Just In
- 4 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 6 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 11 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 12 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- News
அக்னி பாத் திட்டத்தை சும்மா ஒன்றும் எதிர்க்கவில்லை! இது தான் காரணம்! காங்கிரஸ் தந்த டீடெயில்!
- Finance
பணத்தை அச்சடிக்க 5000 கோடி செலவு செய்த ஆர்பிஐ.. பணமதிப்பிழப்புக்கு பின் இதுதான் அதிகம்..!
- Movies
‘தாய்க்கிழவி’..வில்லன் டயலாக்கை பாட்டாக்கி இப்படியா பண்ணுவது..தனுஷுக்கு கமல் கட்சி நிர்வாகி கண்டனம்
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
2022-ல் உங்கள் நிதிநிலை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க இந்த ஈஸியான வேலையை செய்யுங்க போதும்!
உங்கள் வாழ்க்கை வாய்ப்புகளை பகுப்பாய்வு செய்யும்போது உங்கள் நிதியைக் கையாள்வது ஒரு பெரிய விஷயமாகும். பண நெருக்கடிகளை எதிர்த்துப் போராட நீங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக உங்கள் வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியும். இப்போது 2022 வந்துவிட்டதால், மக்கள் தங்கள் நிதி வாழ்க்கையைப் பகுப்பாய்வு செய்து, மோசமான நிலைக்குத் தயாரா இல்லையா என்பதை மதிப்பிடுகின்றனர்.
பெரும்பாலான மக்களுக்குத் தெரியாதது என்னவென்றால், நிதிரீதியாக நிலையானதாக மாறுவதற்கான முதல் படி, உங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதுதான். 2022 ஆம் ஆண்டில் உங்கள் நிதி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாக இருங்கள்
நீங்கள் இப்போது இருப்பதை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் மற்றும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்போதும் இருக்கும். அது மனித இயல்பு. ஆனால் கடைசியாக அந்த பசியை அடக்கும்போது, பணத்தின் பின்னால் ஓடுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்களிடம் ஏற்கனவே உள்ளதைக் கொண்டு திருப்தியடையத் தொடங்குங்கள்.

உங்கள் தேவைகளில் கவனம் செலுத்துங்கள்
vமற்றவர்களின் செல்வத்தைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு அதிக பணம் தேவைப்படும் எண்ணம் தூண்டப்படுகிறது. உங்களிடம் உள்ளதை வைத்து திருப்தி அடையாதபோது போட்டியிட வேண்டிய தேவையும் எழுகிறது. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, உங்களுக்கு எது மிகவும் முக்கியமானது என்பதை பகுப்பாய்வு செய்யுங்கள்.

நேரத்தை சேமியுங்கள்
உங்கள் வாழ்க்கையில் அதிக மதிப்புள்ள விஷயங்களைச் செய்ய அதைப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு நேரத்தை வீணடிப்பது எளிமையான பொறுப்பற்ற செயலாகும். 2022 ஆம் ஆண்டில் நீங்கள் நிதி ரீதியாக ஸ்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க திட்டமிட்டிருந்தால், உங்கள் நேரத்தைப் பயன்படுத்தவும், இடைவிடாமல் வேலை செய்யவும் பயன்படுத்துங்கள். நேரத்தை சேமிப்பதே உங்களின் பாதி வெற்றிக்கு வழிவகுக்கும்.

உங்கள் அன்புக்குரியவர்களுடன் சண்டைகளில் ஈடுபடாதீர்கள்
மன அழுத்தம் நிறைந்த நிதி நிலைமைகள் தம்பதியரின் மோசமான நிலையை வெளிப்படுத்தலாம். மேலும் இது பல மோசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் இங்குதான் நீங்கள் இதனைத் தடுக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மோதலில் ஈடுபடாதீர்கள், ஏனெனில் அது உங்கள் நிதியை அழிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

உங்கள் சாதனைகளை நினைவுகூறுங்கள்
நீங்கள் தாழ்வாக உணரும் போதெல்லாம், நீங்கள் கடந்த காலத்தில் செய்த சாதனைகளை நினைவூட்டுங்கள். சிறப்பாகவும், கடினமாகவும் உழைக்கவும், மேலும் வெற்றிக்காக பாடுபடவும் இது உங்களை ஊக்குவிக்கும். எந்தவிதத்திலும் நீங்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதை உங்களின் சாதனைகள் எப்போதும் உங்களுக்கு நினைவூட்டும்.