For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையில் கிறிஸ்துமஸ் இரவு எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய இரவு கிறிஸ்துமஸ் இரவு என்று அழைக்கப்படுகிறது. அந்த இரவில் கிறிஸ்தவர்கள் ஒரு சில பாரம்பரியமான கொண்டாட்டங்களில் கலந்து கொள்வர்.

|

டிசம்பர் மாதம் வந்தாலே, கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டது என்று அர்த்தம். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கருதப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை விட, கிறிஸ்துமஸ் இரவு மிகவும் முக்கியமானதாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். அது என்ன கிறிஸ்துமஸ் இரவு என்று நீங்கள் கேட்கலாம்.

How Is Christmas Eve Celebrated?

கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய இரவு கிறிஸ்துமஸ் இரவு என்று அழைக்கப்படுகிறது. அந்த இரவில் கிறிஸ்தவர்கள் ஒரு சில பாரம்பரியமான கொண்டாட்டங்களில் கலந்து கொள்வர். கிறிஸ்துமஸ் இரவில் பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

MOST READ: கிறிஸ்துமஸ் இரவு பற்றி பலருக்கு தெரியாத வரலாற்று கதை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சாக்லேட் மற்றும் கிறிஸ்துமஸ் கதைகள்

1. சாக்லேட் மற்றும் கிறிஸ்துமஸ் கதைகள்

கிறிஸ்துமஸ் இரவின் சிறப்பான அம்சம் என்னவென்றால் அந்த இரவில் குடும்பங்கள் ஒன்றுகூடி இனிப்பான சாக்லேட்டுகளை சாப்பிட்டு கிறிஸ்துமஸ் கதைகளைக் கேட்டு மகிழ்வர். குறிப்பாக கிறிஸ்தவ குடும்பங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய கதைகளைச் சொல்லி மகிழ்வர். மற்றவர்கள் பாரம்பரிய கிறிஸ்துமஸ் பாடல்களைக் கேட்டு மகிழ்வர். அந்த பாடல்கள் நாம் நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும், பிறர் மீது மரியாதை வைத்திருக்க வேண்டும் மற்றும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றன.

2. கிறிஸ்துமஸ் பாடல்களை இசைத்தல் (Carolling)

2. கிறிஸ்துமஸ் பாடல்களை இசைத்தல் (Carolling)

கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று கிறிஸ்தவ பாரம்பரியம் கூறுகிறது. அதற்காக குழுவாக இணைந்து கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடியும் அதற்கு ஏற்றார்போல் நடனம் ஆடியும் கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியை அறிவிப்பர். கிறிஸ்துமஸ் இரவில், அருகில் உள்ள வீடுகள் அல்லது அநாதை இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று கிறிஸ்துமஸ் பாடல்களை இசைத்து நடனம் ஆடி கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியினை அறிவிப்பர். இவ்வாறு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி ஆடி மகிழ்வது ஒரு முக்கிய கொண்டாட்ட நிகழ்வாகும்.

3. கிறிஸ்துமஸ் கேக் செய்தல்

3. கிறிஸ்துமஸ் கேக் செய்தல்

கிறிஸ்துமஸ் இனிப்புகள் செய்வதில் நாட்டுக்கு நாடு மற்றும் வீட்டுக்கு வீடு வேறுபாடுகள் உள்ளன. அந்தந்த பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் போன்றவற்றிற்கு ஏற்ப இனிப்புகள் செய்யப்படுகின்றன. எனினும் கிறிஸ்துமஸ் நன்னாளில் தங்களது வீடுகளில் இனிப்புகள் செய்து அவற்றை தங்களைச் சந்திப்பவர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் தமது குடும்பத்தார் போன்றோருக்கு கொடுத்து மகிழ அனைவரும் விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக கிறிஸ்துமஸ் விழாவின் முக்கியமான இனிப்பு பண்டம் என்னவென்றால் அது கிறிஸ்துமஸ் பழ கேக் ஆகும். இந்த கிறிஸ்துமஸ் பழக் கேக்கை கிறிஸ்தவர்கள் அனைவருமே தங்களின் வீடுகளில் செய்து பிறரோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.

4. காலுறைகளில் இனிப்புகளை நிரப்பி தொங்கவிடுதல்

4. காலுறைகளில் இனிப்புகளை நிரப்பி தொங்கவிடுதல்

கிறிஸ்துமஸ் இரவின் மிக முக்கியமான பாரம்பரிய நிகழ்வு என்னவென்றால், காலுறைகளில் இனிப்புகள் அல்லது பரிசுகளை நிரப்பி தொங்கவிடுவதாகும். குறிப்பாக கிறிஸ்துமஸ் இரவு குழந்தைகள் தூங்கும் போது அவர்களுடைய பெற்றோர் காலுறைகளில் இனிப்புகள் அல்லது பரிசுகளை நிரப்பி தொங்கவிடுவர். கிறிஸ்துமஸ் அன்று காலையில் கண்விழித்துப் பார்க்கும் குழந்தைகளுக்கு அந்த காலுறைகளில் நிரப்பப்பட்டிருக்கும் இனிப்புகள் அல்லது பரிசுகள் மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும்.

5. கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கலைமானுக்கு திண்பண்டங்களை வைத்தல்

5. கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கலைமானுக்கு திண்பண்டங்களை வைத்தல்

குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு இரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வந்து பரிசுகளைத் தருவார் என்ற நம்பிக்கை பாரம்பரியமாக உண்டு. அவ்வாறு இரவில் குளிரில் கலைமான் வண்டியில் வரும் கிறிஸ்துமஸ் தாத்தா வெதுவெதுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வீடுகளுக்கு வெளியே பர்பன் விஸ்கி அல்லது பிராண்டியை வைத்திருப்பர். கலைமான் சாப்பிடுவதற்காக கேரட்டை வெளியில் வைப்பர். ஒரு சில குடும்பங்கள் பால் மற்றும் பிஸ்கட்டுகளை வீட்டிற்கு வெளியில் வைப்பர்.

6. ஆலயங்களுக்குச் செல்லுதல்

6. ஆலயங்களுக்குச் செல்லுதல்

கிறிஸ்துமஸ் இரவின் இன்னுமொரு முக்கிய நிகழ்வு ஆலயங்களுக்குச் சென்று கிறிஸ்துமஸ் வழிபாட்டு சடங்குகளில் கலந்து கொள்வதாகும். ஆகவே கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் இரவில் ஆலயத்திற்கு சென்று தங்களின் மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு நன்றி செலுத்துவர். ஒரு சில ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பாடல்களை பாடும் போது மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பதற்காக மக்களுக்கு மெழுகுவர்த்திகள் இலவசமாக வழங்கப்படும்.

7. கிறிஸ்துமஸ் இரவில் சொக்கப்பானை கொளுத்துதல்

7. கிறிஸ்துமஸ் இரவில் சொக்கப்பானை கொளுத்துதல்

ஒரு சில கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் இரவு அன்று சொக்கப்பானை கொளுத்துவதற்கு என்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி வைத்திருக்கின்றனர். அங்கு கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்படும். அப்போது மக்களுக்கு வெதுவெதுப்பான பானங்கள் வழங்கப்படும். அதனால் மக்கள் குளிரில் நடுங்கிவிடாமல் இதமாக இருப்பர்.

8. உணவகங்களுக்குச் செல்லுதல்

8. உணவகங்களுக்குச் செல்லுதல்

எல்லா குடும்பங்களிலும் கிறிஸ்துமஸ் விருந்து சமைக்கப்படுவதில்லை. ஒரு சிலர் கிறிஸ்துமஸ் இரவு அன்று சமையல் அறையில் நீண்ட நேரத்தை செலவிடுவதைவிட குடும்பத்தோடு தங்கள் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம் என்று விரும்புவர். எனவே அவர்கள் வெளியிலிருந்து உணவை வரவைப்பர் அல்லது உணவகங்களுக்குச் சென்று கிறிஸ்துமஸ் இரவைக் கொண்டாடுவர்.

9. கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்களைப் பார்த்தல்

9. கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்களைப் பார்த்தல்

ஒரு சிலர் கிறிஸ்துமஸ் இரவு அன்று கிறிஸ்துமஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்களைப் பார்த்து மகிழ்வர்.

10. கிறிஸ்துமஸ் இரவு விருந்தில் கலந்து கொள்ளுதல்

10. கிறிஸ்துமஸ் இரவு விருந்தில் கலந்து கொள்ளுதல்

பொதுவாக பலர் கிறிஸ்துமஸ் இரவு விருந்துகளில் கலந்து கொள்வர். குறிப்பாக பெரியவர்கள் மதுவுடன் கூடிய விருந்துகளில் கலந்து கொள்வர். சிறுவர்கள் கிறிஸ்துமஸ் சாக்லெட்டுகளை உண்டு மகிழ்வர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Is Christmas Eve Celebrated?

Christmas 2020: Did you know how is christmas eve celebrated? Read on...
Story first published: Wednesday, December 9, 2020, 15:24 [IST]
Desktop Bottom Promotion