For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரியார் மண்ணில் காந்தி கோவில்... எப்படி வந்துச்சு... யார் கட்டுனாங்கனு தெரியுமா?

By Mahibala
|

காந்தியின் பெயரில் எல்லா ஊரிலும் தெருக்களும் ஏரியாக்களும் இருப்பதைப் பார்த்திருப்போம். அதிலும் குறிப்பாக, அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிக்கு காந்தியின் பெயரைச் சூட்டியிருப்பார்கள். நகரங்களின் பல சாலைகளுக்கு அவர் சூட்டப்பட்டிருக்கும்.

Gandhiji

பல கல்வி நிலையங்கள், அறக்கட்டளைகள், மணி மண்டபங்கள் ஆகியவை இருக்கும். அது எல்லோருக்கும் தெரியும். அதேபோல் ஈரோட்டில் காந்தியின் பெயரில் ஒரு கோவில் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தமிழ்நாட்டில்...

தமிழ்நாட்டில்...

இந்த தேசத்தின் தந்தை என்று சொல்லப்படுகின்ற காந்திக்கு நாடு முழுவதிலும் பல்வேறு மணிமண்டபங்கள் இருக்கின்றன. ஆனால் காந்திக்கு முதலில் கோவில் கட்டியது அவர் பிறந்த ஊரில் கூட இல்லை. நம்முடைய தமிழ்நாட்டில் தான்.

MOST READ: பொலீரோ வாகனத்தை ஆண்கள் உதவியின்றி தூக்கி நிறுத்தும் சூப்பர் ராணுவப் பெண்கள்... பாருங்க அத...

பெரியார் பூமி

பெரியார் பூமி

அதிலும் காந்திக்கு எந்த ஊரில் கோவில் இருக்கிறது என்று தெரியுமா?... காந்தியின் கொள்கைக்கு எதிராக நின்ற, எதிர்த்துப் போராடிய பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு மாவட்டத்தில் கவுந்தபாடி என்ற ஊருக்கு அருகில் உள்ள சொந்தம்பாளையம் என்னும் கிராமத்தில் தான் காந்திக்குக் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

எப்போது?

எப்போது?

இந்த காந்தி கோவில் ஒன்றும் புதுிதாக இன்று நேற்று கட்டப்பட்டது அல்லஃ கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டது. 1996 ஆம் இந்த கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு குடமுழுக்கு விழாவும் எடுக்கப்பட்டது. இந்த கோவில் 1996 ஆம் ஆண்டே கிட்டதட்ட 10 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

சிலைகள்

சிலைகள்

அந்த கோவிலின் உள்ளே மூலவர், உற்சவர் போல இரண்டு பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் காந்தியின் சிலையும் மற்றொன்றில் அன்னை கஸ்தூரிபாய் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

MOST READ: மகளின் சடலத்தை தந்தை தோளில் சுமந்து சென்ற கொடூரம்...

பூஜைகள்

பூஜைகள்

இந்த கோவிலில் தினமும் மூன்று கால பூஜையும் தவறாமல் நடத்தப்படுகிறது. காலை 9 மணிக்கும் மதியம் 12 மணிக்கும் மாலை 6 மணிக்கும் பூஜை தவறாமல் நடக்கிறது. இந்த கோவிலுக்கென தனி அர்ச்சகரும் இருக்கிறார். இவர்களே காந்தி பற்றியும் கஸ்தூரிபாய் பற்றியும் தோத்திரப் பாடல்களைத் தயார் செய்து அச்சிட்டு வைத்திருக்கிறார்கள். காந்தி சிலை முன் அவருடைய பாடலையும் அன்னையின் முன் அவருடைய பாடலையும் பாடி அர்ச்சனை செய்கிறார்கள்.

காந்தி ஜெயந்தி திருவிழா

காந்தி ஜெயந்தி திருவிழா

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று இங்கு மிகப்பெரும் திருவிழா கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். கோவிலில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றுக்கு சென்று 10 குடங்களில் நீர் எடுத்து வருவார்கள்.

பொங்கல்

பொங்கல்

மறுநாள் அக்டோபர் 2-ம் தேதி காலை 6.00 மணியிலிருந்து 8.00 மணிக்குள் காந்தி மற்றும் கஸ்துரிபாய் ஆகிய இருவருடைய சிலைகளுக்கும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜைகள் முடிந்ததும் பெண்கள் ஊர்த் திருவிழாவைப் போல பொங்கல் வைப்பார்கள். அதன் பின்னர் காந்திய சிந்தனை பற்றிய சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

MOST READ: உங்க அந்தரங்க வாழ்க்கை பற்றி கனவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

கட்டியவர் யார்?

கட்டியவர் யார்?

காந்தி கோவிலைப் பற்றி இவ்வளவு விஷயங்களைப் பார்த்தோமே, இந்த கோவிலைக் கட்டியவர் யார் என்று தெரியுமா?... கேட்டால் கொஞ்சம் அதிர்ச்சியடைவீர்கள். இந்த காந்தி கோவில் குறிப்பாக ஈரோட்டில் உருவாகக் காரணமாக இருந்தவர் அந்த கிராமத்தில் உள்ள வையாபுரி என்னும் முதியவர் ஆவார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர் காந்தியை கடவுளாகவே நினைத்து இந்த கோவிலைக் கட்டியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Histroy Of Gandhiji Temple In Erode

In India and abroad there were many memorials erected in the name of Gandhiji. But in Tamil Nadu, there is a temple for Gandhiji. The temple of Gandhiji is in Erode district. Goundampalayam is the village having temple for Gandhiji.
Story first published: Tuesday, October 1, 2019, 18:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more