது. இராமர் எப்படி தனது அன்பு சகோதரன் இலட்சுமணனின் மரணத்திற்கு காரணமானார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீதையின் மரணம்

சீதையின் மரணம்

இராமாயணத்தைப் பற்றி நாம் நன்கு அறிவோம், ஆனால் அதன் சோகமான பல முடிவுகள் பலரும் அறியாத ஒன்றாகும். வால்மீகியின் இராமாயணம் மிகவும் புனிதமான மற்றும் துல்லியமான இந்திய காவியமாக கருதப்படுகிறது. பகவான் இராமரின் மனைவி சீதை மரணத்தைத் தழுவி தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்த பிறகும் இராமாயணத்தின் கதை தொடர்கிறது என்பது பலருக்குத் தெரியாது.

 இராமாயணத்தின் தெரியாத கதைகள்

இராமாயணத்தின் தெரியாத கதைகள்

வால்மீகியின் ராமாயணத்தின் மிக அமைதியான பகுதியாக ‘உத்தர காண்டம்' உள்ளது. இராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட எந்த தொடரிலும், சினிமாவிலும் இதனைப் பற்றி குறிப்பிடவில்லை. இராமர் தனது சகோதரரின் மரணத்திற்கு எப்படி காரணமாக அமைந்தார் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

லவகுசாவின் அயோத்தி வருகை

லவகுசாவின் அயோத்தி வருகை

சீதையின் மரணத்திற்கு பிறகு இராமர் தனது மகன்களான லவா மற்றும் குசாவை அயோத்திக்கு மீண்டும் அழைத்து வந்தார். சீதையைப் போலவே, விஷ்ணுவின் அவதாரமான தனது பிறப்பின் நோக்கம் முடிந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்தார், எனவே அவர் தனது வாழ்க்கையையும் முடித்துக் கொள்ள முடிவு செய்தார்.

MOST READ:முஸ்லீம் ஆண்கள் தங்கம் போடாமல் இருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

இராமர் அனுமனுக்கு இட்ட கட்டளை

இராமர் அனுமனுக்கு இட்ட கட்டளை

அனுமன் மற்றும் இலட்சுமணன் தனது அருகில் இருக்கும் வரை தன்னால் மரணத்தை அடைய முடியாது என்பதை இராமர் நன்கு அறிவார். அதனால் துருவாச முனிவரை தன்னை வந்து சந்திக்கும்படி கோரிக்கை விடுத்தார். தன்னை சந்திக்க வருவதன் நோக்கம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதன்பின் சீதை தனக்கு கொடுத்த பிரியமான மோதிரத்தை ஒரு சிறிய துளை வழியாக பாதாள உலகத்தில் போட்டுவிட்டு அதனை எடுத்து வரும்படி அனுமனுக்கு கட்டளையிட்டார்.

 இலட்சுமணனின் காவல்

இலட்சுமணனின் காவல்

தனது பிரபுவின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அனுமன் தன்னைச் சுருக்கி, சிறிய துளை வழியாக கீழே பறந்து மோதிரத்தை மீட்டெடுக்க சென்றார். இதற்கிடையில், மரணத்தின் கடவுளான எமனிடம் தன்னைப் பார்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் இலட்சுமணனிடம் அரண்மனைக் கதவைக் காக்கும்படி கட்டளையிட்டார். தங்களின் சந்திப்பை யார் தலையிட்டு தொந்தரவு செய்தாலும் அவரைக் கொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார்.

இலட்சுமணனின் இக்கட்டான நிலை

இலட்சுமணனின் இக்கட்டான நிலை

தன்னை பார்க்க வருமாறு முனிவர் துர்வாசரை இராமர் கேட்டுக்கொண்டது இலட்சுமணனுக்கு தெரியாது. எனவே, துர்வாச முனிவர் அரண்மனை வாசலுக்கு வரும்போது, இராமரின் உத்தரவின் பேரில் இலட்சுமணன் துருவாச முனிவரை தடுத்து நிறுத்தினார். இலட்சுமணனின் செயல் துருவாசரை கோபப்படுத்தியது, அதேசமயம் இலட்சுமணனால் இராமரின் கட்டளையைப் பற்றி கூற முடியவில்லை. முழு சூழ்நிலையையும் அறியாமல், இலட்சுமணன் துர்வாச முனிவரை எமனுடனான உரையாடலின் போது யாரும் இராமரை சந்திக்க முடியாது என்பதால் திரும்பி சென்று விட்டு மீண்டும் வருமாறு கேட்டுக்கொண்டார்.

MOST READ:தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா?

 துருவாசரின் கோபம்

துருவாசரின் கோபம்

இலட்சுமணனின் செயலால் ஆத்திரமடைந்த துருவாசர் அயோத்தியை சபிக்க போவதாகவும், அதனால் ஏற்படும் விளைவுகளை இலட்சுமணன் எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார். துருவாசரின் சாபத்திற்கு பயந்து, இலட்சுமணன் அறைக்குள் நுழைந்து முனிவர் துர்வாசாவின் வருகையை இராமருக்கு தெரிவித்தார். இராமர் பின்னர் துர்வாச முனிவரை அழைத்து வரும்படி கட்டளையிடுகிறார், ஆனால் அவரது உத்தரவை நினைவுபடுத்துகிறார், அதன்படி அவரைக் கொல்ல வேண்டும் என்று கூறினார்.

இராமரின் கட்டளை

இராமரின் கட்டளை

கொடுத்த வாக்கை மீறி இராமரின் சந்திப்பை கெடுத்ததற்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார் இலட்சுமணன். தனது சொந்த சகோதரனைக் கொன்றதற்காக ராமர் என்றென்றும் குற்றம் சாட்டப்படுவார் என்ற பயத்தில், இலட்சுமணன் தனது மனைவி ஊர்மிளையிடம் வந்து முழுசூழ்நிலையையும் எடுத்துக்கூறி தனது முடிவைக் கூறினார்.

சரயு நதியில் இலட்சுமணன் மூழ்கினார்

சரயு நதியில் இலட்சுமணன் மூழ்கினார்

இலட்சுமணன் அரசக் கடமைகளில் இருந்து விலகி சரயு நதியில் மூழ்கினார். இதற்கிடையில், இராமர் முனிவர் துர்வாசரின் வழிகாட்டுதலை நாடுகிறார். முனிவர் உங்கள் பிறப்பின் நோக்கம் நிறைவேறி விட்டதால், இராமரும் அவர் சகோதரர் இலட்சுமணனின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

MOST READ:இந்த ராசிகளில் பிறந்தவர்களை புகழ் தேடி வருமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

 இராமரின் மரணம்

இராமரின் மரணம்

அந்த நாளின் பிற்பகுதியில், இராமர் தனது மகன்களான லவன் மற்றும் குஷன் ஆகியோரை வருங்கால அயோத்திய மன்னர்களாக அறிவித்தார். மேலும் அவரது சகோதரர்களான சத்ருகனன் மற்றும் பரதன் ஆகியோருடன் சரயு நதியில் மூழ்கினார். இவ்வாறு இராமாயணத்தில் இருந்த அனைத்து கடவுள்களும் தங்களது அவதாரத்தை முடித்துக் கொண்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Lord Rama Became The Cause Of Laxman's Death?

Read to knoe how Lord Rama became the cause of Laxman's death.
Story first published: Thursday, November 21, 2019, 15:24 [IST]
Desktop Bottom Promotion